அலுவலகத்தில் Target முடிக்கவில்லையா? நோ டென்சன், இத பாருங்க!

தற்போது எல்லாம் அனைத்துவிதமான நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு டார்கட் முறையிலேயே வேலை வழங்கப்படுகிறது. அதாவது, ஐடி துறை என்றால் மாறுபட்ட எண்ணிக்கையிலும், தொழில் நிறுவனங்கள் என்றால் உற்பத்தியிலும் என இந்த டார்கட் மாறுபடுகிறது.

 
அலுவலகத்தில் Target முடிக்கவில்லையா? நோ டென்சன், இத பாருங்க!

அவ்வாறு, ஒதுக்கப்பட்ட டார்கட்டை அடையவில்லை என்றால் ஊதிய உயர்வு கிடைக்காதோ, வேலையை விட்டு நீக்கி விடுவார்களோ என்ற பல்வேறு அச்சங்களும் ஒட்டிக்கொள்ளும். இந்த சூழ்நிலையை எப்படி கடந்துசெல்ல வேண்டும் என காணலாம் வாங்க.

டார்கட் (Target)

டார்கட் (Target)

முன்பெல்லாம் டார்கட் என்ற சொல்லை பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலேயே நாம் கேட்டிருப்போம். ஆனால், இப்போது அனைத்துவிதமான நிறுவனங்களிலும் Target முறையைக் கொண்டே பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட தேதிக்குள் செய்து முடித்து விட வேண்டும்.

டார்கட்டை முடிக்கவில்லையா?

டார்கட்டை முடிக்கவில்லையா?

அவ்வாறு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட டார்கட்டை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? இப்படியான சூழலில் பதற்றமடையாமல் நிதானமாக நாம் என்ன செய்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். மேலும், இது ஊதிய உயர்வுக்கான நேரம் என்பதால் உங்களுடைய அலுவலகத்தில் உங்களது பங்களிப்பு உள்ளிட்டவற்றைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

சரியான நேரம்
 

சரியான நேரம்

டார்கட்டை முடிக்காதபட்சத்தில் உங்களுக்கான வேலையை சரியான நேரத்தில் தொடங்கினீர்களா என பார்க்கவும். நம்மில் பல பேர் அலட்சியம், வீட்டு வேலை, அல்லது இதர பிரச்சனை காரணமாக வேலையில் கால தாமதம் ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு தவறு உங்களிடம் தான் இருக்கிறது என்றால் இதனால்தான் டார்கெட் முடிக்க முடியவில்லை என மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

டார்கட் முடிக்காமல் சம்பள உயர்வு

டார்கட் முடிக்காமல் சம்பள உயர்வு

நிர்வாகம் கொடுத்த டார்கெட்டை முடிக்கவில்லை. இனி என்ன செய்யப் போகிறோம் என முடங்கிவிடாமல், இனி செய்ய வேண்டியதை மட்டும் பார்க்கவும். சம்பள உயர்வுக்கு சில மாதங்களோ, சில நாட்களோ இருக்கலாம். ஆக, இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மேலதிகாரியிடம் நற்பெயரை வாங்குவதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் சம்பள உயர்வு பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

தீயா வேலை செய்யனும் குமாரு!

தீயா வேலை செய்யனும் குமாரு!

ஒரு வேலை நீங்கள் டார்கெட்டை முடிக்காமல் மேலதிகாரி உங்கள் மீது கோபப்படும் பட்சத்தில் அவரது கவனத்தைத் திருப்பும் வகையில், நீங்கள் பல்துறை வேலைகளை செய்ய முற்படுங்கள். அதாவது, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை மட்டுமில்லாமல், மற்ற வேலைகளையும் சேர்த்து செய்து பாருங்கள். குறிப்பாக, மேலதிகாரியின் எதிர்பார்ப்பை உணர்ந்து, முன்கூட்டியே அவர் எதிர்பார்க்கும் வேலையை செய்து முடியுங்கள்.

இதுபோன்ற ஒரு சில செயல்களின் மூலம் ஒரு மாத டார்கெட்-டில் இருந்து நீங்கள் எளிதில் தப்பித்து விடலாம். ஆனால், இது ஒவ்வொரு மாதம் தொடராது என்பதை நினைவில் வைத்து டார்கட் எனும் இலக்கை அடைய பணியாற்றுங்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
What Should You Do When You Don't Accomplish Your Target in workplace
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X