நீட் தேர்வுக்காக தயாராகும் மாணவரின் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன....

நாடு முழுவதும் தற்போது நீட் தேர்வுதான் பேச்சாக இருக்கிறது. மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்குத் தகுதியாக இருப்பது நீட் தேர்வு ஆகும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் அரசு இடங்களிலோ அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளிலோ சேர முடியும். எனவே நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோரும் உதவியாக இருக்கவேண்டும்.

நீட் எனப்படும் NEET (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது (நீட்), இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. இதன்படி 5 மே, 2013 முதல் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதுது. 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது.

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசுதெரிவித்தது

தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) எனப்படும் NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை தற்போது கவனித்து வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் (முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இருந்தது) தான் உருவாக்கியது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி மற்றும் குஜராத்தி ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோரும் உதவும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் மனநிலையை அறிந்துகொண்டும், புரிந்துகொண்டும் அவர்கள் செயல்படவேண்டும். அப்படி செயல்படும்போது அவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகும் நல்ல சூழ்நிலை ஏற்படும்.

நீட் தேர்வுக்காக தயாராகும் மாணவரின் பெற்றோர் செய்ய வேண்டியது  என்ன....

நீட் தேர்வுக்காகக் தயாராகும் ஒரு மாணவரின் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன....அதை கீழே காணலாம்.

பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன....

1. மாணவர்களின் பலவீனத்தை அறிந்து அதை மேம்படுத்த உதவுதல்:

நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் படிப்புக்கு உதவுவது மட்டுமில்லாமல் அதிலுள்ள நிறைகளை பாராட்டுவதும், குறைகளை சரி செய்ய முயற்சி செய்வதும் பெற்றோரின் கடமைதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில், அவர்களின் பலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் எந்தத் துறையில் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து பகுப்பாய்வு செய்வதில் நீங்கள் அவர்களுக்கு உதவலாம் என்பது முக்கியம். மேலும் பாடங்களில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கலாம். மேலும் அவர்களின் பலவீனத்தை சரி செய்வதற்கான வழிகளை கண்டறிந்து அவர்களுக்கு அதை அடையாளம் காட்ட வேண்டும்.

மேலும் எந்த விஷயத்திலும் தீர்க்க முடியாதது என்று ஒன்றும் இல்லை என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். சரியாக திட்டமிட்டு தொடர்ந்து முயர்சி செய்தால் கற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்களே இயல்பாக தெரிந்து கொள்ள உதவும் பணிகளை அவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களது தன்னம்பிக்கை அளவு அதிகரிக்கும்.

2 . மாணவர்கள் திசை திருப்பப்படாமல் பார்த்துக் கொள்ளுதல் முக்கியம்:

இன்றைய நவீன உலகில் மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்ப ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதில் முக்கியமானது ஸ்மார்ட்போன். இன்றைய நவீன உலகில் உலா வரும் பதின்பருவத்தினருக்கு அதிகமான டைவெர்ஷன் விஷயங்கள் இருக்கின்றன. அவர்களை எளிதாக திசை திருப்பும் பதின்பருவ மாற்றங்கள், செல்போன், ஆன்லைன் வீடியோ கேம்ஸ், சமூக வலைதளங்கள், டிக் டாக் போன்ற செயலிகள் உள்ளன. இவை அவர்களை எளிதாக திசை திருப்ப வரிசைக்கட்டி நிற்கின்றன.

இதற்கு நடுவில் தான் பெற்றோரின் பிள்ளைகள் அல்லது மாணவர்கள் தங்களுடைய இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோரின் ஆதரவு அவர்களுக்கு மிக அவசியம். பெற்றோரின் கடமை என்னவென்றால், வேறு எந்த வெளிப்புற நபர்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ தங்களது பிள்ளைகள் திசைதிருப்பப்படாமல் இருக்க உதவ வேண்டும். அதற்காக அவர்களை கண்காணித்தல் நல்லது.

மேலும் பெற்றோர் தங்களது குழந்தைகளை திட்டியோ, அடித்தோ, கண்டித்தோ குறை கூறியோ மாற்ற முடியாது. பெற்றோர்கள் ஒரு நண்பர்களை போல் அவர்களுடன் பழகி பதின்பருவ பிள்ளைகளோட நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்களை வழிநடத்தலாம்.

நீட் தேர்வுக்காக தயாராகும் மாணவரின் பெற்றோர் செய்ய வேண்டியது  என்ன....

3. குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்த்தல் நல்லது:

படிப்பு விஷயத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்த்தல் நல்லது. அழுத்தம் மன அழுத்தத்தை மட்டுமே தருகிறதே தவிர வெற்றியை இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும். மேலும் அந்த மாணவன் அதிக மதிப்பெண் எடுக்கிறான். இவன் நன்றாகப் படிக்கிறான் என்று மற்ற டாப்லிஸ்டில் வரும் முதன்மை மாணவர்களுடன் ஒப்பிடும் போது மாணவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டு சோர்வடைகிறார்கள்.

அதுவே அவர்களின் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் குறைக்கிறது. குழந்தைகள் தங்களால் இந்த இலக்கை அடைய முடியவில்லை என்று கூறும்போது, நீ அடைந்தே தீர வேண்டும் என்று கூறக்கூடாது. இவ்வாறு கூறினால் அவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு பிரச்சினையாக மாறிவிடும்.

4.யதார்த்தமான எதிர்பார்ப்புகள்

ஒவ்வொரு பிள்ளைகளும் அவர்களின் திறன்களும் வித்தியாசமானது என்பதை பெற்றோர் உணரவேண்டும். உங்கள் குழந்தைக்கும் ஒரு வரம்பு உள்ளது. அது அவருடைய/அவளுடைய திறனுக்கு ஏற்ப மட்டுமே செயல்பட முடியும் என்பதை பெற்றோராகிய நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன்களை நீங்கள் நம்ப வேண்டும்ய மேலும், அந்த விஷயங்களில் யதார்த்தமான எதிர்பார்ப்புகளை அமைக்க வேண்டும்.

5. சிறிய முயற்சியையும் பாராட்டுதல் நல்லது:

தேர்வுக்காக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் வழங்கிய பணியை அவர்கள் முடித்திருந்தாலும் சரி, அவர்களுக்கு உரிய வெகுமதியை அளித்துப் பாராட்ட வேண்டும். அதே போல் அவர்களின் படிப்பில் மதிப்பெண் குறைந்தாலும் அவர்களைத் தாழ்த்தி விடாமலும், திட்டாமலும் ஆதரிக்கவும். பரீட்சையின் போது அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஊக்கமும் நம்பிக்கையும் தான் அவர்கள் மீள உதவும். எனவே, தேர்வுகளின்போது அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்க உதவவேண்டும்.
இன்றைக்கு இருக்கும் இந்த போட்டி உலகில் குழந்தைகளுக்கு தேவைப்படுவது "நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்கிறீர்கள்" என்ற அற்புதமான நம்பிக்கைக்குரிய வார்த்தைதான். அவர்களிடம் இதை அடிக்கடி சொல்லுங்கள். அவர்களின் தன்னம்பிக்கை அளவுகோல் அதிகமாகும்.

நீட் தேர்வுக்காக தயாராகும் மாணவரின் பெற்றோர் செய்ய வேண்டியது  என்ன....

6. குழந்தைகள் மீது முத்திரை குத்தாமல் இருத்தல்:

எங்கள் குழந்தைக்கு இதுதான் வரும், இது வரவே வராது. இந்தச் செயலை, அவனால், அவளால் செய்யவே முடியாது என்று பெற்றோர் முத்திரைக் குத்தி ஒதுக்க வேண்டாம். ஒருவரின் புத்திசாலித்தனத்தை சதவிகிதத்தின் அடிப்படையில் கணக்கிட முடியாது, அதாவது ஒருவர் 99% மதிப்பெண் பெற்றால் அவர் புத்திசாலி என்றும் மற்றும் யாராவது 70-80% அல்லது அதற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் அவர்கள் எதிர்காலத்தில் தோல்வியடைவார்கள் என்ற மூட நம்பிக்கையை கைவிட வேண்டும்.

80 சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவரும் பிற்காலத்தில் தங்களது துறையில் நல்ல நிலைக்கு வர முடியும்.

"எல்லோரும் மேதைகள். ஆனால் ஒரு மீனை மரத்தில் ஏறும் திறனை வைத்து மதிப்பிட்டால், அது தன் வாழ்நாள் முழுவதும் அதை முட்டாள் என்று நம்பி வாழும் நிலை ஏற்படும். எனவே, உங்கள் குழந்தையின் பலத்தை கண்டுபிடித்து அந்த வழியில் அவர்களை ஊக்கப்படுத்தினால் எளிதாக வெற்றிப் பாதையில் செல்வார்கள். உங்களின் கனவும், கைகூடும். மாணவர்களின் எதிர்காலமும் வளப்படும்.

நீட் தேர்வுக்கு முயற்சி செய்யும் அனைத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் உங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கை, ஊக்கம், பயிற்சி, அன்பு, அரவணைப்பு என அனைத்து நேர்மறையான சிந்தனைகளை ஊட்டி ஊக்கப்படுத்துங்கள். நீட் தேர்வு மட்டுமல்லாமல் எந்தத் தேர்வு, படிப்பானாலும் அவர்கள் தங்களது இலக்கை அடைய பெற்றோரின் ஆதரவு உதவுகிறது.

இதை என்றுமே மறக்கக்கூடாது. ஒவ்வொரு மாணவரின் பெற்றோரும் இதை மனதில் நிறுத்தி செயல்பட்டால் அவர்களது குழந்தைகள் வெற்றி கோட்டை எட்டிப் பிடிப்பார்கள் என்பது நிச்சயம் என்று கல்வி நிபுணர்கள் தெரிவிக்கின்றநர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Therefore, parents need to come to the front seat to ensure the consistency of study and performance during preparation for NEET 2024. Parents can prepare a fixed study routine for their children and monitor their shortcomings. They may even fix rewards for maintaining consistency in preparation.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+