டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

நாட்டின் ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோதுதான், முதல் முறையாக நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாட ஆரம்பித்தது. ஆனால், எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது என உங்களுக்குத் தெரியுமா?

By Saba

1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

நாட்டின் ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோதுதான், முதல் முறையாக நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாட ஆரம்பித்தது. ஆனால், எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது என உங்களுக்குத் தெரியுமா?

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

1882ம் ஆண்டு அப்போதைய ஆந்திர மாநிலத்தின் திருத்தணியில் பிறந்தவர் தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவரது தந்தை, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைக் கோவில் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், ராதாகிருஷ்ணன், திருப்பதி, வேலூர் நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையிலுள்ள கிறிஸ்தவ கல்லூரியில் தத்துவவியல் முடித்தார்.

தத்துவவியலில் முதுகலைப் பட்டம்

தத்துவவியலில் முதுகலைப் பட்டம்

தத்துவவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், 'ரவிந்திரநாத் தாகூரின் தத்துவம்' என்னும் பெயரில் 1917ம் ஆண்டு புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, சென்னை பிரசிடென்சி கல்லூரி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியைத் தொடர்ந்தார். அந்த காலகட்டங்களில், மாணவர்களால் மிகவும் மதிக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்டவர் இவர்.

ஆக்ஸ்போர்டு உரை

ஆக்ஸ்போர்டு உரை

தன் முதல் பணியினை சென்னை மாநில கல்லூரியில் துவங்கிய அவர், மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்ததோடு, நீண்ட காலமாக தத்துவ பேராசிரியராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும், சர் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டதோடு தன்னை முழுமையாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், தனக்கான பங்களிப்பைச் செலுத்தி வந்தார்.

இந்தியாவின் மிக உயரிய விருது

இந்தியாவின் மிக உயரிய விருது

1975ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மறைந்தார். இதனைத் தொடர்ந்து, 1984ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஏன் ஆசிரியர் தினம்?

ஏன் ஆசிரியர் தினம்?

டாக்டர் ராதாகிருஷ்ணனின் கற்பிக்கும் திறமை, மாணவர்கள் அவர் மீது கொண்ட அன்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு இவர் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். எனவேதான், இவரது பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Why celebrate Dr Radhakrishnan’s birthday as Teachers’ Day?
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+