பள்ளிகள் திறந்தாச்சு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியவை ,,

Posted By:


பள்ளிகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் முன் பெற்றோர்கள் பள்ளியின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அந்த காலத்தில் பள்ளியென்பது குருகுல கல்வியாக இருந்தது . மாடர்ன் பள்ளியானது 1830 மெக்காலே அறிக்கையின்படி மாற்றப்பட்டது. சுதந்திரத்திற்க்குப் பின் முதல் கல்வி அமைச்சர் மௌலான அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வழிகாட்டலின் படி பள்ளிகளில் பாடங்களில் முன்னேற்றப்பாதை தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பல்வேறு மாற்றங்களில் கல்வி முறையானது கண்டுவிட்டது. இந்த நவீன கணினி காலத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், பள்ளிகள் சமுதாயம் அது சார்ந்த துறைகள் அனைத்தின் தேவையும் அவர்களது இலக்கின் பயணம் விளக்கங்களுக்கப்பார்ப்பட்டு செல்கின்றன .

 

பள்ளி சேர்க்கையில் குழந்தைகள் தேவைகள் மற்றும் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை


பெற்றோர்களே பிள்ளைகளுககான பருவ காலங்களுக்கேற்ப சீரூடைகளை வாங்க வேண்டும். காலணிகள், புத்தகங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, லன்ஜ் பாக்ஸ், வாட்டர் பாட்டில்கள் அனைத்தும் முடிந்த அளவு பிளாஸ்டிக் டப்பர் வேர் தவிர்த்து மெட்டல் வகை தயாரிப்புகளை பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கவும் . பெற்றோர்களே பிள்ளைகளை பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்று வளர்ப்பதை விடுத்து ஒவ்வொரு பொருளையும் கையாள கற்றுகொடுங்கள் சுயமாக சிறுவயது முதல் சிந்திக்க செயல்பட அடித்தளமிடுங்கள். பள்ளி வயதிலே சுற்று சூழல் சம்மந்தப்பட்ட விழிப்புண்ர்வு கொடுங்கள் பிளாஸ்டிக் கூடைகள் தவிர்த்து மூங்கில் கூடைகள், துணி பைகள் லன்ஜ் கவராக பயன்படுத்துங்கள், டவல்கள் பருவ காலங்களுக்கேற்ப மாற்றிக் கொடுக்கவும் . மேலும் காலணிகளை அணிவது மாற்றுவது சரி செய்வது அனைத்தும் கற்றுகொடுக்கவும் .

சிறப்பு வகுப்புகளுக்கான அட்டவனைகள் நீங்களே தயார் செய்ய வேண்டும் பிள்ளைகளுக்கு படிப்புகள் மட்டும் பத்தாது அத்துடன் ஏதேனும் ஒரு கலையை அவர்கள் கற்றுக்கொள்ள வழிவகுக்க வேண்டும்.  பெண் பிள்ளைகளானால் நிச்சயம் தற்காப்பு கலைகள் பள்ளியிலே அல்லது உங்கள் பகுதிகளில் கற்றுகொடுங்கள் . சுய சிந்தனை வளர்க்க ஓவிய கதைகளுடன் இணைந்த வண்ணங்கள் தீட்ட்   புத்தகங்கள்  பரிசளிக்க வேண்டும். அவர்களிடம் பெற்றோர்கள் விளக்கம் தர வேண்டும் .

பள்ளி சேர்க்கையில் குழந்தைகள் தேவைகள் மற்றும் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை


யோகா பழக்கப்படுத்துங்கள் அது உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் மிகப் பெரிய வரமாகும் . யோக முத்திரைகளை பிள்ளைகளுக்கு சொல்லிகொடுங்கள் யோக முத்திரைகள் உடைய புத்தகங்கள் வாங்கி பெற்றோர்களான நீங்களே குழந்தைகளுக்கு வழிகாட்டியாக முன்மொழிந்து செய்ய வேண்டும்.  அப்போதுதான் மாணவப் பருவம் அதனை ஆர்வத்துடன் வாழ்வில் பழக்கப்படுத்தும் .

நான்கு மொழிகள் குறைந்த பட்சம் கற்க வேண்டும். பிள்ளைகளுக்கு தாய் மொழி அறிவை சரியாக பேச  எழுத பழக்கப்படுத்துங்கள் . குழந்தைகளுக்கு பனிரெண்டு வயது வரை எதை படித்தாலும் கிரகிக்கும் சக்தி அதிகரிக்கும் .

 

பள்ளி சேர்க்கையில் குழந்தைகள் தேவைகள் மற்றும் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

 

"ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடிவிளையாடு பாப்பா "


பாரதியின் வரிகள் நினைவில் கொண்டு பெற்றோர்கள் பிள்ளைகளை ஓடிவிளையாட அனுமதியுங்கள். அவர்களுக்கு கூடி விளையாட கற்றுகொடுங்கள் , நல்ல சிந்தனையை மனதில் விதைத்துவிடுங்கள் விதைத்த சிந்தனையை வளர்த்துவிடுங்கள் , பெற்றோர்களான உங்களுக்கு ஆயிரம் வேலைப் பளு இருக்கலாம் , இருப்பினும் உங்கள் முதல் வேலை பிள்ளைகளை கருத்துடன் வளர்ப்பதாகும் .

English summary
here article mentioned about parents responsible for the students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia