ஆரம்பம்.. எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி.. பலத்த பாதுகாப்புடன்!

Posted By:

சென்னை : 10ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி பல்வேறு பாதுகாப்புகளுடன் ஆரம்பமானது.

பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் விடைத்தாள் திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆரம்பம்.. எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி..  பலத்த பாதுகாப்புடன்!

விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும்
ஏராளமான ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கலந்து கொண்டு விடைத்தாள் திருத்தும் பணியினை செய்து வருகின்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணியினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பமாகி நடந்து வருகிறது. 12ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 5ம் தேதி ஆரம்பமாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 19ம் தேதி வெளியிடப்படும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 12ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

English summary
10th std exam finished on 29/03/2017. The paper corrections work began with security. Numerous teachers are involved in the paper corrections.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia