மறு மதிப்பீடு மூலம் செம கலெக்ஷன் பார்த்த அண்ணா பல்கலை.. ரூ. 133 கோடி வசூலாம்!

Posted By:

சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் செய்த மறுமதிப்பீட்டின் மூலம் ரூ. 133 கோடி வருமானத்தை அண்ணா பல்கலைக் கழகம் ஈட்டியுள்ளது. மறுமதிப்பீடு என்ற பெயரில் மாணவர்களிடம் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு போன்றவற்றிற்கு மட்டுமே ரூ. 700 வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மறுமதிப்பீட்டின் போது நல்ல மார்க் எடுத்தவர்கள் பெயில் ஆகிறார்கள். பெயில் ஆகிறவர்கள் நிறைய மார்க் வாங்குகிறார்கள் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுபவர்கள் சரியா விடைத்தாள்களை திருத்துவதில்லை. ரிவியூவிற்காக மறு மறு மதிப்பீட்டிற்காக ரூ. 3000/- மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செலஞ்சிங் ரிவியூ

தேர்வு முடிவு வந்த பிறகு விடைத்தாளில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பதாக மாணவர்கள் கருதினால் ரூ. 300/- கொடுத்து விடைத்தாள் நகல்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் மறுமதிப்பீட்டிற்கு ரூ. 400/- கொடுத்து அப்ளை செய்ய வேண்டும். அதில் மாணவர்கள் எதிர்ப்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றால் மறுபடியும் செலஞ்சிங் ரிவியூவிற்கு அதாவது மறுமறு மதிப்பீட்டிற்கு ரூ. 3000/. செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டில் மாணவர்களுக்கு அவர்கள் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து கூடுதல் மதிப்பெண் கிடைத்திருந்தால் ரூ.3000/- அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும்.

மாணவர்கள் குற்றச்சாட்டு

காசுக்கு ஆசைப்பட்டு அண்ணாப்பல்கலைக் கழகம் மாணவர்களை மறுமதிப்பீட்டிற்கு தேவையில்லாமல் நிர்ப்பந்திப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மறு மதிப்பீட்டின் மூலம் மாணவர்களிடமிருந்து கணிசமான தொகையை அண்ணா பல்கலைக் கழகம் வசூலித்து விடுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் இதினால் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டின் மூலம் 50 மார்க்கு கூட எடுக்க முடியாத மாணவர்கள் 80 மார்க் கூட வாங்குகிறார்கள். 80 மார்க் எடுத்து மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் மார்க் குறைந்து விடுகின்றனர். விடைத்தாள் திருவத்துவதில் ஒரு நிலையற்ற தன்மை நிலவுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரூ. 133/. கோடி வசூல்

நவம்பர் டிசம்பர் 2012ம் ஆண்டு முதல் ஏப்ரல் மே 2016ம் ஆண்டு வரை கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ. 133 கோடி ரூபாயை அண்ணாப்பல்கலைக் கழகம் மாணவ மாணவியர்களிடமிருந்து மறுமதிப்பீட்டிற்காக பெற்றுள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 16 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். அதில் 10 லட்சம் பேர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கிறார்கள். மாணவர்கள் மத்தியில் விடைத்தாள் திருத்துபவர்கள் சரியாக திருத்துவதிலை மேலும் காசுக்காக அண்ணாப் பல்கலைக் கழகம் மாணவர்களை மறுமதிப்பீட்டிற்கு நிர்ப்பந்திக்கிறது என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் துணை வேந்தர் விளக்கம்

இதுக் குறித்து அண்ணாப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் கலாநிதி மாணவர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது எங்கள் நோக்ககமில்லை. மாணவர்களை தேவையில்லாமல் கஷ்டப்படுத்துவதும் எங்கள் எண்ணமில்லை. நிறைய மாணவர்கள் தேவையில்லாமல் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதால் ஏற்படும் வேலைச்சுமையைக் குறைப்பதற்காகத்தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் 50 லட்சத்திற்கும் மேலான விடைத்தாள்கள் நான்கு ஆண்டுகளில் திருத்த வேண்டியது இருப்பதினால் சிறு சிறு தவறுகள் ஏற்படுவது சாதாரணம் என்று கூறியுள்ளார்.

English summary
Anna University re-evaluates Rs. 133 crore. Students have alleged that students are being robbed of money in the name of revaluation.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia