ஒர்க் ஃப்ரம் ஹோம் பண்ணும் மக்களே... இது உங்களுக்கான பகுதி!

By: Gowtham Dhavamani

போன திங்கள்கிழமை, ரெண்டு நகரங்கள்ள இருந்து, 3 காபி ஷாப்புகள்ள இருந்து, என்னோட கார்ல இருந்து ஒரு முழு நாள் வேலைய செய்து முடிச்சேன். இன்னும் சில வாரத்துல பெல்பாஸ்ட்ல இருந்தும், அடுத்து ஹவாய் பயணிக்கும் போதும் வேலை செய்ய முடிவு எடுத்திருக்கேன்.

அலுவலகத்துக்கு பக்கத்துல போகாம வேலை பாக்கறது. கேக்கவே நல்லா இருக்குல்ல?

அப்படிப்பட்ட ஒரு வேலைய பத்தி நீங்க கனவு வெச்சிருந்தா, கண்டிப்பா அது சாத்தியமான்னு ஒரு கேள்வியும் கூடவே மனசுல இருக்கும். மாமியார் பக்கத்துல உக்காந்து குழந்தைங்களை கவனிச்சுட்டு இருக்க , இல்ல ஆத்துக்காரர், காத்துவாங்கிட்டு கார் ஓட்டிட்டு இருக்க, அந்த மாதிரி நேரங்கள்ள நம்மால வேலை செய்ய முடியுமா?

பதில் ரொம்ப சுலபம். கண்டிப்பா முடியும். அதுக்கு கொஞ்சம் திட்டமிடல் வேணும். அவ்ளோதான் !!

முதலல்ல அப்பிடிப்பட்ட வேலைய கண்டுபிடிக்கணும். ஏன்னா பள்ளிக்கூட ஆசிரியையா வேலைக்கு சேர்ந்துட்டு நான் எனக்கு புடிச்ச எடத்துல இருந்து தான் பாடம் எடுப்பேன்னு அடம்புடிச்சா சிரமம். ஆனா நீங்க இணையம் மூலமா பாடம் எடுக்க முடியும். எங்க இருந்து வேணாலும் எடுக்க முடியும். எங்க இருக்கிறவங்களுக்கு வேணாலும் எடுக்க முடியும். அப்போ அப்பிடி பட்ட வேலைய கண்டுபிடிக்கிறது முதல் வேலை.

ஒரு வேளை உங்களுக்கு முதல்லையே அப்பிடி பட்ட வேலை கெடச்சு நீங்க வேலை செஞ்சுட்டு இருந்தா இன்னும் நல்லது. அப்போ நீங்க மனசுல வெச்சுக்க வேண்டிய சில விஷயங்கள் இந்த கட்டுரைல இருந்து உங்களுக்கு கிடைக்கும்.

சரியா தேர்வு செய்யுங்க :

அலுவலகத்தில் இல்லாம வெளியே இருந்து நீங்க செய்யப்போற முதல் வேலைக்கு சரியான இடம் தேர்வு செய்யுங்க. ஏதாச்சும் சாகசம் செய்யணும்னு ஆசைப்படறது தப்பு இல்ல. அதுவும் பல வருஷம் அலுவலகத்துல இருந்து வேலை பாத்தவங்களுக்கு வெளில வந்த உடனே, மலை உச்சில, நடுக்கடல்ல, பாலைவனத்துல இங்கலாம் உக்காந்து வேலை செய்யணும்னு தோணும். அது வழக்கம் தான். ஆனா, கொஞ்சம் யோசிச்சு பாத்தா அங்கலாம் நமக்கு இணையம் கிடைக்கறது அதுவும் நம்ம நாட்டுல கிடைக்கறது கஷ்டம். அப்பறம் எப்பிடி வேலை செய்ய.

