12-ம் வகுப்பு படித்துள்ளீர்களா... கவலை வேண்டாம்..இருக்கு அரசு வேலை...!!

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் (TNAHD) காலியாக உள்ள வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2023/12/2023121578.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை (Department of Animal Husbandry, Dairying and Fisheries (Tamil Nadu) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய துறையாகும்.

12-ம் வகுப்பு படித்துள்ளீர்களா... கவலை வேண்டாம்..இருக்கு அரசு வேலை...!!

தமிழ்நாடு மாநிலத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயா்த்த இத்துறையின் பங்கு இன்றியமையாததாகும். செயற்கைமுறை கருவூட்டல் பணிக்காக அயலின பொலிக்காளைகளின் மூலம் விந்தணுக்கள் பெறப்பட்டு, அதனை பதப்படுத்தி உறைய வைத்து, மண்டலத்திலுள்ள 163 கால்நடை நிலையங்களில் செயற்கைமுறை கருவூட்டல் பணி நடைபெற்று வருகிறது. கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு உறைவிந்துக் குச்சி 1க்கு ரூ.10- விலையில் இவற்றினை கறவைப் பசுக்களுக்கு செலுத்தி அதன் மூலம் கலப்பின கிடேரிக் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாதம் 1-க்கு சுமார் 3.00 லட்சத்திற்கு மேல் இப்பணி நடைபெற்று வருகிறது. தரமான கலப்பின பசுக்களிலிருந்து தரமான பால் பெறப்படுகிறது. கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் சொந்த நிலத்தில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவன உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவா்களுக்கு இலவச முளைப்புத்திறன் உள்ள தரச்சான்று பெற்ற விதைகள் வழங்கப்படுகிறது. வளா்ந்த புல்லினை வெட்ட மின்சாரத்தினால் இயங்கக் கூடிய புல்வெட்டும் கருவி மானிய விலையில் வாங்கி வழங்கப்படுகிறது.

கால்நடைகளுக்கு தேவையான தாதுஉப்புக்கள் வழங்கப்படுகிறது. அனைத்து கால்நடை நிலையங்களிலும் அனைத்து தடுப்பூசி பணிகளும், சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளுக்காகவும், கால்நடை மேம்பாட்டுக்காகவும் தமிழ்நாட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த கால்நடை பராமரிப்புத்துறையில்தான் தற்போது வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு மொத்தம் 31 வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) காலியாக இருக்கின்றன.

வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) பணியிடங்களுக்கான வயது வரம்பு:

வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ள நபர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயதுத்தகுதி, சலுகை பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) பணியிடங்களுக்கான கல்வித் தகுதி:

இந்த வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த வெட்னரி இன்ஸ்பெக்டர் (Veterinary Inspector) பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் (30.12.2023) அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2023/12/2023121578.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu Animal Husbandry Department (TNAHD) invites applications from Tamil Nadu Govt job seekers. Interested candidates can Apply Offline on or before 30-Dec-2023. For more details please login into https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2023/12/2023121578.pdf.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+