ஜே.இ.இ. பிரதான விடை குறிப்பு; சரியான விடையை கண்டறிவீர்

தேசிய தேர்வு முகமை (NTA) அனைத்து நுழைவுத் தேர்வுகளும் செப்டம்பர் 6ந்தேதி முடிந்ததும் அநேகமாக செப்டம்பர் 7ந்தேதி அதிகாரபூர்வ ஜே.இ.இ. பிரதான விடைக்குறிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் விடயளிக்க வேண்டிய விடைத்தாளுடன் அதிகாரபூர்வ விடைக்குறிப்புகள் அதன் அதிகாரபூர்வ இணைய தளமான jeemain.nta.nic.in வில் வெளியிடப்படும். தேர்வர்கள் இந்த விடைக்குறிப்புகளை பயன்படுத்தி, தங்களுக்கு கிடைக்கக்கூடிய மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

ஜே.இ.இ. பிரதான விடை குறிப்பு; சரியான விடையை கண்டறிவீர்

 

பரிந்துரைக்கப்படுகிறது : [என்.ஐ.டி. ஐ.ஐ.டி. அரசுக் கல்லூரிகளில் ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்கள் தரநிலையின் அடிப்படையில் உங்களுக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து முன்னறிய இந்த சுட்டியை பயன்படுத்துவீர்.

(ஜே.இ.இ மெயின் கல்லூரி முன்னறிவிப்பான்)

மாணவர்கள் தேர்வு எழுதிய பின் அவர்கள் நினைவில் இருந்து குறிப்பிட்டதன் படி கேள்விகள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் முன்னணி பயிற்சி நிறுவனங்களான ரெசனன்ஸ், கேரீயர்ஸ்360 போன்றவை விடைக்குறிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. என்.டி.ஏ. வெளியிட்டபின் அதிகாரபூர்வ விடைக்குறிப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

அதிகாரபூர்வ ஜே.இ.இ. பிரதான விடைக்குறிப்புகளை தரவிறக்கம் செய்யும் நடைமுறைகள்

  • அதிகாரபூர்வ இணையதளத்திற்கு விஜயம் செய்வீர் (jeemain.nta.nic.in)
  • அங்கு குறிப்பிடப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கி திறந்து கொள்வீர்
  • ஜே.இ.இ. பிரதான விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை நிரப்புவீர்
  • சப்மிட் பொத்தானை சொடுக்கி, சரியான விடைக்குறிப்பினை காண்பீர். அதை தரவிறக்கம் செய்து கொள்வீர்

அதிகாரபூர்வ ஜே.இ.இ. மெயின் 2020 விடைக்குறிப்பில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், அவர்கள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஆட்சேபம் தெரிவிக்கலாம். அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் கேள்வி ஒன்றிற்கு தலா ரூ 1000 வீதம் செலுத்தி, ஆட்சேபிக்கும் கேள்விக்கான சரியான விடைக்கான ஆதாரத்தை தரவேற்றம் செய்யவேண்டும்.

ஜே.இ.இ. மெயின் கட்ஆஃப்

அதிகாரபூர்வ ஜே.இ.இ. மெயின் 2020 விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்கும் நடைமுறை

  • என்.டி.ஏ. இணையதளத்தில் லாகின் செய்து, "Challenge answer Key", என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து லாகின் செய்யவும்.
  • கேள்விக்கான குறியீட்டு எண்ணை தேர்வு செய்து அதற்கான சரியான விடை வாய்ப்புகளை தேர்வு செய்யவும். பின்னர் 'Save your Claim Finally' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆட்சேபனைக்கு ஆதரவான ஆவணங்களை பிடிஎப் வடிவில் தரவேற்றம் செய்யவும்.
  • கையாளும் கட்டணமான ஒரு கேள்விக்கு ரூ 1000 வீதம் நெட்பேங்கிங்/ டெபிட் / கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தவும்.

அனைத்து ஆட்சேபனைகளையும் ஆய்வு செய்து என்.டி.ஏ. இறுதி விடைக்குறிப்புகளை பிடிஎப் வடிவில் வெளியிடும். அதனை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜே.இ.இ பிரதான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11ந்தேதி வாக்கில் வெளியிடப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JEE Main 2020 Answer Key - Check To Know The Right Answer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X