கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை சாத்தியமாக்க நினைப்பவரா? உங்களுக்கான படிப்புகள் இதுதான்!

பொதுவாக டிசைனிங் படிப்புகள் பற்றியும் அதன் வேலைவாய்ப்பு பற்றியும் பலருக்கும் அறிமுகம் இருந்தும் முழுமையான விவரம் தெரிவதே இல்லை. இதனால்தான், இன்றளவும் பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு மாணவர்கள்

By Kani

பொதுவாக டிசைனிங் படிப்புகள் பற்றியும் அதன் வேலைவாய்ப்பு பற்றியும் பலருக்கும் அறிமுகம் இருந்தும் முழுமையான விவரம் தெரிவதே இல்லை. இதனால்தான், இன்றளவும் பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு மாணவர்கள் சாரை சாரையாக படை எடுத்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆரம்ப சம்பளமே 50 ஆயிரங்களில் தொடங்குகிறது. தவிர, புதுவிதமான டிசைன்களை உருவாக்குபவர்கள் காப்புரிமை பெற்று நிலையான வருமானமும் ஈட்ட முடியும்.

பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் கற்பனை வளம், ஓவியத்திறமை கொண்டவர்கள் ஆர்க்கிடெக்சர், ஃபேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளையே தேர்வு செய்வார்கள்.

இதைத்தவிர்த்து டிசைனிங் துறையில் பல்வேறு படிப்புகள் இருக்கின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை.

டிசைனிங் ஏரியாவைப் பொறுத்தவரை கிராஃபிக் டிசைனிங், வெப் டிசைனிங், 3டி அனிமேஷன், இன்டீரியர் டிசைனிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என நிறைய ஏரியாக்கள் உண்டு.

9. யூஐ டிசைன்

9. யூஐ டிசைன்

இது ஆன்லைன் யுகம். இணையத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் தேடி அலைந்து கண்டுபிடிப்பதைவிட, சில நிமிடங்களில் உங்கள் வேலையை முடித்துக்கொள்ள பல ஆப்ஸ்கள் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன.

இந்தவகையான டிசைனிங் படிப்பு ஒரு இணையதளத்தை மெபைல், டெஸ்க்டாப், லேப்டாப் என எதில் பார்த்தாலும் சரியான வடிவமைப்பில் காண்பிப்பதாகும். இதற்கு தற்போது வேலைவாய்ப்புகள் படு கிராக்கியாக உள்ளது. படித்து முடித்த உடனே வேலையை பெறலாம்.

 

8. புகைப்பட கலைஞர்

8. புகைப்பட கலைஞர்

புகைப்பட கலைஞர்களின் பார்வை எப்போதும் மாறுபட்டு இருக்க வேண்டும். பொதுவாக புகைப்படம் எடுப்பதிலே தற்போது எண்ணற்ற கிளை பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு வரலாற்றை நிரூபிப்பதற்கும், பயிற்றுவிப்பதற்கும் புகைப்படங்கள் இன்றியமையாதவை. ஒரே கிளிக்ல் ஜெயிக்கலாம். ஆனால் அதற்கு ஓய்வு இல்லாமல் உழைக்க கற்றுக்கொள்ள ரெடியாக இருக்க வேண்டும்.

புகைப்படம் என்றால் திருமணம், காதுகுத்து போன்ற விழாக்களை கடந்து
வணிக ரீதியாக ஒரு புராடெக்ட்டை புரோமோஷன் செய்வது வரை பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 

7.இன்டீரியர் டிசைனிங்
 

7.இன்டீரியர் டிசைனிங்

நமது வீட்டை அழகாக வடிவமைக்கவும், மேலும் அழகுபடுத்த வேண்டும் என்று என்னும் சமயங்களில் தான் ஆர்க்கிடெக்டுகளும் இன்டீரியர் டெகரேட்டர்களும் தேவைப்படுகிறார்கள்.

இந்தவகையான படிப்புகள் முன்பெல்லாம் பெரிய பெரிய அரண்மனை, மாளிகை, சொகுசு கப்பல் போன்றவைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஐஸ்கீரிம் கடைகளில் இருந்து, பாஸ்ட் புட் கடை வரை எங்கும் வியாபித்திருக்கிறது இன்டீரியர் டிசைனிங். இந்த வகையான படிப்புகளுக்கும் சந்தையில் மவுஸ் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை.

 

6.புராடெக்ட் டிசைனிங்

6.புராடெக்ட் டிசைனிங்

சந்தையில் ஒரு புதிய பொருள் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்னால் இருக்கும் மலை போன்ற உழைப்பு புராடெக்ட் டிசைனிங் துறையை சாரும்.

ஒரு புராடெக்ட்டை யார் விரும்புகள், அவர்களுக்கு பிடித்த நிறம் என்ன என்பதில் தொடங்கி அது சந்தைக்கு வருவது வரையான முழு வடிவம் கொடுப்பது இந்த புராடெக்ட் டிசைனிங். 'ஸ்டார்ட்அப்'களின் அதிவேக வளர்ச்சியின் காரணமாக நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

இந்த வகையான படிப்புகளை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது.

 

5.பர்னிச்சர் டிசைனிங்

5.பர்னிச்சர் டிசைனிங்

பர்னிச்சர் டிசைனிங் துறையை தனது எதிர்காலத் துறையாக தேர்வு செய்வோருக்கு கிரியேட்டிவ் திறன் மிக மிக அவசியம்.

சலிக்காத அழகுணர்ச்சி, டெக்னிகல் டிராயிங் எனப்படும் தொழில்நுட்ப வடிவமைப்பு திறனும் முக்கியமான தேவை. மர வேலைகளுடன் கூடிய கபோடு, சேர் மட்டுமின்றி, சொகுசு கப்பல், மாளிகைகளுக்கு தக்கவாறு பர்னிச்சரை தேர்வு செய்வதில் இருந்து வடிவமைப்பது வரை எல்லா வேலையும் இதில் அடங்கும். இந்தவகையான படிப்புகளுக்கு எப்போதுமே தனி மார்கெட்தான்.

 

4.செராமிக் அண்ட் கிளாஸ் டிசைனிங்

4.செராமிக் அண்ட் கிளாஸ் டிசைனிங்

சிற்பிகளுக்கு இணையானது செராமிக் அண்ட் கிளாஸ் டிசைனிங் இது நாம் விரும்பும் பிம்பத்தை, காண்ணாடியில், அல்லது சுட்ட களிமண் எனப்படும் (செராமிக்) கலவையில் வடிவமைப்பது.

தற்போது பெரும்பாலும் சிற்பிகள் குறைந்து வருவதாலும், நவீன முறையிலான சிலைகளை வாடிக்கையாளர்கள் விரும்புவதாலும் இந்த வகையான படிப்புகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.

ஜூஸ் குடிக்கும் கிளாஸில் இருந்து ஆபிஸ் கதவு வரை தற்போது கிளாஸ்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே இந்தவகையான படிப்பும் ஏற்றம் தருபவையே.

3.கிராபிக்ஸ் டிசைனிங்

3.கிராபிக்ஸ் டிசைனிங்

பொதுவாக கிராபிக்ஸ் டிசைனிங் என அழைக்கப்படும் கம்பியூட்டர் சார்ந்த வடிவமைப்புத் துறை, இன்று சிறந்த தொழில் வாய்ப்புகள் நிறைந்த ஒரு துறையாகும்.

இத்துறையில் கற்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இதில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். எனென்றால் டிசைனிங் சார்ந்த சாப்ட்வெர்களைக் கையாளுவதற்கு துல்லியமான திறமை பெற்றிருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இதன் மூலம் தனியாக தொழில் தொடங்குவதில் இருந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்போடு, கைநிறைய பணமும் சம்பாதிக்க முடியும்.

ஆனால் இதற்கு பயிற்சி மட்டும் போதாது சுயமாக வித்தியாசமான முறையில் சிந்திக்கும் திறனும் இருந்தால் மட்டுமே இந்த துறைக்குள் உறுதியாகக் கால் எடுத்து வைக்கலாம்.

 

2. அனிமேஷன் பிலிம் டிசைனிங்

2. அனிமேஷன் பிலிம் டிசைனிங்

தற்போதைய காலக்கட்டத்தில் அனிமேஷன் துறை அதிக செல்வாக்கு பெற்ற துறையாக விளங்குகிறது.

உலக அளவில் பெரும்பாலான நாடுகள் கணினிகளையை முழுமையாக கையாளத் தொடங்கியுள்ள நிலையில் அனிமேஷன் துறைக்கு சிவப்பு கம்பள வரவேற்புதான்.

தற்போதெல்லோம் 'எந்திரன்' தொடங்கி 'தீரன் அதிகாரம்' வரை அனிமேஷன் காட்சி இல்லாத படங்களை காண்பது அறிதாக இருக்கிறது என்பதைவிட, சுவரஸ்யம் குறையாமல் பார்பதற்கு அத்தியாவசியமாகி விட்டது என்றே கூறலாம்.

நினைப்பதை உருவமாக கொண்டு வரும் அதீத சிந்தனை சக்தி கொண்டவர்கள் இத்துறையை தேர்ந்தேடுக்கலாம், வரும் காலங்களில் அனிமேஷன் மட்டும்தான் திரைப்பட துறையாக மாறினாலும் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை. கைநிறைய சம்பாதிக்க உகந்த துறை.

 

1.எக்ஸிபிஷன் டிசைனிங்

1.எக்ஸிபிஷன் டிசைனிங்

எக்ஸிபிஷன் டிசைனிங் கோர்ஸ் படித்தவர்கள் கண்காட்சி அரங்குகளை அமைக்கும் தொழில் சொந்தமாக தொடங்கலாம். வர்த்தக கண்காட்சிகள் என்பது இயந்திரங்கள், பொருட்கள், தொழில்நுட்பங்களை மக்களிடத்திலும், தொழில் துறையினரிடத்திலும் கொண்டு சென்று சேர்ப்பதற்கான ஒரு பாலமாகும்.

முன்பு வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்தவகையான படிப்புகள் தற்போது நம் நாட்டிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. இதுவும் ஏற்றம் தரும் படிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.

 

இந்த வகையான படிப்புகளை பல முன்னணி கல்வி நிலையங்களில் வழங்கினாலும், சமூக வலைத்தளங்கள், வலைப்பூக்கள், யு-டியூப் வாயிலாக பல்வேறு படிப்பு சார்ந்த தொழில்நுட்ப கருத்துகளை பகிர்ந்து வருவதோடு, இலவசமாக வகுப்பும் எடுத்து வருகின்றனர். நமது திறமைகளை மெருகேற்ற இந்த வகையான வழிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Are you good at drawing or painting and has designing always triggered your interest? Did you know that there are a number of fields in designing and a vast scope for them? Check out the different careers in designing to pick what excites you.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X