ரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ!

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள 'வேரா' என்ற ரோபோட் இண்டர்வியூ நடத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

By Kani

வெகு விரைவில் நம்ம இன்டெர்வியூவை ரோபோ எடுத்தாலும் ஆச்சிரியப்படுவதிற்கில்லை. அப்புறம் பஸ் லேட், அம்மாவோட கோவிலுக்கு போயிட்டு வந்தேன் சார் அதனாலதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி என்றெல்லாம் கதை செல்ல முடியது.

அட ஆமங்க, ரஷ்யாவில் இப்பவே ஒரு நாளைக்கு 1500 பேரை 'ரோபோட் வேரா' என்றழைக்கப்படும் பெண் ரோபோ இன்டெர்வியூ செய்து வருகிறது.

ரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ!

தொழிற்சாலைக‌ள் முதல் நெடுஞ்சாலைக‌ள் வரை எல்லாவற்றிலும் ஆட்டோமேஷன் நுழைந்துவிட்டது.

இதனால், செலவு குறைவு, வேலை விரைவு போன்ற சாதகங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அது வேலை
வாய்ப்புகளைக் காவு வாங்குமா? என்பதுதான் தற்போதைய மனிதர்களின் பயம்.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான் 'அமேஸான் கோ' என்ற ஒரு செயல்திட்டத்தை அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சம் பணியாளர்கள் இல்லாத ஒரு சூப்பர் மார்க்கெட்.

காக்டெயில் கலப்பதில் தொடங்கி உணவு சப்ளை செய்வது வரை ரோபோக்கள் சாம்ராஜ்யம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

இதே வரிசையில் ஹச்ஆர் எனப்படும் மனித வள மேம்பாட்டு அதிகாரிகளின் வேலைக்கு உலை வைக்கும் விதமாக ரஷ்யாவில் ரோபோக்களே நேர்முகத்தேர்வுக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

என்ன சார் நாங்கதான் இருக்கோம், அப்புறம் ஏன் ரோபோ எல்லாம் என்ற கேள்விக்கு, சார் நீங்க குறைந்த பட்சம் எத்தனை பேரை ஒரு நாளைக்கு இன்டெர்வியூ பண்ண முடியும் என்று கேட்டுள்ளனர். ஒரு 50 பேர் என்று பதில் கிடைத்துள்ளது.

ரோபோட் வேரா ஒரு நாளைக்கு 1500 பேரை நேர்முகத்தேர்வு செய்யும் என்று விடையளித்துள்ளனர். அட ஆமங்க, இப்பவே ரஷ்யாவில் 200 நிறுவனத்தில் ரோபோட் வேரா களமிறங்கியுள்ளதாம்.

2017 ஆம் ஆண்டு பல்வேறு நிறுவனத்தின் உதவியோடு ரோபோட் வேரா வை தயாரித்த அலெக்ஸி கோஸ்டெரேவ் (38),கூறுகையில்,

தற்போது 200 நிறுவனங்களில் ரோபோட் வேரா பயன்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது வேரா 85 சதவிகித விண்ணப்பதாரர்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோபோட் வேரா ஒரு நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை ஆன்லைனில் தேடி எடுப்பதில் இருந்து அவர்களிடம் இமெயில் மூலம் தொடர்பு கொள்வது வரை அனைத்து வேலைகளையும் தானே மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

இது தற்போது ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி வருவதாகவும், ஆண், பெண் விண்ணப்பதாரர்களை குரல் மூலமாக எளிதாக அடையாளம் கண்டு நேர்முகத்தேர்வை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களை தொடர்பு கொள்ளும் போது, ஹாய் மை நேம் இஸ் வேரா, ஐயம் ரோபோ, நீங்கள் தற்போது வேலை தேடிக்கொண்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு எஸ், என்ற விடை கிடைத்தவுடன் நேர்காணலை தொடங்குகிறதாம்.

இதன் தனித்துவம் என்னவென்றால், நமக்கு என்ன திறமையில் ஆட்கள் வேண்டுமோ அவர்களை மட்டும் தேர்ந்தேடுத்து, அவர்களிடம் நேர்காணலை நடத்துகிறது. 1500 பேரிடமும் எந்தவித தயவுதாட்சண்யம் பார்ப்பது இல்லையாம். யாரிடமும் எரிந்து விழாமல் மிக சாமர்த்தியமாக விண்ணப்பிப்பவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறதாம்.

வரும் காலத்தில் மதிய உணவு இடைவேளையில் இரு ரோபாக்கள் நீங்க 8 ஹவர் பேக்ஆப்பா.. இல்லை 24 ஹவர் பேக்ஆப்பா... என்ற கிசுகிசு பேச்சை கேட்க நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

அட அவ்வளவு ஏன்? நம்ம சென்னை செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள உணவகத்தில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

ஹோட்டல் வரைக்கு வந்த ரோபோ ஒரு எட்டு டைட்டில் பார்க் உள்ள வர எவ்வளவு நாள் ஆகப்போகிறது.

வேலை தேடுபவரா நீங்கள்?... எல்லா இன்டெர்வியூவிலும் இந்த 15 விஷயம் கட்டாயம் இருக்கும்!வேலை தேடுபவரா நீங்கள்?... எல்லா இன்டெர்வியூவிலும் இந்த 15 விஷயம் கட்டாயம் இருக்கும்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Your next job interview could be conducted by a Russian robot
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X