10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் டி.பி.ஐ வளாகத்தில் வெளியாகிறது...!

Posted By:

சென்னை : 10லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட உள்ளது.

மார்ச் 8ந் தேதி முதல் 30ந் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் முதல் பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் படி மாணவர்களின் ரேங்க் பட்டியல் மற்றும் மாவட்ட வாரியான மதிப்பெண் பட்டியல் ஆகியவைகள் வெளியிடப்படுவதில்லை. மாணவ மாணவியர்களுக்கு கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் டி.பி.ஐ வளாகத்தில் வெளியாகிறது...!

தேர்வு முடிவு வெளியாகிய உடனே மாணவ மாணவியர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அவர்களின் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் ஏற்கனவே மாணவ மாணவியர்களிடம் இருந்து செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த நம்பருக்கு தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

இன்று காலை வெளியாகும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி வருடம் மற்றும் மாதத்தினை பதிவு செய்து மதிப்பெண்களை கீழே உள்ள இணையதள முகவரியில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 25.05.2017ந் தேதிமுதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

19.05.2017ந் தேதி முதல் 22.05.2017ந் தேதி மாலை 5.45 வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையம் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு வருகை புரிய இயலாதவர்களுக்கும் ஜூன் மாத இறுதியில் சிறப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்களுக்கு ரூ. 305/- மற்றப்பாடங்களுக்கு ரூ. 205/- கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

English summary
10th public exam results will be released today. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in Go to websites and check out the results.
Please Wait while comments are loading...