உங்கள் ஆபீஸ்லயும் இப்படியான 6 அடிமைகள் இருக்காங்களா?

Posted By: Gowtham Dhavamani

ஒவ்வொரு அலுவலகத்துலையும் குறஞ்ச பட்சம் 6 வகையான மனிதர்கள நாம பாக்கலாம். என்ன கேட்டீங்கனா, ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொப்பி கொடுத்துடுவேன். அப்படி பண்றதால யாரு எப்படி பட்ட ஆளுங்கன்னு கண்டுபிடிச்சிடலாம். ஆனா இந்த ஹச்.ஆர் அதுக்கு ஒதுக்க மாட்டாங். ஒரு சில விதிமுறைகள் வச்சிருக்காங்க. நம்ம பாணில கொண்டு போக முடியாது.

சரி அது போகட்டும். இந்த தொப்பிகள விட்டு தள்ளுவோம். நா உங்களுக்கு பல வகைப்பட்ட சகமக்கள அறிமுகபடுத்தி வைக்கிறேன் வாங்க.

மீட்டிங் பைத்தியம்:

இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்களே, டீம் மீட்டிங் போட்டு டீம் லன்ச்க்கு என்ன பிசா சாப்பிடலாம்னு முடிவு பண்ணுவாங்க. அப்போ வர கோவத்துக்கு ஒண்ணு உங்க தலைய பிச்சிக்கலாமான்னு இருக்கும் இல்ல அவன் தலைய உடச்சிடலாமான்னு கூட தோணும் .

பிசா மேல பரப்பி இருக்குறதெல்லாம் மதிப்பிட பட்டியல் தேவைபடுமா என்ன? ஆனா இந்த மாதிரி ஆளுங்க அதுக்கும் ஈமெயில் காலண்டர் ல விண்ணப்பம் போட்டு விட்ருவாங்க. ஏதாவது முக்கியமான வேலை பாத்துட்டுருக்கும் போது தான், சாலைல சிகப்பு குறி போட்டு வண்டிய நிறுத்துற மாதிரி வந்து நிக்கும். சில நேரம் ராத்திரி கனவுல கூட வந்து கடுப்பேத்தும்.

 

குழப்பவாதி :

இந்த நல்லவர் இருக்காரே, ஒரு ஈமெயில் அனுப்பிட்டு உங்க கைபேசிக்கு தகவல் அனுப்புவாரு, கூப்பிட்டு பேசுவாரு அவளோ ஏன் நேர்லயே வந்து கூட சொல்லி இம்சை பண்ணுவாரு. ஈமெயில் பார்த்துட்டு பதில் சொல்லமாட்டானான்னு கேட்ட ஈமெயில் பாக்காம போய்ட்டீங்கன்னானு கேப்பாங்க.

வாயாடிகளின் அரசி:

இந்த மாதிரி வாயாடி இருக்காங்களே , நம்ம எப்படா கண்ணுல சிக்குவோம்னு காத்துட்ருப்பாங்க. நடைபாதைல ஆரம்பிச்சி சாப்புடுற இடம்,கழிப்பிடம்னு ஒரு இடத்துலயும் நம்மள விட்டு வைக்க மாட்டாங்க. பேசிட்டே இருப்பாங்க நிறுத்தாம புதுசு புதுசா வம்பு பேசுவாங்க. அப்படி 5 நிமிஷத்துக்கு மேல வம்பு போச்சுன்னா நம்ம மனசுக்குள்ளயே சாக்லேட் சாப்புடுற மாதிரி நினைச்சிட்டு நிக்க வேண்டி தான் . ஆனா ஒவ்வொரு தடவையும் அந்த கற்பனை சாக்லேட் ருசியா தான் இருக்கும்.

கடமை மான்கள்:

இந்த மாதிரியான கடமை மான்கள் நம்ம அலுவலகத்துல காலைல வரும் போதும் சாயங்காலம் போகும் போதும் கண்டிப்பா பாத்திருப்போம். ஒன்னு ரெண்டு தடவ தான் கதவை திறந்து போயிருப்பாங்க மத்தபடி அவங்க இடத்துலேந்து நகர மாட்டாங்க. லேப்டாப் கீபோர்டுல கை வச்சிட்டாங்கன்னா அந்த மேஜையே டான்ஸ் ஆடும். எப்பயுமே வேல பார்த்துட்டே இருப்பாங்க. மதியம் சாப்பாட்டு கூட எல்லாரும் சாப்பிட்டு முடிச்சோனே தான் வருவாங்க.எப்பயும் முகத்தை அழுத்தமா வச்சிப்பாங்க. அவங்கள பாக்கும் போது தூக்கத்துல நடக்குறவங்க தான் நெனப்புக்கு வருவாங்க .

டப்பா பங்காளி :

இவங்கள மாதிரி ஒருத்தர கண்டிப்பா நாம எல்லாருமே பாத்துருப்போம்.எங்க சாப்பாடு டப்பா பார்த்தாலும் அவங்க கண்ணு தன்னால டப்பா நோக்கி போயிடும். சாப்பாடா பார்த்துட்டே சொல்லுவாங்க "ப்பாபா...உன் சாப்பாடு வாசம் மூக்கை தொலைக்குது"ன்னு பங்குக்கு வந்து நிப்பாங்க. இவங்களுக்கு பயந்துட்டே நாம ஒளிஞ்சு ஒளிஞ்சு சாப்ட வேண்டியதா இருக்கும்.

நேர நேசமணி:

இந்த அற்புதமான ஜீவன் இருக்காங்களே காலைல சரியா 9 மணிக்கு உள்ள வந்தாங்கன்னா சாயங்காலம் 5 மணிக்கு சரியா கெளம்பிடுவாங்க. அலுவலகம் நேரம் தவிர மத்த நேரத்துல கைபேசிக்கு கூப்பிட்டா கூட எடுக்க மாட்டாங்க. ஆனா இவங்க முதலாளிய கைகுள்ள வச்சிருப்பாங்க. இவங்கள மாதிரி நம்மளும் நேரத்துக்கு வந்துட்டு போகணும் நெனச்சி 5.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு கெளம்புனா ஊரே நம்மள தான் பாத்துட்ருக்கும். சரின்னு அதையும் தாண்டி வெளில போனா செக்யூரிட்டி நம்மள பார்த்து கேப்பாரு "பாதி நாள் விடுப்பானு". தேவை தான் நமக்குன்னு நொந்துக்க வேண்டி தான்!

English summary
Types of Colleagues

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia