மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.காம், பி.எஸ்சி, எம்.எஸ்சி போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
மேலாண்மை : மத்திய அரசு
பணி : அப்ரண்டிஸ்
கல்வித் தகுதி : பி.காம், பி.எஸ்சி, எம்.எஸ்சி உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வுளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.16,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.gicofindia.com என்ற இணையதளம் மூலம் 25.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.gicofindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