அதனால, வெளில இருந்து நீங்க செய்யப்போற முதல் பகுதி நேர வேலைக்கு ஒரு ஹோட்டல், அதுல இலவச வைஃபை இருக்கறதா பாத்துக்குங்க. அப்படியும் இல்லைனா, மிகப்பெரிய நகரத்துல, நெறைய காபி ஷாப்ஸ், அங்க இலவச வைஃபை கிடைக்கற மாதிரி பாத்துக்குங்க. கொஞ்சம் பழக்கம் ஆனதுக்கு அப்பறம் நீங்க நெனச்ச நகரங்களுக்கு போகலாம்.

தயார் ஆகுதல் :

தொலைநிலை வேலை, (அதாங்க ஒர்க் பிரம் ஹோம்) இல்ல எங்க இருந்து வேணாலும் வேலை செய்தலுக்கு நீங்க பழகி இருந்தா கண்டிப்பா எங்க போனாலும் மடிக்கணினிய குழந்தை மாதிரி தூக்கிட்டு போக பழகி இருப்பிங்க. அதோட சார்ஜ்ர், முடிஞ்சா ஹெட் போனும் கூடவே பயணிக்கும். ஆனா மொத்தமா ஒரு வாரம் வரைக்கும் வெளில இருந்து வேலை செய்யணும்னு முடிவு செஞ்சா அதுக்கு இன்னும் கொஞ்சம் தயார் ஆகணும்.

ஹார்ட் டிரைவ் அவசியம்:

பல பெரிய பெரிய கோப்புகள வெச்சு நீங்க வேலை செய்ய வேண்டி இருந்தா, இல்ல வைஃபை இல்லாத இடத்துல இருந்து வேலை செய்ய வேண்டி இருந்தா, அப்போ கண்டிப்பா உங்களுக்கு பெண் டிரைவ் இல்ல ஹார்ட் டிரைவ் அவசியம். அந்த நேரத்துல புதுசா வாங்கவும் கூட முடியாம போகலாம். அதுக்கும் வாய்ப்புகள் இருக்கு.

இரட்டை ஹெட் போன் நலம் :

மழை பெய்யுது. இல்ல நீங்க குளிச்சுட்டே பாட்டு கேக்கணும்னு குளியல் தொட்டில ஹெட் போன் போட்டுட்டா அப்பறம் நேர்காணல் நேரத்துல எல்லா சத்தமும் உங்களுக்கு கேக்கும். தேய்ஞ்சு போன ரேடியோ கதை தான். அதனால எதுக்கும் ஒன்னு ஹெட் போன் அதிகமா வெச்சுக்குங்க.

இணைய வசதி :

சில நேரத்துல நம்ம மடிக்கணினி காரணமே இல்லாம கனெக்ட் ஆகாது. நாமளும் தல கீழா தண்ணி குடிச்சு பாத்தாலும் வைஃபை கூட கோவிச்சுட்டு போன மனைவி மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு நிக்கும். அப்போ உங்கள காப்பாத்த உங்க கைபேசி தான் வந்தாகணும். அதன் மூலமா இணையத்த நீங்க நாடலாம். அதனால எல்லா எடத்துலையும் டவர் கிடைக்கற மாதிரி சிம்கார்டு, உங்க பட்ஜெட்கு ஏத்த இணைய வசதி வாங்கி வைங்க.

சார்ஜ்ர்:

கண்டிப்பா சார்ஜ்ர் மறந்துட்டு வெளியூர் போன அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். அதனால அத எடுத்த வைக்க சொல்ல அவசியம் இல்ல. ஆனா எல்லா பொருளுக்கும் பொருந்தி போற மாதிரி, ஒரு சார்ஜ்ர் வாங்கி வைங்க. முடிஞ்சா ஒரு ஸ்பைக் இருந்த இன்னுமும் நலம்.

