இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..! சாத்தியமாகுமா?

அமெரிக்காவில் படித்தால் மட்டும்தான் அங்கு பணியாற்ற முடியுமா ? இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உள்ளதா ? அதற்கான நடைமுறைகள் தான் என்ன? வாங்க பார்க்கலாம்.

By Saba

காலங்காலமாகவே, வெளிநாட்டுக் கல்வி, வெளிநாட்டு வேலை என நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பேசிக் கொண்டிருக்க நாமும் வாயைப் பிளந்து அண்டம் மறந்து கேட்டுக் கொண்டிருப்போம். ஒரு காலகட்டத்தில் இதற்கெனவே தனியாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தவர்களும் உண்டு.

இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..! சாத்தியமாகுமா?

அவ்வாறு அமெரிக்காவில் படித்தால் மட்டும்தான் அங்கு பணியாற்ற முடியுமா ? இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உள்ளதா ? அதற்கான நடைமுறைகள் தான் என்ன? வாங்க பார்க்கலாம்.

மிகவும் குறைவு

மிகவும் குறைவு

இந்தியாவில் படித்துவிட்டு அமெரிக்காவில் போன்ற நாடுகளுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாகவே வருவதால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

நம்பிக்கையற்ற அமெரிக்கா

நம்பிக்கையற்ற அமெரிக்கா

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் எளிதாக நம்பி பணியில் அமர்த்துகின்றன. உயர் கல்வி நிலையங்கள் தவிர பிற பல்கலைக் கழகங்களில் படிப்போருக்கு அதிகத் திறன் இருந்தால் மட்டுமே பணி நியமனம் கிடைக்கும் என்பதால் இதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது.

நேரடியாக வேலை
 

நேரடியாக வேலை

அமெரிக்காவிலேயே படிப்பவர்களுக்கு நேரடியாகவே வேலைகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், "வொர்க் விசா" நடைமுறைகளும் இந்தியாவிலிருந்து படித்து வருபவர்களுக்குப் பல சிரமங்களைத் தருவதாக உள்ளது.

ஸ்டூடண்ட் விசா டூ வொர்க் விசா

ஸ்டூடண்ட் விசா டூ வொர்க் விசா

அமெரிக்காவிலேயே படிக்கும் இளைஞர் "ஸ்டூடண்ட் விசா"-வை எளிதாக "வொர்க் விசா"-வாக மாற்றிக்கொள்ள முடியும். அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்பு முடிந்த உடன் வழங்கப்படும் அவகாசத்தில் தங்களுக்கு ஏற்ற நிறுவனத்தில் பணி கிடைக்கப்பெற்றால் வொர்க் விசா எளிதாகக் கிடைத்துவிடும்.

ரொம்ப கஷ்டம்..!

ரொம்ப கஷ்டம்..!

அமெரிக்காவிலேயே படித்த இந்திய மாணவர்களுக்கு வேலையளிப்பது அங்குள்ள நிறுவனங்களுக்கு எளிதான ஒன்றுதான். ஆனால், இந்தியாவில் படித்த ஒருவரை பணியமர்த்துவது அமெரிக்க நிறுவனங்களுக்குக் கடினமான நடைமுறைகளைக் கொண்ட ஒரு பணி என்பதால் இந்த நடைமுறையில் அதிகம் பேர் பயனடைவது இல்லை.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்தியாவிலிருந்து படித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பணிக்குச் செல்ல விரும்பினார் பல நாடுகளிலும் இதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்காகவே அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்கள் சிறப்பு மையங்களை வைத்துள்ளன. குறிப்பாக இந்திய மாணவர்கள் அமெரிக்கா தரத்துக்கான ஒரு ரெஸ்யூம் தயார் செய்ய வேண்டும். பலரும் தோற்பது இதில் தான். நல்ல திறன் இருந்தாலும் அதை சரியாக வெளிப்படுத்தவில்லை என்றால் பணியிட வாய்ப்பு அமையாது.

அமெரிக்காவில் செட்டில் ஆகணுமா?

அமெரிக்காவில் செட்டில் ஆகணுமா?

அமெரிக்காவிலேயே வேலை பார்க்கவேண்டும் என்றால் முதுகலைப் படிப்பை அமெரிக்காவில் படிப்பது தான் சிறப்பு. அதற்கான சலுகைகளும், ஊக்கத் தொகைகளும் கூட அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. முதுகலைப் படிப்பில் அனைத்துத் துறைகளிலும் படிப்புகள் பல பல்கலைக் கழகங்களிலும் உள்ளன. இந்திய மாணவர்களுக்கு
ஏற்றதாக முதுகலைப் படிப்புகளே உள்ளன.

அமெரிக்காவில் படிக்க

அமெரிக்காவில் படிக்க

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் சமீபத்தில் அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த புள்ளிவிவரப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மொத்தம் பயிலும் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்தியர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 75 கதவிகிதம் மாணவர்கள் முதுகலைக் கல்வி பயில்வோர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னவெல்லாம் படிக்கலாம் ?

என்னவெல்லாம் படிக்கலாம் ?

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலேயே அதிக இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல விசா கட்டுப்பாடு முறைகளை இந்தியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு வந்தபோதும் அமெரிக்காவில் படிக்க வேண்டும், வேலை பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்படுபவர்கள் குறையவே இல்லை என்பது தான் உண்மை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Why do Indians choose western universities over Indian universities
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X