5 வருட சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.. !

Posted By:

சென்னை : 5 வருட ஆனர்ஸ் சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்ற இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஜூலை 5ந் தேதி நடைபெறும். கட் ஆப் மதிப்பெண்கள் சாதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக வளாகத்தில் சீர்மிகு சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2 ஆயிரத்து 923 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் அவர்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண் ஆகியவை www.tndalu.ac.in என்ற இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

 5 வருட சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.. !

நேற்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த தரவரிசைப் பட்டியல் பிற்பகல் 3.30 மணிக்கு நேற்று வெளியிடப்பட்டது. ஜூலை 5ந் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் கட்ஆப் மதிப்பெண்கள் (சாதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது)

பி.காம், எல்.எல்.பி. (ஆனர்ஸ்)

இதர பிரிவினர் (ஓ.சி) - 99
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 97.750
பிற்படுத்தப்பட்டோர் - 97.250
பழங்குடியினர் - 95
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் - 93.5
ஆதிதிராவிடர் - 90.375
அருந்ததியர் - 79.875

பி.ஏ/பி.பி.ஏ, எல்.எல்.பி. (ஆனர்ஸ்)

இதர பிரிவினர் (ஓ.சி) - 97.875
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 90.489
பிற்படுத்தப்பட்டோர் - 95.375
பழங்குடியினர் - 81.375
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் - 92.250
ஆதிதிராவிடர் - 89.5
அருந்ததியர் - 82.5

பி.சி.ஏ, எல்.எல்.பி (ஆனர்ஸ்)

இதர பிரிவினர் (ஓ.சி) - 92.250
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 81.625
பிற்படுத்தப்பட்டோர் - 82.625
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் - 77.875
ஆதிதிராவிடர் - 76
அருந்ததியர் - 85

English summary
Above article mentioned about 5 years law college rank list and cut off marks released

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia