உணவு பிரியரா நீங்கள்? உங்களுக்கான படிப்புகள் இதுதான்!

Posted By: Kani

அறுசுவை உணவுக்கு மயங்காதவர் இவ்வுலகில் இல்லை என்றே கூறலாம். பரோட்டா சாப்பிட வேண்டும் என்றால் கூட நேராக குற்றாலம் பார்டர்கடையை தேடிப்போகும் லைப் ஸ்டைல் அதிகரித்து வருகிறது.

ஒரு காபி சாப்பிட வேண்டுமா பக்கத்தில் எதும் டிகிரி காபி ஷாப் இருக்கா சார்னு கேட்கும் நிலைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

இதோடு சேர்ந்து உணவு தயாரிப்பு துறையும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றால் அது மிகையாகது. இந்த துறையில் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை வேலை வாய்புகள் கொட்டிக்கிடக்கின்றன. திறமை இருந்தால் எங்கு வேண்டுமானலும் வேலை பார்க்கலாம். 

பி.டெக். அக்ரி இன்ஜினியரிங், பி.டெக். ஃபுட் பிராசசிங் போன்ற படிப்புகள் குமுலூரில் அமைந்திருக்கும் வேளாண் கல்லூரி வழங்கி வருகிறது.

உணவுப் பொருட்கள் குறித்த சகலவிதமான பாடப்பிரிவுகளும் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. பி.டெக். ஃபுட் பிராசசிங் மட்டும் 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டத்தை முடிப்பவர்கள் பால் பண்ணை, ரோலர் ஃபிளவர் மில் என பல்வேறு வகையான உணவுத் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது. மேலும் தனியாக நிறுவனமும் தொடங்கலாம்.

11. டயடிஷியன்

பொதுவா எந்த வகை உணவாக இருந்தாலும் சரி சுவை பிடித்திருந்தால் ஒரு கட்டு கட்டுவது நமது வழக்கம்.

அப்படி சாப்பிடக்கூடாது. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும். எப்போது சாப்பிட வேண்டும் என ஏ டூ இசட் ப்ளான் போட்டு செயல்படுத்துபவர்தான் டயடிஷியன்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாஸ்ட் புட் படைஎடுப்பில் இளைஞர்கள் கண்டதையும் தின்று ஃபிட்னெஸ் சென்டர்களுக்கு படைஎடுத்து வருகின்றனர்.

ஃபிட்னெஸ் சென்டருக்கு போகாமல் பிட்டாக இருப்பது எப்படி என கற்றுக்கொடுப்பவர்தான் இந்த டயடிஷியன் இந்த வகையான படிப்புகளுக்கு எப்போதுமே கீரின் சிக்கனல்தான் எப்போதும் தேவை உள்ள படிப்புகளில் இதுவும் ஒன்று.

 

10.ஹோட்டல் ஷேப்

உணவு சார்ந்த துறைகள் பொதுவாக ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. ஹோட்டல்கள் அதிகரிக்கும் போது அதற்கான தேவையும் அதிகரித்து வருவது வழக்கம்.

எனவே சமைப்பதற்கான வல்லுநர்களின் தேவை அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. சாப்பிட்டால் அந்த ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால் அதற்கு முதல் காரணம் அந்த சமையலின் சுவைதான்.

இந்த வகையான படிப்புகளுக்கு, மருத்தும் போன்றே எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்புதான். உள்ளூர் முதல் வெளிநாடு வரை பல்வேறு வகையான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த வகையான படிப்புகள் தனியார் நிறுவனம் முதல் அரசு பல்கலைக்கழகங்கள் வரை பல்வேறு முறையில் வழங்கி வருகின்றன.

 

9.ரெசிபி டேஸ்டர்

இந்த அளவில் இதை போட்டால் இந்த சுவை கிடைக்கும் என இவர்கள் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லி விடுவார்கள். அதற்கான படிப்புதான் இது. இந்த வகையான படிப்புகளுக்கு பொதுவாக வெளிநாட்டில் மவுஸ் இருந்தாலும் தற்போது இது நமது நாட்டிலும் மெல்லமாக வளரத்தொடங்கியுள்ளது. இதில் நமது விருப்பத்திற்கேற்றவாரு உணவு வகைகளை ருசித்து மகிழலாம்

8. ஃபுட் ஜர்னலிஸ்ட்

தற்போது வீட்டுக்கு வீடு சமையல் மாஸ்டர்கள் முளைக்கத்தொடங்கியுள்ளனர். காரணம் அதிகரித்து வரும் தொலைகாட்சி சேனல்களும், இணையதள, யூடியுப் சேனல்களும்தான்.

எந்த அளவிற்கு இதன் வளர்ச்சி உள்ளதே அந்த அளவிற்கு இதன் பின் புறம் உள்ள பத்திரிகையாளனின் உழைப்பும் உள்ளது. எனவே இந்த துறையிலும் தாரளாமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

 

7.பேக்கர்

நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதான வேலை இல்லை என்ற போதிலும் விரும்பியதை விரும்பிய பக்குவத்தில் கொடுக்கும் ஒரு அருமையான பணி, எப்போதுமே அடுப்பின் பக்கத்திலே நிற்க வேண்டும் என்றும் அவசியமில்லை , தற்போது வந்துள்ள நவீன கண்டுபிடிப்புகள் இந்தப்பணியை மிக மிக எளிமையாக்கி உள்ளன. இதுவும் எந்தகாலத்திற்கும் ஏற்ற படிப்பு வகையை சார்ந்தது.

6.எழுத்தாளர்

மதுரையில் உள்ள உணவு வகைகளின் சுவையும், தயாரிப்பும் சென்னையில் உள்ளவர்களுக்கு தெரிவது இல்லை இது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதுதான இவர்களின் வேலை. ஒரு உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதில் ஆரம்பித்து அதன் பூர்விகம் என்ன இது எதன் அடிப்படையில் இங்கு மட்டும் விரும்பப்படுகிறது என முழுவதுமாக படிப்பவர்கள் விரும்பும் வகையில் எழுதுவதுதான் இவரின் பணி.

இதில் உட்பிரிவுகளாக பல்வேறுவகையான பணிகள், புத்தகம் எழுதுவது, செய்திமட்டும் சேகரிப்பது, இணையதளங்களுக்காக எழுதுவது என பல்வேறு வகையான பணிவாய்ப்புகள் உள்ளன.

 

5.உணவு பரிமாறுபவர்

ஒரு உணவை தயாரிப்பது எப்படி ஒரு கலையோ அதே போல் உணவு பரிமாறுவதும் ஒரு கலைதான் ஒரு வாடிக்கையாளர் திரும்ப திரும்ப நமது ஹோட்டலுக்கு வரவேண்டும் என்றால் அதற்கு சுவை மட்டும் போதாது.

அந்த சுவையை, அதன் அச்சு மாறாமல் பரிமாறுவதில்தான் உள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் எப்போது எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதை நுட்பமாக கவனிக்கும் திறன் அவசியம். இதுவும் எப்போதும் குன்றாத வேலை வாய்ப்புள்ள ஒரு துறைதான்.

4.சேப்டி ஆபிஸர்

ஒரு உணவில் எந்த அளவு சுவையூட்டிகள் சேர்க்கப்பட வேண்டும். இதன் காலாவதி தேதி என்ன. இதில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது.

எந்த வயதினருக்கு இது உகந்தது என ஒரு உணவின் முழு பட்டியலையும் பரிசோதிப்பவர் இவர்தான் இந்தவகையான படிப்புகள் மற்றவைகளை காட்டிலும் வருமானம் ஈட்டக்கூடிய துறையாக விளங்குகிறது. சுருக்கமாக நீங்கள் வாங்கும் ஒவ்வெரு பொருளும் இவர்களின் பார்வைக்கு பின்னரே சந்தைக்கு வரும்.

 

3.ஃபுட் போட்டோ கிராபர்

இது புகைப்பட துறையில் ஒரு பகுதியாக இருந்தாலும், எவ்வளவு அருமையாக சமைத்தாலும் அதை மக்களுக்கு அதன் சுவையை கொஞ்சம் எக்ஸ்ரா கூடுதலாக்கி கண்களுக்கு விருந்தளிப்பது இந்த புகைப்பட கலைஞர்களின் பணி.

இந்த வகையான படிப்புகள் தனியாக கற்றுக்கொடுக்கப்பட வில்லை என்றாலும் கூட அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இதை கற்றுக்கொண்டு கை நிறைய சம்பாதிக்கலாம்.

 

2.விவசாயம்

மேற்கண்ட மொத்தப்பணிகளுக்கு மூலமாக விளங்குவது இந்த விவசாயம் தான். விவசாயம் என்றால் வானம் பார்த்த பூமியில் விதைத்து அறுவடை செய்வது அல்ல தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்தில் கிடைக்கும் இடத்தில் எவ்வாறு மாடித்தொட்டம் அமைப்பதில் தொடங்கி குறைவான நீரில் எவ்வாறு நெல் அறுவடை செய்யலாம் என்பது வரை இதில் அடங்கும்.

பொதுவாக மனிதம் மண்ணில் இருக்கும் வரை செல்வாக்கு குறையாத வேலை. தற்போதை காலத்தில் சாப்ட்வேர் என்ஜினியருக்கு இணையாக ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

1.கெமிஸ்ட்

ஒரு செம்பருத்தி மலரை ரோஜா மலர் போல் அடுக்கடுக்காக பார்த்தால் எப்படி இருக்கும். அதை நிஜமாக்கி காட்டுவதுதான் இந்தப் பணி. 

மலர் மட்டுமில்லை, பழங்கள், காய்கறிகள் என புதுமைகளை புகுத்தி மக்கள் விரும்பும் வண்ணம் அதன் சுவை மாறாமல் கொடுப்பது இவர்களின் பணி.

இது மிகவும் கடினமானது என்றாலும் கூட நாம் கண்டுபிடித்த கண்டு பிடிப்புகளுக்கு தனியாக உரிமம் பெற்று வாழ்நாள் முழுவதும் வருமானம் ஈட்டலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த வகையான படிப்புகளுக்கு படிக்கும் முன்பே பல நிறுவனங்கள் வேலை கொடுக்கத் தயாராக உள்ளன.

 

English summary
Are you a foodie who has often heard the dialogue: You are fit only for eating? Well, if you have ever been embarrassed about your finesse for eating, then it's time to shoo that guilt away and instead take pride in it. There are an array of professions just for foodies that you must know. Check them out and make your career choice effectively.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia