ஆசிரியர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்..?

எந்தவித கல்வியறிவும் இல்லாமல் முதன்முதலாக பள்ளிகளில் நுழையும் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும், நல்ல பழக்க வழக்கங்களையும் போதித்து அவர்களை மெருகேற்றுவது ஆசிரியர்கள்தான்.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம் பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்றும் உன்னதப் பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட தெய்வீகப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக உள்ளவர்கள்தான் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த ஆசிரியராக தனது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைத்தான் நாம் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள் உட்பட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டும் இல்லாமல் சிறந்த தத்துவமேதையாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

ஆசிரியர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்..?

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். பள்ளிக் குழந்தைகளை அமரவைத்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அதே இடத்திலேயே இருக்கின்றனர். ஆனால் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயின்று நல்ல நிலையை அடைகின்றனர். அதற்குக் காரணமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நாள்தான் ஆசிரியர்தினம்.

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டி புரிய வைக்கிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழவும், படிப்பு, தொழில்களை எதிர்கொள்ளும் கலையை ஆசிரியர்தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர். அதனால் அவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.

அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வித் தொடர்பாக அந்தந்த நாடுகளில் எழுச்சியை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாட்டின் எதிர் காலமானது குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது என்றும் சொல்லப்படுவது வழக்கம். அதைப் போல் மாணவர்களை நல்ல முறையில் உருவாக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஆசிரியர் கைகளில்தான் இருக்கிறது. படித்து முடித்து வேலைக்கு செல்லும் மாணவர்களின் தொழில் மற்றும் வணிகத்தில் வெற்றி பெறும் ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மண்ணாக இருக்கும் மாணவர்களை நன்கு குழைத்து அவர்களுக்கு அறிவை ஊட்டி சிறிது சிறிதாக செதுக்குகின்றனர் ஆசிரியர்கள். சாதாரண மாணவர்களை கூட தங்களின் சீரிய அறிவுத் திறமையாலும், அனுபவங்களின் ஆற்றலாலும் மாணவர்களை தங்கமாக மாற்றி விடுகின்றனர்.

அறிவு குறைந்த மாணவர்களை தங்களது விடா முயற்சியால் மாற்றி தங்கமாக்கும் வித்தை தெரிந்தவர்கள் தான் ஆசிரியர்கள்.

அந்த ஆசிரியர் பணியை தனது இறுதி மூச்சு வரை தொடர்ந்தவர்தான் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் அவர். அவரைப் பார்த்துத்தான் ஆசிரியர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் எழுதப்பட்டது. அதனால் அவரது பிறந்தநாளை செப்டம்பர் 5-ம்தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் என்ற பெயரில் கொண்டாடித் தீர்க்கப்படுகிறது.

எனவே, மாணவச் செல்வங்கள் அனைவரும் பள்ளிக் கல்வி முடித்து உயர் நிலைக்கு சென்ற போது தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களை என்றென்றும் மறக்கக் கூடாது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here goes the complete information about why do we celebrate Teacher's Day on 5 September. These are the essay tips you can use these tips wile writing speeches and essays on Teacher's Day.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+