பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்வு மற்றும் வேலைக்கான தேர்வுகளை எழுதும்போது செய்யவேண்டியது என்ன....செய்க்கூடாதது என்ன என்பது தெரிந்து வைத்திருத்தல் அவசியம். செய்யக்கூடாதது என்ன என்பது குறித்து கல்வியாளர்கள் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளனர். அவற்றை நாம் பின்பற்றும்போது தேர்வுகளில் நாம் எளிதில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
தேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பதும் நல்லது.
பொதுவாக, கிராமப்புற மாணவர்கள், கிணற்றில் டைவ் அடித்து குதித்து குளிப்பது, மரம் ஏறுவது, முள் வெட்டுவது மற்றும் விறகு வெட்டுவது போன்ற சில காரியங்களில் வழக்கமாக ஈடுபடுவார்கள்.
அவை, அந்த மாணவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எதிர்பாராத சில நேரங்களில், அத்தகைய செயல்களில், விபத்துக்களும் நேர்வதுண்டு. எனவே, தேர்வின்போது, அதுபோன்ற செயல்களை(அவை வழக்கமான ஒன்றாக இருப்பினும்கூட) தயவுசெய்து சில நாட்களுக்கு ஒத்தி வைக்கவும். தேர்வு முடிந்த பிறகு, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளவும்.
கிராமப்புற மாணவர்கள் தவிர, நகர்ப்புற மாணவர்களும் சேர்ந்து, வேறுசில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏதேனும் வேலை செய்தல், பைக்கில் சாகச பயணம் அல்லது வேகமாக செல்லுதல், நெருப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல், தேவையற்ற அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
ஏனெனில், தேர்வின்போது, கண்களும், கைகளும் மிக முக்கியமானவை. உங்களின் நடவடிக்கைகளால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமானால், அது தேர்வையே பாதித்துவிடும். உங்களின் விரல் நகங்களை, பிளேடு பயன்படுத்தாமல், நகவெட்டிக் கொண்டு வெட்டி, தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

துரித உணவு கூடாது:
தேர்வு காலத்தில் மாணவர்கள் தூங்கும் நேரம் உள்பட 24 மணி நேரமும் மூளை இயங்கிக் கொண்டே இருக்கும். அதாவது உங்கள் மூளைக்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை. அது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. எனினும் காஃபி, இனிப்புகள், துரித உணவுகள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது உங்கள் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும். அத்துடன் நீர்ச்சத்து இழப்பு, அதிக ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கும். இதன் எதிரொலியாக நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, உங்கள் கவனத்திறனும் பாதிக்கப்படும்.
அசைவ உணவு வேண்டாம்:
மாணவ மாணவிகள், தேர்வு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதிக அளவிலான அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், வெயில் காலம் என்பதால், வயிற்றுப்போக்கும் உண்டாகலாம். குறிப்பாக சாலையோரக் கடைகளில் கிடைக்கும் அசைவ உணவுகளை மாணவர்களுக்கு வாங்கித்தர வேண்டாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் உணவுகளை மாணவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அந்த உணவுகளால், ஃபுட் பாய்சனிங் (Food poisoning) ஏற்படுவதற்கு நிறையச் சாத்தியங்கள் இருக்கின்றன. தலைபாரம், சளி, இருமல் போன்றவையும் ஏற்படலாம் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்:
காலை நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவை மாணவர்கள் தவிர்க்கக் கூடாது. தேர்வுக் காலம் முழுக்க எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. செரிப்பதற்குக் கடினமான பரோட்டா, துரித உணவுகள் வேண்டாம். காலை உணவைத் தவிர்த்துவிட்டு, தேர்வுக்குச் செல்வது கூடாது. நாள் முழுக்க ஆற்றலைக் கொடுக்கும் காலை உணவு, மாணவர்கள் படித்தவற்றை முழுமையாக விடைத்தாளில் வெளிப்படுத்தவும் உதவும்.
தேர்வு நேரத்தில் சோர்வடையாமல் செயல்படவைக்கும். சுவையான காய்கள் நிறைந்த சூப் வகைகளை அருந்தலாம். பருப்பு சேர்ந்த கீரை உணவுகள், புரதங்களோடு சேர்த்து நுண்ணூட்டங்களையும் உடலுக்கு வழங்கும் என்று நிபுணர்கள் டிப்ஸ் தருகிறார்கள். பீதி:
பள்ளி இறுதியாண்டு தேர்வெழுதப் போகும் மாணவர்களிடையே தேர்வுகள், மிகுந்த பீதியையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. அவர்களில் சிலர் மிகவும் பயமாக உணர்கிறார்கள், மற்றவர்கள் மிகவும் பதற்றமாக இருக்கலாம்.
தேர்வுகளுக்குத் தயாராகி ஆண்டு முழுவதும் செலவழித்தாலும், ஆண்டு இறுதித் தேர்வுகளின் அழுத்தம் மாணவர்கள் தேர்வு எழுதும் போது பொதுவான தவறுகளைச் செய்ய வழிவகுக்கும். கடின உழைப்பு மற்றும் முழுமையான தயாரிப்பு ஆகியவை வெற்றிக்கு இன்றியமையாதவை என்றாலும், தேர்வுக் கூடத்தில் சில தவறுகளைத் தவிர்ப்பது சமமாக முக்கியமானது.
இணையம் கவனத்தை சிதறடிக்கும் என்பதால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம். உங்கள் தேர்வுகளுக்கு முன் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள், அது உங்கள் நேரத்தையும் சக்தியையும் அதிகம் செலவழிக்கும். உங்கள் மொபைல் டேட்டா, வைஃபை ஆகியவற்றை அணைத்துவிடுங்கள். சிறந்த கவனம் செலுத்த உங்கள் பெற்றோரின் அலமாரியில் உங்கள் மொபைலைப் பூட்டலாம்.

ஒப்பிடுதல் கூடாது:
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் அவரவர் பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் ஒருவருக்கு வேலை செய்வது உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்குப் பதிலாக, உங்கள் சொந்த முன்னேற்றத்திலும் வெற்றியிலும் கவனம் செலுத்துங்கள்.
தேர்வுக் கூடத்தில்...:
மாணவர்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் மாணவர்கள் அனைத்து கேள்விகளையும் படித்து பின்னர் வினாத்தாளை முயற்சிப்பதற்கான உத்தியை உருவாக்க வேண்டும். இருப்பினும், பல மாணவர்கள் கேள்விகளை வெறுமனே படிப்பதன் மூலம் இந்த நேரத்தை வீணடிக்கிறார்கள் மற்றும் எந்த வரிசையில் பதிலளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவில்லை. எனவே, வினாத்தாளை நன்கு படித்து எந்தக் கேள்விக்கு முதலில் பதில் அளிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு ுதலில் பதில் எழுதுவது நல்லது.
தவறாகப் புரிந்துகொள்ளுதல்:
தேர்வால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை மாணவர்களை கேள்விகளை தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். சரியான நேரத்தில் வினாத்தாளை எழுதி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், கேள்விகளை கவனமாகப் படிக்காமல், கேட்கப்பட்டதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பதில் எழுத சில மாணவர்கள் தொடங்குவார்கள். இதன் விளைவாக, அவர்கள் கேள்விக்கு பதிலளிக்காத அல்லது முழுமையடையாத பதில்களை எழுதும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே, பதட்டப்படாமல் கேள்விகளைப் புரிந்துகொண்டு பதில் எழுதுவது நல்லது.
சுருக்கமாக, சரியான விடையை எழுதுதல்:
தேர்வில் ஒரு கேள்விக்கு விடை எழுதும்போது, பல மாணவர்கள் தங்கள் பதில் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, அவ்வளவு மதிப்பெண்களைப் பெறுவோம் என்று நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயமாகும். முக்கியமான உண்மைகள் மற்றும் சுருக்கமான தகவல்களை உள்ளடக்கிய அர்த்தமுள்ள பதில்களை மட்டுமே தேர்வாளர்கள் தேடுகின்றனர். நீண்ட, கட்டுரை வகை பதில்கள் எரிச்சலூட்டும். மேலும் அவை, படிக்க கடினமாக இருக்கும், மேலும் அவை தேர்வாளருக்கு முக்கிய புள்ளிகளை (பாயிண்டுகள்) கண்டுபிடிப்பதை கடினமாக்கலாம். கூடுதலாக, நீண்ட பதிலை எழுதுவதற்கு அதிக நேரம் செலவிடுவதால், தேர்வில் மீதமுள்ள கேள்வி
களை முடிக்க குறைந்த நேரமே கிடைக்கும் என்பதை மாணவர்கள் மனதில் கொள்ளவேண்டும்.
உங்கள் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு புதிய புத்தகத்தைப் பார்ப்பது தவறான முடிவு. கடைசி நேரத்தில் முழு புத்தகத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

நேர மேலாண்மை:
தேர்வுகளில் வெற்றிபெற நேர மேலாண்மை முக்கியமானது . இருப்பினும், மாணவர்கள் இதை அறிந்திருந்தாலும், பலர் தேர்வின் போது தங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிக்கத் தவறிவிடுகின்றனர், இதற்கு முக்கியமாக தேர்வு மன அழுத்தம் மற்றும் பதட்டம்தான் காரணமாகும் . இந்தத் தவறைத் தவிர்க்க, ஒவ்வொரு கேள்விக்கும், வகைக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இது தேர்வின் போது அவசரப்படுவதைத் தவிர்க்கவும் உதவும்.
தவறான தகவலை நகலெடுத்தல் கூடாது:
வினாத்தாளில், குறிப்பாக எண் வினாக்களில் உள்ள தவறான தகவலை நகலெடுப்பதில் மாணவர்கள் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள். மாணவர் முழு செயல்முறையையும் கணக்கீடுகளையும் சரியாக எழுதியிருந்தாலும், இது அந்தக் கேள்வியில் பூஜ்ஜிய மதிப்பெண்ணுக்கு வழிவகுக்கும். இந்தத் தவறைத் தவிர்க்க, மாணவர்கள் வினாத்தாளில் இருந்து தகவலை நகலெடுக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தகவலை துல்லியமாக நகலெடுத்துள்ளார்களா என்பதை உறுதிசெய்த பின்னர் பதில் எழுதவேண்டும்..
எளிதான கேள்விகளை கடைசியாக எழுதுங்கள்:
பல மாணவர்கள் கடினமான கேள்விகளை முதலில் முயற்சி செய்து, எளிதான கேள்விகளை கடைசியாக விட்டுவிடுகிறார்கள். இது எப்போதும் நல்ல யோசனையாக இருந்தது கிடையாது. மாணவர்கள் தாங்கள் எளிதில் பதிலளிக்க நினைக்கும் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். தேர்வில் சில உறுதியான மதிப்பெண்களைப் பெற இது அவர்களுக்கு உதவும். மறுபுறம், மாணவர்கள் கடினமான கேள்விகளுக்கு அதிக நேரம் செலவழித்தால், எளிதான கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களுக்கு போதுமான நேரம் இருக்காது, எனவே தெரிந்த கேள்விகளை முதலில் எழுதி மதிப்பெண்களைப் பெறுங்கள். தெரியாத கேள்விகள், சந்தேகமாக உள்ள கேள்விகளுக்கு கடைசியில் எழுதலாம்.
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்வான பள்ளி இறுதித் தேர்வை எழுதும்போது அடிக்கடி செய்யும் சில தவறுகள்தான் இவை. மாணவர்கள் தேர்வுக் கூடத்தில் அமைதியாகவும், விழிப்புடனும் கவனத்துடனும் இருப்பதன் மூலம் இந்தத் தவறுகளைத் தவிர்க்கலாம். மன அழுத்தம் மற்றும் பயம் உங்கள் மிகப்பெரிய எதிரிகள், அவர்களிடமிருந்து நியாயமான தூரத்தை பராமரிக்கவும். நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.
உங்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்து ஓய்வெடுக்கவும். தேர்வு தொடர்பான எதையும் உங்கள் நண்பர்களுடன் விவாதிக்க வேண்டாம் மற்றும் கடைசி நிமிடம் எதையும் படிக்க வேண்டாம் என்று கல்வியாளர்கள் டிப்ஸ் தருகின்றனர்.
தேர்வுளில் வெற்றிபெற வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே...!


Click it and Unblock the Notifications












