தமிழக அரசின் கீழ் தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள ஆலோசகர், சமூக பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Consultant, Social Worker, DEO
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DEO பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2021 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- District Consultant - ரூ.35,000
- Social Worker - ரூ.13,000
- Data Entry Operator - ரூ.10,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.12.2021 தேதிக்குள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












