வேலை செய்யும் இடத்தில் வேலையாட்கள் துன்புறுத்தப்படும் விதங்கள்

By Gowtham Dhavamani

வேலை செய்யும் இடத்தில் நிகழும் துன்புறுத்தல்களில் பல விதம் உண்டு. பாலியல், மதம், இனம் தொடர்பாக வார்த்தைகள் மூலமாக, உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அது தவறாகும்.

பணியிட துன்புறுத்தலின் விளக்கம்:

வேலை செய்யும் இடத்தில் வேலையாட்கள் துன்புறுத்தப்படும் விதங்கள்

1964 வருட குடியியல் உரிமை சட்டத்தின் , தலைப்பு VIIகீழ் பணியிட துன்புறுத்தல் என்பது ஒரு வித பாகுபாடு காட்டுவதாகும்.

சரிசம வேலைவாய்ப்பு ஆணையம் பணியிட துன்புறுத்தலை, இனம், மொழி, மதம், பாலியியல், தேசம் வயது தொடர்பாக உடல் ரீதியாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ ஒருவரை

துன்புறுத்துவது என விவரிக்கின்றது.

துன்புறுத்தல் சட்டத்திற்கு புறம்பானதாக மாறும் தருணம் :

துன்புறுத்தல் சட்டத்திற்கு புறம்பானதாக மாறும் தருணம் :

1. தொடர்ந்து அவ்விடத்தில் வேலை செய்வதற்கு இயலாதவாறு அழுத்தம் ஏற்படும்போது,

2. சாதாரண மனிதன், அவ்விடத்தில் வேலை செய்ய முடியாத என கருதும் வண்ணம், பயமுறுத்தல், மிரட்டல், பகைமை தன்மை உள்ள சூழலாக மாறும் போது. மேலதிகாரியின்

துன்புறுத்தலின் காரணமாக சம்பளம் குறையும் போதோ, அவரின் மரியாதை குறையும் போதோ, அது சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படும்.

 

 

கூடுதல் வேலையிட துன்புறுத்தல்

கூடுதல் வேலையிட துன்புறுத்தல்

சில மாகாணங்களில் ஒருவர் புகைபிடிப்பவரா இல்லையா என்பதை வைத்து பாகுபாடு பார்ப்பதோ இல்லை துன்புறுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விஸ்காஸின் மற்றும்

நியூயார்க் மாகாணங்களில் சில நிறுவனங்களும் தனிநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை வைத்தோ சிறையில் அடைக்கப்பட்டதை வைத்தோ அவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவது

மற்றும் அவர்கள் துன்புறுத்தப்படுவது தவறு என சட்டங்கள் உள்ளன.

கொலம்பியா மாகாணத்தில் திருமணம், வெளிப்புறத்தோற்றம், குடும்ப பொறுப்புகள், அரசியல் சார்புகள் இவற்றை பொருத்தும் பாகுபாடு காட்டுவதும் துன்புறுத்தப்படுவதும் குற்றமாகும்.

 

பணியிட துன்புறுத்தலில் உள்ள கூறுகள் :
 

பணியிட துன்புறுத்தலில் உள்ள கூறுகள் :

வேலைசெய்யும் இடத்தில், நம்ம பற்றி கிண்டல் கேலி, பட்டப்பெயர் வைத்து அழைப்பது, உடல் ரீதியாக, மனோரீதியாக அவமதிப்பது, துன்புறுத்துவது, தவறான புகைப்படங்கள் மூலம்

மிரட்டப்படுவது என பணியிட துன்புறுத்தலில் பல கூறுகள் உள்ளன.

எதிர் பாலினம் துன்புறுத்தப்படுவது மட்டுமின்றி, ஒரே பாலினத்தால் துன்புறுத்தப்படுவதும் பணியிட துன்புறுத்தலில் சேரும்.

உங்களை துன்புறுத்துபவர் உங்கள் முதலாளியாகவோ, உங்கள் மேல் அதிகாரியாகவோ, வேறு துறை அதிகாரியாகவோ, உங்களோடு சேர்ந்து வேலை செய்பவராகவோ அல்லது உங்கள்

நிறுவனத்தில் வேலை செய்யாதவராகவோ கூட இருக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பாதிக்கப்பட்டவர் துன்புறுத்தலுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டிய அவசியம்

இல்லை. அந்த துன்புறுத்தல் நடத்தையினால் அவதியுற்ற எவராயினும் அவரும் பாதிக்கப்பட்டவரே.

சரியான ஒரு துன்புறுத்தல் தொடர்பான புகார் பதிவுசெய்யப்பட்ட, உங்களது முதலாளி அல்லது நிறுவனம், துன்புறுத்துபவரின் நடத்தையை மாற்றி அமைக்க முயற்சி எடுத்து, அதை அந்த

நபர் புறக்கணித்ததை ஆதாரத்தோடு நிரூபிக்கவேண்டும்.

