சென்னையின் அடையாளமாகத் திகழும் லயோலா கல்லூரி...!!

சென்னை நகரின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது லயோலா கல்லூரி என்றால் அது மிகையல்ல. ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியதோடு, ஏராளமான ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களையும் உருவாக்கி பீடு நடை போட்டு வருகிறது லயோலா கல்லூரி. விரைவில் (2025-ம் ஆண்டு) இந்தக் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. கல்லூரி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://loyolacollege.edu/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

லயோலா கல்லூரி, தமிழகத்தின் தலைநகர் சென்னை மையத்தில் அமைந்துள்ளது. கிறிஸ்தவ அமைப்பால் மிகச் சிறப்பாக நடத்தப்படும் ஒரு கல்வி நிறுவனமாக லயோலா கல்லூரி அமைந்துள்ளது. மேலும், நாட்டின் சிறப்புமிக்க, மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கல்லூரியில் கலை, அறிவியல்,வணிகம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் இங்கு மிகச் சிறந்த முறையில் கற்றுத் தரப்படுகின்றன.

சென்னையின் அடையாளமாகத் திகழும் லயோலா கல்லூரி...!!

சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இந்தக் கல்வி நிறுவனம் பின்னர், தன்னாட்சி (அட்டானமஸ்) பெற்ற கல்வி நிறுவனமாக 1978-ம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரி 1925-ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஜெசுட், அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் ஆகியோரால் துவக்கப்பட்டது. இந்த முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் இருந்த கிறிஸ்தவ அமைப்பினர் சிலர் பிரான்சிஸ் பெட்ரமுக்கு துணையாக இருந்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன், முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் அரவிந்த சாமி, அருண் விஜய், சூர்யா சிவகுமார், விக்ரம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்த், , திரை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, நடிகர் எஸ். ஜே. சூர்யா, மகேஷ் பாபு, ஜெயம் ரவி, விஷால் ரெட்டி, விஷ்ணுவர்தன், விஜய் வசந்த், சிபிராஜ், திரை இசையமைப்பாளர் டி..இமான், நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோரும் லயோலா கல்லூரியில் பயின்றவர்கள் தான்.

இதுதவிர ஏராளமான நடிகர், நடிகைகள் இந்தக் கல்லூரியில் பயின்று இன்று திரைத்துறையில் கொடி கட்டிப் பறக்கின்றனர்.

2022-ம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை வெளியிடப்பட்டது. அதில் லயோலா கல்லூரி 71.00 மதிப்பெண்களுடன் 100 கல்லூரிகளின் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது .

லயோலா கல்லூரி பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி, எம்.ஏ., எம்.எஸ்சி, எம்.காம் படிப்பு களுடன் பிஎச்.டி. படிப்புகளையும் வழங்கி வருகிறது. இந்தக் கல்லூரி சென்னை நுங்கம்பாக்கத்தில் 99 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்து உள்ளது . இந்த வளாகத்தில் மரங்கள் நிறைந்த பாதைகள், கல்விக் கட்டிடங்கள், 1930-ம் ஆண்டுக்கு முந்தைய செங்குத்தான கோதிக் தேவாலயம் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி மைதானங்கள் அழகுற அமைந்து உள்ளன.

லயோலா கல்லூரி தேசிய தரமதிப்பீடு அங்கீகார கவுன்சிலின் (NAAC) ஏ பிளஸ் (A+) அங்கீகாரத்துடன் அமைந்துள்ளது கல்லூரியாகும்.

2006-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மூலம் வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1 கோடி) வழங்கப்பட்டது . மேலும் 2014-ம் ஆண்டில் "சிறந்த கல்லூரி" என்ற சான்றிதழை லயோலா கல்லூரிக்கு யுஜிசி அளித்துள்ளது.

லயோலா கல்லூரியின் சார்பில் தற்போது லயோலா கல்வியியல் கல்லூரி,
லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், சர்வதேச திட்டத்திற்கான மையம், பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம், தொழில் வளர்ச்சிக்கான இக்னேஷியன் நிறுவனம், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுடன் உரையாடல்களுக்கான நிறுவனம் (சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி நிறுவனம்),

லயோலா - கணிதம் மற்றும் கணினி அறிவியல் ரேசின் ஆராய்ச்சி நிறுவனம்,
லயோலா ICAM பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கான லயோலா நிறுவனம், லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிரான்டியர் எனர்ஜி, லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பீப்பிள் ஸ்டடீஸ்,

லயோலா சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், லயோலா தனிநபர் மேம்பாட்டு நிறுவனம், லயோலா தொழிற்கல்வி நிறுவனம் ஆகிய கலவி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது.
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் லயோலைட்ஸ் என்றும் அழைக்கப்படுபவர்கள் சட்டம், அரசியல், சிவில் சர்வீசஸ், அறிவியல், கல்வி, வணிகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகளில் பங்களிப்பாளர்களாக இருந்து வருகின்றனர்.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் 1990-ம் ஆண்டு ரெவரென்ட் ஃபாதர் லாரன் சுந்தரம் எஸ்ஜே (Rev.Fr.Lawrence Sundaram SJ) காலத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தற்போது 34,000-த்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்த சங்கத்தில் உள்ளனர். லயோலா முன்னாள் மாணவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை "நட்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கல்லூரி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://loyolacollege.edu/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

நேரில் தொடர்பு கொள்ள Loyola College, PB 3301, 01, Sterling Road,
Nungambakkam, Chennai - 600 034 என்ற முகவரிக்குச் செல்லலாம்.

கூடுதல் தகவல்களுக்கு Tel: +91 - 44 - 28178291/292/293
Mobile: +91 - 9344527381 / 7010363566
Fax: +91 - 44 - 28175566 என்ற தொலைபேசி எண்களையும்,
[email protected] என்ற இ-மெயில் முகவரியையும் தொடர்புகொள்ளலாம்.
விரைவில் நூற்றாண்டைக் கொண்டாட உள்ளது இந்தக் கல்லூரி. வரும் 2025-ல் இந்தக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Loyola College is a private Catholic higher education institution run by the Society of Jesus in Chennai, Tamil Nadu, India. It was founded in 1925 by the French Jesuit priest, Francis Bertram, along with other European Jesuits. It is an autonomous Jesuit college affiliated with the University of Madras. For more details please log on into https://loyolacollege.edu/
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+