பப்ஜி - இந்த ரகசியம் எல்லாம் தெரிந்தால் நீங்கள் தான் டாப்..!

இன்று நாம் எங்கு சென்றாலும் நம் காதில் ஒலிப்பது பப்ஜி என்னும் ஒற்றைச் சொல் தான். சமீப ஆண்டுகளாக கையில் ஆன்ரைடு போன்ற ஸ்மார்ட் போன்களின் தாக்கம் மாபெரும் புரட்சியை செய்துள்ளது என்றால் அவற்றிற்குள்ளேயே நடைபெற்று வரும் புரட்சி தான் இந்த பப்ஜி விளையாட்டு.

பப்ஜி - இந்த ரகசியம் எல்லாம் தெரிந்தால் நீங்கள் தான் டாப்..!

 

ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இல்லை, இன்று அந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் விளையாடப்பட்டு வரும் இந்த பப்ஜி கேம் குறித்த உண்மையான தகவலும், இதனை உருவாக்கியவர் குறித்த விசயமும் வியப்படையச் செய்கிறது.

பப்ஜி


மேலே கூறியது போல ஒரு நாட்டில் சராசரியாக 90 முதல் 95 சதவிகிதம் பேர் ஸ்மார்ட் போன் பயனாளர்களாக உள்ளனர். அவற்றில் இளைஞர்கள் பெரும்பாலும் கைப்பேசியில் விளையாட்டுப் பிரியர் எனலாம். இதில் வியப்பூட்டக்கூடிய விசயம், ஸ்மார்ட் போனில் ஆயிரக்கணக்கான ஷூட்டிங் மற்றும் ஆக்‌ஷன் விளையாட்டுகள் இருந்தும் அவை பெரிதாக வெற்றியடையவில்லை. ஆனால், பப்ஜி இவை அனைத்தையும் தகர்த்தெரிந்து இன்று உலகம் முழுவதும் விளையாடக் கூடிய ஒரு விளையாட்டாக வளர்ந்துள்ளது.

பிலேயர் அன்னௌன் பேட்டில் கிரவுன்டு


பிலேயர் அன்னௌன் பேட்டில் கிரவுன்டு (PlayerUnknown's Battlegrounds) இதன் சுருக்கமே பப்ஜி. ஓர் தீவில் முகம் தெரியாத நபர்களுடன் ஒரே அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களிடம் போரிட வேண்டும். இதுதான், பப்ஜி விளையாட்டின் விதி முறை. பார்த்தாலே மிரள வைக்கும் கிராஃபிக்ஸ், தீவிற்க உரிய அனைத்து அம்சங்கள், விதவிதமான ஆயுதங்கள், உடைகள், அவ்வப்போது உயிர் காக்க உதவும் ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ இதன் வெற்றிக்கு இதுவும் ஓர் காரணம்.

கற்பனை உலகம்


மொபைல் போன் விளையாட்டு, கணினி விளையாட்டு உள்ளிட்டவை எல்லாம் குறிப்பிட்ட துறையில் படித்து, அதற்காக தங்களை தயார்படுத்தி தேர்ச்சியடைந்து கண்டறிந்தவர்களாக இருப்பர். ஆனால், இங்கே பப்ஜி விளையாட்டைக் கண்டுபிடித்தவர் தனக்கென ஓர் உந்துவிசையினையும், உலகினையும் கொண்டு கற்பனையான சிந்திக்கும் விசயத்தினைக் கொண்டே உருவாக்கியுள்ளார்.

கண்டுபிடித்தவர் யார் ?


பப்ஜி கேமைக் கண்டுபிடித்தவர் 1976ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த பிரண்டன் கிரீன் ஆவார். சிறுவயது முதலே பெற்றோர்களின் கருத்துவேறுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாக சகஜமான வாழ்வை இழந்து தனக்கென ஓர் உலகத்தை கற்பனையாக உருவாக்கி அவற்றிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இதுவே பப்ஜி உருவாகியதன் அடிப்படையாக இருந்துள்ளது.

இதுதான் காரணம்..!