கன்வெர்ட்டர்:

முதல் தரம் வெளிநாடு போறவங்க சந்திக்கிற சிக்கல் அந்த சார்ஜிங் வசதி ரூபத்துல வரும். அங்க இருக்கற மின்சார அமைப்பு வேற, நம்ம நாட்டுல நாம பயன் படுத்தற அமைப்பு வேற. அதனால ஒரு கன்வெர்ட்டர் அவசியம்.

மடிக்கணினியை ஒழுங்கு படுத்தி வைத்தல்:

எல்லா குப்பையும் நம்ம அறைல இருக்கற மாதிரி எல்லா கோப்புகளும் நம்ம மடிக்கணினி முதல் பக்கத்துலயே (டெஸ்க்டாப்) வெச்சுருப்போம். கொஞ்சம் சிக்கல் ஆச்சுன்னா, திரும்ப ஆரம்பிக்கும்போது செஞ்ச வேலை பூரா வீனா போய்டும். மொத்தமா வேலையே போற அளவுக்கு போய்டும். அதனால, நீங்க எல்லாத்தையும் தனித்தனியா வேற வேற இடங்கள்ல சேமிச்சு வைக்கறது அவசியம்.

தொழில்நுட்பங்களை சரிபார்த்தல்:

தொலைபேசில "ஸ்கைப்" மூலமா அலுவலகத்துக்கு பேசணும்னா, சரியா அது இயங்குதான்னு பாக்கறது அவசியம். சில நேரங்கள்ல பயணிக்கர போது நம்மால வேலை செய்ய இயலுமான்னு சோதிச்சு பாக்கறதுக்கு அவசியம். அடுத்து தனியா உங்களுக்கு தட்டச்சு செய்ய விசைப்பலகை அவசியமா அதையும் பாக்கணும்.

சரியான இடம் அமைத்தல்:

எப்படி நமக்கு வைஃபை கிடைக்குமா கிடைக்காதான்னு பாக்கணுமோ அப்படி, நாம தங்கற இடத்துல என்ன விதமான வசதிகள் இருக்குன்னு பாத்துக்கறதும் அவசியம். உக்கார நாற்காலி மேஜை இருக்கா, வெளில போனா நமக்கு தேவையான விஷயங்கள் கிடைக்குமா? சாப்பிட எவ்ளோ தூரம் போகணும், இந்த விஷயங்கள் முக்கியம்.

நேர நிர்வாகம் :

நாம போற இடத்துக்கு 2 நாள் பயணிக்கணும்னு அவசியம் வந்தா அந்த நேரத்துல நீங்க வேலைகளை செய்ய முடியாது. அதுக்கு ஏத்த மாதிரி எல்லா அழைப்புகள், நேர்காணல்கள், வேலை சமந்தமா சந்திக்க வேண்டிய நபர்கள். இப்படி எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தி வைக்கணும்.

இன்னொரு விஷயம் நாம போற எடம் வெளிநாடா இருந்தா நேரம் மாறும் (டைம் சோன்) அதையும் கணக்குல எடுத்துக்கணும். இணையம் மூலமா இல்லாம அவுங்கள வேற எந்த விதத்துல அழைக்க முடியும்னு கேட்டு வெச்சுக்கறதும் நல்லது.

பேக்கப் என்ற பாதுகாப்பு கவசம் :

நாம பாதுகாப்பா இருக்க முடியும். முடிஞ்ச அளவுக்கு நம்ம தொலைபேசிக்கும் பாதுகாப்பு வெச்சுருப்போம். ஆனா அதையும் மீறி அது ஒடஞ்சு போனாவோ, தொலைஞ்சு போனாவோ என்ன செய்ய முடியும்? அதனால தேவையான தொலைபேசி எண்களை எழுதி வெச்சுக்கறது நல்லது.

குறிக்கோளை மறவாதீர் :

வேலை செய்யணும். அதே சமயம் சந்தோஷமா பயணிக்கவும் செய்யணும். ஊர் சுத்தி பாக்கணும். கொண்டாடணும். இதுலாம் இங்க இருந்து கெளம்பும்போது மனசுல இருக்கும். ஆனா அங்க போனதுக்கு அப்பறம் வேலை வேலைன்னு ஓட ஆரம்பிப்போம். அது சரி வராது. அதனால வேலை நேரம் எவளோ, நமக்கான நேரம் எவளோன்னு வகுத்து வைங்க. இல்ல உங்க கூட வரவங்க உங்கள சும்மா விடமாட்டாங்க.

நேர மண்டலத்தை பயன்படுத்துதல்:

காலைல 5 மணில இருந்து மதியம் 1 மணி வரைக்கும் ஊர் சுத்தற வேலையும், மதியத்துக்கு மேல உங்க வேலையும் செய்யலாம். டைம் சோன் வேறுபாடு இருந்தா இது சாத்தியம் ஆகும்.

கவனத்துக்கு ஏற்றவாறு வேலையை அமைத்தல்

கடற்கரைல இருந்து நீங்க கணக்கு வழக்குகள் பாக்கணும்னு ஆசை பட்டா நடக்குமா? கவனம் எந்த அளவுக்கு ஒரு வேலைக்கு அவசியமோ அதுக்கு ஏத்தமாதிரி வேலைய அமைச்சுக்கணும்.

மூளைக்கு வேலை கொடுக்கற மாதிரி, சிந்திச்சு எழுதவேண்டிய வேலைகளை பல பேர் இருக்கும் போது பேசிகிட்டே செய்யறது கஷ்டம். அதனால எப்போ நீங்க தனியா இருக்க முடியுமோ அந்த நேரத்துல அந்த வேலைகள வகுத்துக்கணும் .

 

சரியான எல்லைகளை வகுத்தல் :

"எனக்கு இந்த வேலைய முடிக்க 2 மணி நேரம் ஆகும். அது வரைக்கும் நான் ஹோட்டல்ல இருக்கேன்னு" சொல்ல தயங்காதிங்க. அப்பிடி சொல்லிட்டா அதுக்கு அப்பறம் 3 மணிநேரம் உங்க காசுல நீங்க கொண்டாட முடியும். அதுக்கு அந்த எல்லைகளை வகுத்துக்கறது முக்கியம்.

சில நாட்கள் முற்றிலும் விடுமுறை :

பயணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் அதிக நேரம் உழைக்க வேண்டியது இருந்தாலும் பரவால்ல, சில நாட்கள் பயணத்துல எதுவும் பண்ணாம இருக்க முயற்சி செய்யணும். அந்த நாட்கள் உங்களையும் உங்க மனசையும் நிதானப்படுத்தி அடுத்த அடுத்த நாட்களுக்கு உற்சாகமா வேலை செய்ய வைக்கும்.

மனதில் கொள்ள வேண்டியவை :

உங்க வேலைகளை நீங்க சரியாய் முடிச்சு கொடுத்துட்டா, உங்க மேலதிகாரி இல்ல முதலாளி அதே மாதிரி வேலை செய்ய உங்கள அனுமதிக்கலாம். வாய்ப்புகள் இருக்கு. இல்ல சில பிரச்சனைகள் வந்துருச்சு, அப்போ பொறுமையா உங்க அணில இருக்கற மத்த ஆட்கள் கிட்ட சொல்லுங்க. பயணத்த முடிங்க. நேரா அலுவலகத்துக்கு வந்து சேருங்க. எப்படியா இருந்தாலும் பயணம் போன மாதிரி ஆச்சு. மனசுக்கு புத்துணர்ச்சி கெடச்ச மாதிரியும் ஆச்சு.

ஆனா இன்னும் அலுவலகத்த விட்டு வெளில கூட போக முடியலையா? உங்களுக்கு சுதந்திரம் தரக்கூடிய ஒரு வேலைய நீங்க கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு. உடனே ஆரம்பியுங்க.

 

English summary
Work From Anywhere, But Follow These Tips for Betterment in The Result!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia