முன்னணி பொறியியல் கல்லூரிகள் ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்கள் ஏற்கின்றன

செப்டம்பர் 1-6 வரை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட ஜே.இ.இ. பிரதான தேர்வுகளின் முடிவுகள் செப்டம்பர் 11ந்தேதி வாக்கில் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அளவிலான இந்த தேர்வில் தேர்வர்கள் பெற்ற தரவரிசையின் அடிப்படையில் நாடெங்கும் உள்ள 31 என்.ஐ.டி.க்கள், 25 ஐ.ஐ.ஐ.டி.க்கள் மற்றும் 28 சி.எஃப்.டி.ஐ.க்களில் பி.இ./பிடெக் பட்டப்படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். மேலும் ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், ஒடிசா, அரியானா, உத்தராகண்ட், பஞ்சாப், பீகார் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் மற்றும் ஏராளமான தனியார் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜே.இ.இ. பிரதான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கின்றன. ஜே.இ.இ. பிரதான தேர்வு, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்விற்கு தேர்வர்களை தணிக்கை மற்றும் தகுதிபெறும் தேர்வாகவும் திகழ்கிறது. இதன் அடிப்படையில்ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு ஐ.ஐ.டி.களுக்கான சேர்க்கைக்கான தேர்வாக நடத்தப்படுகிறது.

முன்னணி பொறியியல் கல்லூரிகள் ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்கள் ஏற்கின்றன

 

பரிந்துரைக்கப்படுகிறது : [என்.ஐ.டி. ஐ.ஐ.டி. அரசுக் கல்லூரிகளில் ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்கள் தரநிலையின் அடிப்படையில் உங்களுக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து முன்னறிய இந்த சுட்டியை பயன்படுத்துவீர் ஜே.இ.இ மெயின் கல்லூரி முன்னறிவிப்பான்]

தேர்வு முடிந்ததும், தேர்வர்கள் வழக்கமாக முன்னணி பொறியியல் கல்லூரிகளை தேடுவார்கள். என்.ஐ.ஆர்.எஃப் 2020 தரவரிசைப்படி முன்னணி என்.ஐ.டி.க்கள், ஐ.ஐ.ஐ.டிக்கள் மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளின் பட்டியில் மாணவர்கள் வசதிக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

என்.ஐ.ஆர்.எஃப் 2020 தரவரிசைப்படி முன்னணி என்.ஐ.டி.க்கள்

 • நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி
 • நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கர்நாடகா
 • நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி ரூர்கேலா
 • நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி வாரங்கல்
 • நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கேலிகட்

ஜே.இ.இ. பிரதான விடை குறிப்பு; சரியான விடையை கண்டறிவீர்

என்.ஐ.ஆர்.எஃப் 2020 தரவரிசைப்படி முன்னணி ஐ.ஐ.ஐ.டிக்கள்

 • இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஐதராபாத்
 • இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தில்லி
 • இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூரு
 • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குவஹாத்தி
 • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிசைன் அண்ட் மேனுபாக்சர், ஜபல்பூர்

என்.ஐ.ஆர்.எஃப் 2020 தரவரிசைப்படி முன்னணி பொறியியல் கல்லூரிகள்

 • இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை
 • அமிர்தா ஸ்கூல் ஆப் என்ஜினீயரிங், கேரளா
 • ஜாமியா மீலியா இஸ்லாமியா, புது தில்லி
 • தாப்பர் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, பஞ்சாப்
 • அமிட்டி யூனிவர்சிடி, நொய்டா

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவகள் என்.டி.ஏ.வால் செப்டம்பர் 11ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகளுடன் தகுதிபெறும் கட்ஆஃப் மதிப்பெண்களும் வெளியிடப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Top Engineering Colleges Accepting JEE Main 2020 Scores
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X