ஈமெயில் அனுப்பும் போது நீங்க பண்ற இந்த தவறுகள், உங்களுக்கே ஆப்பு வைக்கலாம்!

Posted By: Gowtham Dhavamani

படிச்சு முடிச்சு வேலை செய்ய ஆரம்பிக்கறப்போ, நெட்வொர்க்கிங்னு ஒரு வார்த்தையை அப்போ அப்போ கேட்டதுண்டு. (இன்ஜினியரிங்ல வர நெட்வொர்க்கிங் இல்ல). நம்ம தொழில்முறை நட்புவட்டத்த பெருசாக்கிகறதுக்கு பேரு நெட்வொர்க்கிங். நமக்கு என்னைக்காவது தேவைன்னா அந்த வட்டம் உதவும்னு நம்பிக்கை.

சரி அந்த வட்டத்த பெருசாகிக்க என்ன செய்யணும்? மெயில் அனுப்பனும்னு சொன்னாங்க. அதனால நானும் ஒவ்வொரு வாரமும், எனக்கு தெரிஞ்ச ரெண்டு நபர்களுக்கு ஒருத்தர இன்னொருத்தருக்கு அறிமுகம் செஞ்சுவெச்சு மெயில் அனுப்பிட்டு இருந்தேன். அப்போ ஒருத்தர் நான் அனுப்பிச்ச மெயில் மூலமா என்ன வெச்சு செஞ்சாரு.

அவுரு ஒரு எழுத்தாளர். அவருக்கு என்னோட நண்பனோட தொடர்பு தகவல்கள அனுப்பீட்டு, உங்களோடத அவனுக்கு அனுப்பி இருக்கேன் சார்னு சொல்லிட்டேன். உடனே பதில் காரசாரமா வந்துச்சு.

தப்பு!

"தப்பு தம்பி. என்ன கேக்காம என்னோட தகவல நீங்க இன்னொருத்தருக்கு கொடுக்கறது தவறுன்னு" கொஞ்சம் புத்தில உரைக்கற மாதிரி அனுப்புனாரு.

அப்போதான் சில விவரங்கள் புரிஞ்சுது. நெட்வொர்க்கிங் செய்யவேண்டியது முக்கியம். ஆனா எல்லாத்தையும் சாதாரண பாதை மூலமா அறிமுகம் செஞ்சுவைக்க நெனைக்கறது முட்டாள்தனம். நான் செஞ்சது அதுதான்.

 

மாட்டிக்க வேணாம்!

நார்மலா உங்க கிட்ட தொழில் ரீதியா ஒருத்தங்களோட அறிமுகத்த இன்னொருத்தர் கேட்டா, ஒரு மெயில ரெண்டு பேர்த்துக்கும் அனுப்பிடுவோம். அதுக்கு அப்பறம் அவுங்க பாத்துக்கட்டும்னு விட்டுருவோம். நமக்கு நேரம் நல்லா இருந்த சிக்கல் இல்ல. ஆனா பல சமயங்கள்ல நாம மாட்டிகிட்டு முழிக்க வேண்டியது இருக்கும்.

நேரம் :

நீங்க மெயில் அனுப்பிச்ச நேரம் அவுங்க அலுவலகத்துல இல்லாம இருக்கலாம். இல்ல அந்த மெயில் அவுங்க அலுவலக மெயில்களுக்கு நடுவுல புதைஞ்சு போய்டலாம். (வாய்ப்பு இருக்கு, எங்க ஆஃபீஸ்ல அவளோ மெயில் வரும் !). அப்போ அனுப்பிச்ச மெயில்கு பதில் கிடைக்க ரொம்ப நேரம், சில சமயம் நாள் ஆகும் நீங்கதான் நடுவுல பலியாடா நிப்பீங்க. உங்கிட்ட கேட்டதுக்கு நேருல போய் பாத்துருக்கலாம்னு கேட்டவங்க யோசிக்க ஆரம்பிப்பாங்க.

பொறுப்பு :

ஒருத்தரோட அனுமதி கேக்காம அவுங்க தொடர்புகொள்ள அவுங்க தகவல்கள வேற ஒருத்தருக்கு நாம குடுத்தா, தேவை இல்லாம பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை அவுங்க மேல சுமத்தர மாதிரி. பதில் சொல்றது மட்டுமில்லாம அவுங்க நேரத்தையும் அதுக்கு ஏத்த மாதிரி மாத்தி அமைக்கணும். அப்போ உங்க மேல தான் பாயுவாங்க.

தப்பிக்க வழி இல்ல:

நீங்க அறிமுகப்படுத்தி வெச்சவங்களுக்கு "இல்லைனு" பதில் சொல்ல வேண்டிய சூழல் வந்தா அது இன்னமும் கஷ்டம். யாருனே தெரியாத ஒருத்தர்கிட்ட மூஞ்சில அடிச்சா மாதிரி "நோ" சொல்லணும். இல்ல உங்க மூலமா "இல்லை " சொல்லிடுங்கன்னு சொல்லி அனுப்பனும். ரெண்டு வகையாவும் நீங்க காலி. உங்க பேரு காலி.

என்ன செய்யணும்?

அதனால ஒருத்தங்களோட தொடர்பு தகவல் (காண்டாக்ட்) கேட்டு வேண்டுகோள் வந்தா, நீங்க செய்யவேண்டியது.

அவுங்க வேண்டுகோள்கு அவசியம் என்ன?
இதனால ரெண்டு பேர்த்துக்கும் கிடைக்கற நன்மைகள் என்ன?
என்ன எதிர்பார்த்து இந்த தகவல கேக்கறாங்க?

இந்த கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சுக்கறது முதல் படி. ஸ்மார்டான ஆளுங்க இந்த கேள்விகளுக்கு பதில சுலபமா கறந்துருவாங்க. இல்ல கேக்கறவரு பலே கில்லாடியா இருந்தா விஷயத்த சொல்லிதான் உதவியே கேப்பாரு. இப்போ இன்னொரு பக்கம் அனுமதி கேக்கணுமே அதுல என்ன கவனிக்கணும்?

நாம உதவி கேக்கபோறது நமக்கு தெரிஞ்சவருக்கா இல்ல நம்ம நண்பர்கள் பட்டியல்ல இருக்கற யாரோ ஒருத்தருக்கா?
இந்த உதவிய நீங்க செய்யறதால ரெண்டுபேர்த்துக்கும் நன்மைகள் நடக்க வாய்ப்பு இருக்கா?
இதுனால உங்களுக்கு சிக்கல் வர வாய்ப்பு இருக்கா?

அனுமதி கேட்டுட்டு, எந்த முறைல தொடர்பு கொள்ளணும்? மெயில் மூலமா? தொலைபேசி மூலமா? சமூக வலைத்தளம் மூலமான்னு கொடுக்கறது புத்திசாலித்தனம்.

நீங்க அறிமுகப்படுத்தி வெக்கற ரெண்டு பேர்த்துக்கும் அதன் மூலமா நன்மைகள் நடந்தா உங்களுக்கு கிடைக்கற மரியாதையே தனியா இருக்கும்.

அதனால நட்பு வட்டத்த சிலை மாதிரி கவனத்தோடு செதுக்குங்க.

 

English summary
wrong-way-to-introduce-people-email

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia