சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் (CICT) காலியாக உள்ள பதிவாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.39 ஆயிரம் வரையில் ஊதியம் வழங்கப்பட உள்ள இப்பணியிடத்திற்கு முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை (CICT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பதிவாளர்
கல்வித்தகுதி:-
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், Administrative experience பணியில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் http://www.cict.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தைத் தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ், ஈ.சி.ஆர் இணைப்பு சாலை, பெரும்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600100
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.cict.in என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