பிரண்டன் கிரீன், ஆரம்ப காலத்தில் நன்றாக படிக்கும் முதல் மாணவராகவும் இல்லாமல், அதே நேரத்தில் கற்றல் குறைபாடுள்ள மாணவராகவும் இல்லாமல் சராசரி தேர்ச்சி மாணவராகவே இருந்துள்ளார். ஆனால், அதற்கடுத்து ஏற்பட்ட மாற்றம் இவரை இன்று உலகம் அறியச் செய்துள்ளது. பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்து பயணித்த துறை புகைப்படம் எடுத்தல்.

விலங்கியல் புகைப்படக் கலைஞர்


குறிப்பிட்ட ஆண்டுகள் வரையில் பிரண்டன் கிரீன் புகைப்படக் கலைஞராக இருந்துள்ளார். அச்சமயத்தில் அவர் மேற்கொண்ட பயணம், தீவில் விலங்குகளைப் புகைப்படம் எடுக்க மேற்கொண்ட முயற்சிகள், இடர்பாடுகள் என ஒவ்வொன்றும் இவரது கற்பனைத் திறனை மேலும் ஊக்குவித்துள்ளது.

சிறிய சிறிய விளையாட்டுகள்


புகைப்படக் கலைஞராக இருந்த இவருக்கு காதலும் மலர்ந்து திருமணமும் நடைபெற்றுள்ளது. அப்போதுதான் தனது மனைவியுடன் அயர்லாந்தில் இருந்து பிரேசில் சென்றுள்ளார். அங்கே புகைப்படத் துறையிலேயே வேலையும் இவருக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து புகைப்படம் எடுக்க மேற்கொண்ட முயற்சிகளும், சிறுவயதில் ஏற்பட்ட தனிமையின் தாக்கம் இவரை பல விளையாட்டுக்களைக் கண்டுபிடிக்க ஊக்குவித்துள்ளது.

சோதனைகளைக் கடந்த விளையாட்டு


ஒருகட்டத்தில் வேலை, குடும்பம் என அனைத்தையும் மறந்து விளையாட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியுள்ளார் பிரண்டன் கிரீன். இதன் விளைவாக தனக்கென இருந்த வேலையையும், குடும்பத்தையும் அவருக்க இழக்க நேர்ந்தது. இவை மேலும் அவரை தனிமைப்படுத்த மீண்டும் அயர்லாந்து சென்று அங்கே பல புதிய விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளார். தொடர்ந்து கணினித் துறையிலும் கற்றுத் தேர்ந்தார்.

முகம் தெரியா நண்பர்


தான் உருவாக்கிய சிறு சிறு விளையாட்டுக்களை இலவசமாக இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளார் பிரண்டன் கிரீன். இதன் விளைவாகச் சோனி நிறுவனமே இவருக்கு வேலை வழங்கியுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தில் ஏற்பட்டு கருத்தவேறுபாடு காரணமாக வேலையை விட்டு வெளியேறிய பிரண்டன் கிரீன் ஒரு நாள் முகம் தெரியா நபருடன் நட்பு கொள்கிறார். அவர் கொரியாவைச் சேர்ந்த ஜாங் ஹான் கிம் ஆவார்.

இணைந்த கைகள்


தெற்கு கொரியாவில் கேம் நிறுவனம் வைத்து செயல்படுத்தி வருவர் ஜாங் ஹான் கிம். பிரண்டன் கிரீன் மற்றும் ஜாங் ஹான் கிம் இணைந்து கொரியாவில் புதிதாக ஒரு விளையாட்டை உருவாக்குகின்றனர். இதற்காக அவர்கள் வைத்துக் கொண்ட இலக்கு ஒரு வருடம்.

முழுமையடைந்த பப்ஜி


இம்முயற்சியில் இவர்களுடன் அந்த விளையாட்டு செயலியினை உருவாக்கவும், மேம்படுத்த உறுதுணையாக இருந்தவர்கள் சுமார் 35 பேர். சொல்லியது போலவே அதில் வெற்றியும் கண்டனர். அதுதான், பப்ஜி விளையாட்டு.

சாதிக்க வழிகள்


சராசரி வர்க்க மனிதராக இருந்த ஓர் மனிதர் முயற்சியின் மூலம் உலகமே அறிந்துகொள்ளக் கூடியவராகவும், கோடிஸ்வரராகவும் மாற முடியும் என்றால் அதற்கு பிரண்டன் கிரீன் சிறந்த ஊதாரணம் தான். நீங்களும், ஓர் கேம் கிரியேட்டர் ஆக வேண்டுமா ? நம் நாட்டில் எங்கெல்லாம் இத்துறைக்கான கல்வி நிறுவனம் உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் வீடியோ கேம்


நம் நாட்டைப் பொறுத்தவரையில் மருத்துவம், பொறியியல் என்ற காலகட்டம் மாறி அதிக வேலைவாய்ப்பும், கைநிறைய சம்பளமும் வழங்கும் துறையாக வளர்ச்சியடைந்து வருவது கேம்ஸ், விசுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன் போன்ற இத்துறையே. இதில் இந்தியாவில் தற்போதைய கேம்ஸ் இன்டஸ்ட்ரியின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் 2,000 ஆயிரம் கோடியாகும். இது பின் வரும் காலங்களில் இன்னும் அதிகரிப்பதோடு, இந்திய வியாபாரச் சந்தையின் முக்கிய துறைகளில் ஒன்றாகவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன துறைகள் ?


ஒரு விளையாட்டு செயலியினை உருவாக்குவது என்பது ஒரேஒரு குறிப்பிட்ட கல்வியினை மற்றும் கற்றுத் தேர்வது அல்ல. டிஜிட்டல் டூல்ஸான மாயா, மேக்ஸ், போட்டோஷாப், இசட் பிரஸ், சப்ஸ்டான்ஸ் டிசைனர் உள்ளிட்ட மென்பொருட்களை கையாளாக் கூடிய திறமையினையும் பெறுவதாகும்.

வேலை வாய்ப்புகள்


உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். தற்போது பப்ஜி போன்ற கேம் பிரபலமடையக் காரணமாக இருந்தது இந்த இளைஞர்கள் தானே. அப்படியானால், பிற்காலத்தில் நீங்கள் உருவாக்கும் கேம் இளைஞர்களின் மனநிலையுடன் ஒன்றிப் போவதாக இருந்தால் கட்டாயம் வேலை வெற்றி தான்.

எதை கற்க வேண்டும் ?


இந்த துறையில் நீங்கள் மேட்பட வேண்டும் என்றால் கூடவே சில திறன்களையும் பெற்றிருத்தல் அவசியம். அந்த வகையில், கேம் ஆர்டிஸ்ட், கேம் டெவலப்பர், கேம் டிகோடர், கேம் டெஸ்டர், ஆடியோ இன்ஜினீயர், 3டி மாடலர், கான்செப்ட் ஆர்டிஸ்ட், கேம் புரோகிராமர், சாப்ட்வேர் டெவலப்பர் உள்ளிட்ட திறன்களை நீங்கள் கற்க வேண்டும்.

இந்தியாவில் கேமிற்கான கல்வி நிறுவனங்கள்


 • தேசிய வடிவமைப்பு நிறுவனம் (NID ), அகமதாபாத்.
 • எம்ஏஇஇஆர்'ஸ் எம்ஐடி இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், புனே.
 • இந்தியன் ஸ்கூல் ஆப் டிசைன் & இனோவேஷன், மும்பை.
 • ஹால்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (HIM), ஹால்டியா.
 • ஆசிய இன்ஸ்டிடியூட் ஆப் கேம் & அனிமேஷன் (AIGM), பெங்களூரு.
 • தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிஜிட்டல் ஆர்ட் & அனிமேஷன் (ஐஐடிஏஏ), கொல்கத்தா.
 • கிரியேட்டிவ் மெண்டர்ஸ் அனிமேஷன் கல்லூரி (CMAC), ஹைதராபாத்.
 • செமேடு ஸ்கூல் ஆஃப் ப்ர-எக்ஸ்பிரஷியனிசம் (SSPE), புனே
 • இமேஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மல்டிமீடியா அனிமேஷன் & கிராஃபிக் எஃபெக்ட்ஸ் (IIMAGE ), ஹிமாயத் நகர் ஹைதராபாத்.
 • பேக் ஸ்டேஜ் பாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கேமிங் அண்ட் டெக்னாலஜி (BPIGT), ஹைதராபாத்.
 • டோன்ஸ் அகாடமி, திருவனந்தபுரம்.

 

அடிப்படைத் தகுதிகள் என்ன ?


 • கேம் டெவலப்மென்ட் ( லாஜிக் & ரீசனிங்)
 • கேம் டிசைன் (ஆர்ட் & விஷ்வலைசேஷைன்)
 • கேம் ஆர்ட் ( ஓவியம், கலர் கான்செப்ட், காட்சிப்படுத்தும் திறன்)
 • கேம் டெஸ்டிங் (லாஜிக் & எபோர்ட்)

 

உண்மை பிரதிபலிப்பு


ஏற்கனவே கூறியது போல ஒரு வீடியோ கேமினை உருவாக்குவது மக்களின் மனநிலையைச் சரியாக கொண்டு செல்லும் வகையில், கற்பனையை அப்படியே உண்மையாகக் கண் முன் கொண்டு வரும் திறனில் தான் அதன் வெற்றி உள்ளது. அதற்கு உங்களிடம் வேண்டிய திறன் அனிமேஷன். கணினியில் சரியான முறையில் அனிமேஷன் செய்தால் மட்டுமே அதனை பலரும் விரும்புவர்.

கிரியேட்டிவிட்டி


நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றை, அல்லது எளிதில் கிடைக்காத ஒன்றை கண் முன் நிறுத்தும் அம்சமே அனிமேஷன். அதை செய்ய முதலில் வேண்டியது கிரியேட்டிவிட்டியான ஒரு மனநிலை. உங்களது நண்பர்களை விட உங்களுக்கு இந்த கிரியேட்டிவிட்டி அதிகம் இருந்தால் தாராளமாக அனிமேஷன் துறையில் சாதித்து விடலாம்.

எங்கு படிக்கலாம் ?

 • நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (www.nid.edu.com)
 • ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் (www.zica.org)
 • இன்டெஸ்ட்ரியல் டிசைன் சென்டர் (IDC)
 • ஐஐடி மும்பை & குவஹாத்தி (http://www.iitb.ac.in/)
 • மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினிமேடிக்ஸ் (www.maacindia.com)
 • டோன்ஷ் அனிமேஷன் இந்தியா பிரைவேட். லிமிடெட் (www.toonzanimationindia.com)
 • அகாடமி ஆஃப் டிஜிட்டல் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் (www.http://academyofdigitalarts.com)
 • ராய் பல்கலைக்கழகம் (www.raiuniversity.edu)
 • அனிமாஸ்டர் (www.animaster.com)

 

ஹேக்கிங் துறை


தற்போதைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் புதிதாக எது கண்டுபிடிக்கப்பட்டு, அது வெற்றியினை அடையும் பட்சத்தில் வரும் இடர்பாடு உண்மையைப் போன்றே ஓர் போலி வெளியாவது தான். இதனைக் கட்டுப்படுத்தி வைக்கும் துறையே ஹேக்கிங் துறை ரீதியான படிப்புகள். கேம்ஸ் இன்டஸ்ட்ரியில் ஏதேனும் ஓர் துறையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றால் ஹேக்கிங் சிறந்த தேர்வாகக் கூட இருக்கலாம்.

ஹேக்கிங் பணி


எத்திக்கல் ஹேக்கர்களின் பணி என்பது, இணையத்தில் ஒரு தவறு நடப்பதற்கு முன்பாகவே, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, இணையவழி மற்றும் கணினி வழி நமது ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் ஆராய்ந்து பாதுகாப்பதாகும்.

எங்கே படிக்கலாம் ?


இளைஞர்களைப் பொருத்த வரையில் ஹேக்கிங் துறை மீதான ஆர்வம் சமீப காலமாகவே அதிகரித்துள்ளது எனலாம். இந்தியாவில், இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, கியூஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் நாலேஜ், கொல்கத்தாவில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங், டில்லியில் எத்திக்கல் ஹேக்கிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இது பயிற்றுவிக்கப்படுகிறது.

நீங்களும் வெற்றியாளர் தான்


ஒரு நிறுவனமே வேண்டாம் என ஒதுக்கிய சராசரி மனிதர் தனக்கான கற்பனைத் திறமையினைக் கொண்டு இன்று உலகமே வியக்கும் சாதனை படித்துள்ளார் என்றால் அது உங்களாலும் முடியும். கேம்ஸ் துறை குறித்தான படிப்பும், கற்பனைத் திறனும் நீங்கள் நினைத்த சம்பளத்தைப் பெற வழிவகுக்கும். விரும்பிப் படித்தல் மட்டுமே சாதிக்க முடியும். கற்றலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Top ideas to become a successful game creator Like PUBG
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more