சில மாகாணங்களில் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்கள் மிகக்கடுமையாக உள்ளன. புளோரிடா மாகாணத்தில் ஒரு நீதிமன்றம், அதிக எடையோடு இருப்பதை பற்றி கிண்டல்

செய்ததை, உடலூனமுற்றோர் சட்டத்தை மீறியதாக கூறி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் நீயு ஜெர்சி மாகாணத்தில் சர்க்கரை நோய் பற்றி பேசியதை, உடல் ஊனமுற்றோரை துன்புறுத்தல்

சட்டத்தின் கீழ் பதிவு செய்து தண்டனை வழங்கியது.

 

நேர்காணலின் போது துன்புறுத்தப்படுவது:

நேர்காணலின் போது துன்புறுத்தப்படுவது:

பணியிடத்தில் நிகழும் துன்புறுத்தல் தாண்டி, பணிக்கு சேர நேர்காணலின் போதே நிகழும் வாய்ப்புகள் உள்ளன. நேர்காணலின் போது, வேலைக்கு விண்ணப்பித்தவரின், இனம், பாலியல்,

மதம், வயது, உடல் ஊனம், பின்புலம், அல்லது கலவியல் விருப்பம் பற்றி கேட்பது கூடாது. இவை பற்றிய கேள்விகளுக்கும் வேலையை நீங்கள் செய்வதற்கு தேவையான திறமை

உங்களுக்கு உள்ளதா என்பதை நிர்ணையிப்பதற்கும் தொடர்பு இல்லை.

 

பணியிட துன்புறுத்தலுக்கு உதாரணம் :

பணியிட துன்புறுத்தலுக்கு உதாரணம் :

1.பெட்ரா பணியிட துன்புறுத்தலுக்கு ஆளானார். அவரது முதலாளி மீண்டும் மீண்டும் அவரது நாட்டை பற்றியும், அவரது வேலையை பற்றி எதிர்மறையான கருத்துக்களை அவரது நாட்டின்

பாரம்பரியத்தோடு தொடர்புபடுத்தி துன்புறுத்தி வந்துள்ளார்.

2. சரியான தகுதி இருந்தும், தனக்கு வரவேற்பாளர் வேலை மட்டுமே வழங்கப்பட்டது. காரணம் தன்னுடைய முதலாளி வரவேற்பறையில் அழகான ஒரு பெண் இருக்கவேண்டும் என கூறி

தனக்கு பதவி உயர்வை மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

3. பாணி பணியிட துன்புறுத்தலுக்கு அவரது மேலதிகாரியினால் உட்படுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவரோடு மது அருந்த அழைத்ததோடு மட்டுமல்லாது, தனக்கு ஏற்றவாறு நடந்து

கொண்டால் நிறுவனத்தில் மேலும் மேலும் உயர இயலும் என கூறியுள்ளார்.

4. ஜேன் பணியிட துன்புறுத்தலுக்கு அவரது சகபணியாளர்களால் ஆளானார். அவரது கலவியல் பற்றிய தகவல்களை வைத்து அவரை மற்றவர்கள் கிண்டல் செய்து வர, தனக்கு நெருங்கிய

ஒருவர் மூலம் தனது எதிர்ப்பை ஜேன் தெரிவிக்க, மற்றவர்கள் தங்கள் கிண்டலை நிறுத்திக்கொண்டனர்.

 

 

பணியிட துன்புறுத்தலை எதிர்கொள்ளும் முறை :

பணியிட துன்புறுத்தலை எதிர்கொள்ளும் முறை :

சரிசம பணிவாய்ப்பு ஆணையம் பணியிட துன்புறுத்தலை எதிர்கொள்ள சில சட்டதிட்டங்களை அமல்படுத்தியுள்ளனர். தங்களது உரிமை மீறப்பட்டதாக கருதும் எவரும் இந்த

ஆணையத்தோடு புகார் பதிவு செய்யலாம்.

ஆனால் அவ்வாறு செய்யும் முன்பு சிக்கலை நிறுவனத்தில் வைத்தே தீர்க்க முயற்சிக்க வேண்டும். முதலில் சிக்கல் எவருடனோ அவரோடு நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

எதனால் நீங்கள் பாதிக்க பட்டுள்ளீர்களோ, அதனை அவர்களுக்கு விளக்கி கூற வேண்டும். அதோடு நில்லாமல், உங்கள் மேலதிகாரியை தொடர்பு கொண்டு துன்புறுத்தல் பற்றியும்

துன்புறுத்துபவர் பற்றியும் தெளிவாக கூறவேண்டும்.

மேலதிகாரிதான் துன்புறுத்துபவராக இருந்தால் உங்கள் நிறுவனத்தின் மனிதவள துறையை நீங்கள் நாட வேண்டும் அல்லது உங்கள் மேலதிகாரிக்கும் மேல் உள்ள அதிகாரியை நாடி

உங்கள் மனவருத்தத்தை தெரிவிக்கலாம்.

 

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Types of Harassment in Workplace
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X