மருத்துவ மேல் படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத் தேர்வு- சென்னையில் நடக்கிறது

Posted By:

சென்னை, பிப்.26: மருத்துவ மேற்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 1ம் தேதி சென்னையில் நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மருத்துவ மேல் படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத் தேர்வு- சென்னையில் நடக்கிறது

அவற்றில் உள்ள 595 இடங்களில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது. எம்.டி, எம்.எஸ் படிப்புகளில் மொத்தம் 1100 இடங்கள் உள்ளன. எம்.டி.எஸ் படிப்புக்கு 40 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகில் இந்திய அளவிலான மாணவர் சேர்க்கை இடங்கள் 50 சதவீதம் ஒதுக்கப்படும். அது போக மீதம் உள்ள 595 இடங்களில் தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்த இடங்களில் சேர்வதற்காக 9700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் எம்.எஸ் படிப்புக்காக 8000 பேரும், எம்.டி.எஸ் படிப்புக்கு 1157 பேரும் விண்ணப்பித்துள்னர். ஒதுக்கப்பட்ட இடங்களை விட விண்ணப்பம் அதிகம் வந்துள்ளதால், நுழைவுத் தேர்வு நடத்தி ரேங்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான செயலாளர் சுகுமார் கூறியதாவது: மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 1ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறற்காக 5 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் தகுதியுள்ளவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரம் வேண்டுவோர் www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செயலாளர் சுகுமார் தெரிவித்தார்.

English summary
The entrance exams for Higher Medical educations will be held in March.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia