8 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லீடர்ஷிப்!

Posted By: Kani

சுயபுரிதல் என்பதுதான் லீடர்ஷிப்புக்கான முதல் அஸ்திவாரம். நம்மை நாமே முழுமையாக அறிந்துகொள்வது. இது நம் உள்ளே இருக்கும் நல்லது, கெட்டது, பலம், பலவீனம் போன்றவற்றைத் தெளிவாய் புரிந்துகொண்டால் மட்டுமே மற்றவர்களை எளிதாக வழிநடத்த முடியும்.

நம் செய்யும் வேலையை ரசித்து செய்யும் போது தானகவே அது வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும். வேலையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து அதை அன்றாட பணிகளில் ஈடுபடுத்தி கொள்வதும் அவசியம். சில அடிப்படை தேவைகளான கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், வழிகாட்டுதல், பணிவு, சிக்கல்களை தீர்க்கும் வல்லமை, இலக்கு நோக்கிய தேடல், புதுமைக்கு வரவேற்பு போன்ற திறமைகள் மிக அவசியம்.

1. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்

எப்போதும் டல்லான முகத்தோடு இருக்காமல் பிரெஷாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். நம் தோற்றம் நம்மை பற்றிய நல்லதொரு ஆளுமையை கட்டாயம் வெளிப்படுத்தும்.

நிறுவனத்தின் குறிக்கோளை சரியான முறையில் சக ஊழியர்களுக்கு வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள், அது இமெயில், டீம் மீட்டிங், பாடி லாங்குவேஜ், என எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்.

2. வழிகாட்டி

எல்லோருடைய முன்னேற்றமும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம், தோழமை உணர்வை வேலை பார்க்கும் இடத்தில் கொண்டுவரத் தெரிந்தவரே உண்மையான லீடராக திகழமுடியும்.

எனவே பணிபுரியும் இடத்தில் சிறு, சிறு தவறுகளை தவிர்த்தாலே நம் வழிகாட்டலை ஏற்க நம்மை சுற்றி ஒரு பெரும் கூட்டமே காத்துக்கொண்டிருக்கும்.

 

3.தோழமை உணர்வு

பொதுவாக தனிநபர்களின் திறன்களைப் பொறுத்தவரை, நம்மோடு பணி புரிபவர்களில் 10 சதவிகிதமாவது அடிமட்டத்தில் இருப்பவர்களாக இருப்பர்.

அவர்களை எப்படி பயன் படுத்தலாம் என்று யோசிப்பதை தவிர்த்து, அவர்களை பிரச்னைகளாக மட்டுமே  பார்ப்பது நம் வேலைகளை முழுமையாக முடக்கிவிடும்.

அதிகாரத்தால் நம் ஒரு செயலை கட்டுப்படுத்தினால் அது தாற்காலிக தீர்வாக மட்டுமே அமையும். எனவே அதிகாரத்தைப் புத்திசாலித் தனமாக உபயோகிப்பதே ஒரு உண்மையான லீடருக்கான அடையாளமாக திகழும்.

 

4. உண்மைக்கு பச்சைக்கொடி

பொதுவாக திறமையில்லாத லீடர்கள் போட்டி உருவானால் அதை அழிக்கவே முயல்வார்கள். உண்மையான லீடர்களோ போட்டியை வரவேற்பார்கள். ஏனென்றால், போட்டியே உண்மையான திறனை வெளிக்கொண்டுவரும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.

திறமையை எப்படி வெளிக்கொண்டு வருவது என்றால் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மாறுபட்ட பணி வாய்ப்புகளை வழங்குதல், இதில் அவர்களின் தனி திறனை அறிந்து கொள்ளலாம். திறமைக்கு மதிப்பு கொடுத்து பழக கற்றுக்கொள்ளுங்கள்.

 

5.புத்திசாலித்தனம்

பிரச்னைகளின் ஆணிவேர் எது என்பதை சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியம். இது தெரிந்துவிட்டால் எனர்ஜியும் நேரமும் பெருமளவில் சேமிக்கப்படும்.

புத்திசாலித்தனமான தெளிவை உண்மையான லீடர்கள் எப்போதும் தன்வசம் கொண்டிருக்க வேண்டும். மாற்று சிந்தனை, தெளிவான கண்ணோட்டம், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுதல் போன்ற திறமைகளையும் மெருகேற்றுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

6. இலக்கு

தனிமனித நடத்தை என்பதில் உயரிய வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்பவர்களே உண்மையான லீடர்கள். நிறுவனத்தின் இலக்கு என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் மட்டுமே நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சரியான மாலுமியாக செயல்பட முடியும்.

இலக்குகளை எப்படி தீர்மானிப்பது? என்ற கேள்வி எழுந்தால் எழுத பழகுங்கள், எழுதியதோடு நின்று விடாமல் எழுதியதை செயல்படுத்துங்கள். எந்த ஒரு வேலையானலும் டெட் லைன் பிக்ஸ் பண்ணுங்க. அது உங்களின் வெற்றிக்கான பாதையாக மாறும்.

 

7.புதுமைகளை புகுத்துதல்

நமது வேலைகளின் சுமையை குறைக்க புதுமை புகுத்த கற்றுக்கொள்ளுங்கள். ஸ்மார்ட்டாக வேலை வாங்க கற்றுக்கொள்ளுங்கள். அண்மையில் எடுத்த கணக்கெடுப்பின் படி 92 சதவிகித வெற்றியாளர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் புதுமையை புகுத்தியவர்களாக அறியப்பட்டுள்ளனர்.

8. நம்பிக்கை

ஒரு நிறுவனத்தின் தலைவிதி அதன் ஊழியர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.  நிறுவனம் என்னும் கப்பலை ஊழியர்களை கொண்டு சரியான திசையில் எவ்வாறு இயக்குவது என்பதை உண்மையான லீடர்கள் முழுமையாக உணர்ந்திருப்பார்கள். சரியான ஆளுமைகளின் வழிகாட்டால்கள் எப்போதும் தோற்றதாக ஒருபோதும் சரித்திரம் இல்லை.

 

English summary
Want to step into a leadership role at work or develop your skills as a leader?

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia