நிறைவான சம்பளத்துடன்... உடலையும் மனதையும் வலுவாக்கும் யோகா படிப்புகள்!

யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. மனம் போன போக்கில் செல்லாமல் சரியான பாதையில் நம்மை வாழவைக்கும் கலை.

By Kani

யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. மனம் போன போக்கில் செல்லாமல் சரியான பாதையில் நம்மை வாழவைக்கும் கலை. உடல், மனம், ஆன்மாவின் நலனுக்கான ஒரு அட்சய பாத்திரம் என்றே கூறலாம். பதஞ்சலி முனிவர்தான் யோகாவின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இந்தியாவின் செறிந்த பாரம்பரியத்தை ஊக்குவிக்கவும், அதன் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்கவும் சிலம்பம், யோகாசனம் போன்ற பாரம்பரிய கலைப்படிப்புகள் இன்றளவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதோடு, கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

யோகா பயிற்சியாளர் ஆவதற்கு, யோகாவில் டிப்ளமோ, அல்லது பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பொதுவாக ஜாதகத்தில் உடம்பை எப்படி வேண்டுமானாலும் வளைக்கும் தன்மை கொண்ட ராகு, கேதுகளின் தொடர்பு மூன்று மற்றும் பதினோராம் பாவத்திற்கு தொடர்பு பெற்றவர்கள் யோகாசனத்தில் புகழ் பெறுவதோடு, சிறந்து விளங்குகிறார்கள்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இவ்வகையான படிப்புகள் வழங்கி வருகின்றன. ஒரு சமூகத்தை மாற்றும் வலிமை யோகா படிப்புக்கு இருக்குமானால் இதை கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு இந்த பணி ஆத்ம திருப்தியை அளிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

படிப்புகள்:

சான்றிதழ், பி.எஸ்சி., எம்.எஸ்சி., முதுகலை டிப்ளமோ, எம்.பில் மற்றும் பிஎச்.டி., ஆகிய படிப்புகளாக யோகா கற்பிக்கப்படுகிறது. படிப்பு முடித்ததும் யோகா பயிற்சியாளர் தவிர பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

வேலை வாய்ப்புகள்:

  • யோகா ஆசிரியர்
  • யோகா சிகிச்சை நிபுணர்
  • உடற்பயிற்சி மையத்தில் யோகா பயிற்சியாளர்
  • யோகா பேராசிரியர்
  • யோகா பயிற்றுவிப்பாளர்
  • யோகா ஆலோசகர்
  • யோகா ஏரோபிக் பயிற்றுவிப்பாளர்
  • யோகா ஆலோசகர்

பெரும்பாலும் வெளிநாடுகளில் யோகா படிப்பு முடித்தவர்களுக்கு அதிகளவில் கைநிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதோடு யோகாவை முழுமையாக கற்றவர்கள் சொந்தமாக யோகா பயிற்சி நிலையங்கள் அமைத்தும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கலாம்.

யோகசன படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

  • சிவானந்தா ஆசிரமம்
  • ராமமணி ஐயங்கார் மெமோரியல் யோகா இன்ஸ்டியூட்
  • பர்மாத் நிகேதன்
  • அஷ்டங்கா இன்ஸ்டியூட்
  • சிவனாந்த யோகா வேதாந்த தன்வந்திரி
  • கோர்டன்டஸ் சேக்சேரியா கலேஜ் ஆப் யோகா கல்சுரல் சிந்தசிஸ்
  • அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
  • தீன தயாள் உபத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், கோரக்பூர்
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
  • ராஞ்சி பல்கலைக்கழகம், ராஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம், சென்னை
  • ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்

பணி வாய்ப்புகள் வழங்கும் நிறுவனம்:

  • அரசு மற்றும் தனியார் பள்ளிகள்
  • யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள்
  • ஈஎஸ்ஐ மருத்துவமனை
  • ஹயாட் ஹோட்டல் கார்ப்பரேஷன்
  • மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி மையம்
  • ஆராய்ச்சி மையங்கள்
  • ரிசார்ட்ஸ்
யோகாவை பயிற்றுவிப்பதால் பணம் ஒருபக்கம் வந்தாலும் மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தும் அற்புதமான செயலை செய்கிறது.

பயன்கள்:

  • மனம், உடலை சுத்தமாக்கும்.
  • மன உளைச்சலை போக்கும்.
  • கோபத்தை தவிர்க்கலாம்.
  • முடிவெடுக்கும் திறன்.
  • வெற்றியை நோக்கி பயணித்தல்

சம்பளம்:

இந்தியாவில், யோகா ஆசிரியரின் ஊதியம் மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை.

வெளிநாட்டில்,இந்த வகையான படிப்புகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பாதிக்கும் இடம், துறை, நிறுவனம், கல்வி, போன்ற காரணிகளை பொறுத்து ரூ.1 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். கல்வித் தகுதியை தவிர, பின்வரும் சில திறமைகள் இருந்தால் கூடுதல் தகுதியாகும்.

தனித்திறமைகள்:

  • கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்
  • இன்டெர்பெர்ஷனல் ஸ்கில்ஸ்
  • யோகா பயில ஊக்குவிக்கும் திறன்
  • வலுவான மன உறுதி
  • தெளிவான மனநிலை

இது போன்ற பல்வேறு திறமைகளை பெறும்பட்சத்தில் உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானலும் பணியாற்றலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Interested in Yoga but not sure where to start, looking for information about career opportunities in this field?…… So this article is a must read for you.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X