உங்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் டாப் கம்ப்யூட்டர் படிப்புகள்

நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு தற்போது கம்ப்யூட்டர் படிப்புகள் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டன. கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளும், கம்ப்யூட்டர் தொடர்பான படிப்பைப் படிக்காதவர்களும் இல்லை என்ற நிலை உலகில் உள்ளது. எனவே, நமது கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் கம்ப்யூட்டர் படிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு கம்ப்யூட்டர் படிப்புகள் அதிகளவில் உருவாகியுள்ளன. இவற்றைப் படிப்பதன் மூலம் நாம் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு வளங்களை விட்டுச் செல்வதற்கும் ஏதுவாகிறது.

பொறியியல் படிப்பில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக மவுசு உள்ளது என்பது உண்மை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத்துறையில் தேக்க நிலை ஏற்பட்டபோதும்கூட மாணவர்கள் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் இணைவதை தவிர்த்துவிடவில்லை.

உங்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் டாப் கம்ப்யூட்டர் படிப்புகள்

பொறியியல் பாடப்பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் ஐ.டி. படிப்புகள் 'எவர் கிரீன்' படிப்புகள் என்று கூறப்படுகின்றன. இன்றைய உலகின் அனைத்து துறைகளும் கணினிமயமாகிவிட்ட சூழலில் இந்த 2 படிப்புகளுக்கும் எப்போதும் தேவை அதிகரித்துக் கொண்டே உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், டேட்டா ஸ்டிரக்சர், டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம், டிசைன் மற்றும் அனாலிசிஸ், ஜாவா மற்றும் இன்டர்நெட் புரோகிராமிங், ஆபரேட்டிங் சிஸ்டம், சாப்ட்வேர் இன்ஜினியரிங், மைக்ரோ புராசசர்ஸ் மற்றும் கண்ட்ரோலர்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் சிக்னல்

புராசசிங் முதலிய பாடங்கள் இடம்பெறுவதால் இதற்கு மவுசு அதிகம்

அதேபோல், பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடிப்பவர்கள், சாப்ட்வேர், எம்பெட்டட் சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டிங், நெட்வொர்க் மற்றும் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளிட்ட துறைகளிலும் தற்போது அதிக அளவில் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்ற முடியும். அவர்களுக்கு டெவலப்பர், குவாலிட்டி ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட், சாப்ட்வேர் இன்ஜினியர், டேட்டா பேஸ், சிஸ்டம் அனலிஸ்ட், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்படுகின்றன.

எனவே. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பவர்கள் வேலைவாய்ப்புகள் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. தற்போது அரசு துறைகள் அனைத்தும் வேகமாக கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால், மாணவர்களுக்கு அரசு பணிவாய்ப்புகளும் அதிக அளவில் உண்டு என்பது கண்கூடு. மேலும், பள்ளிகளில் ஆசிரியர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர், பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி என கற்பித்தல் துறைகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

இதைப் போலவே இவை சார்ந்த கம்ப்யூட்டர் படிப்புகளும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. உங்களின் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு செல்லப் போகும் கம்ப்யூட்டர் படிப்புகளை இங்கே காணலாம்...

1. வெப் டெவலப்மெண்ட் கோர்ஸ் (Web Development Course)

இன்றைய டிஜிட்டல் உலகில், ஒவ்வொரு வணிகத்துக்கும் டிஜிட்டல் ஸ்டோர்ஃபிரண்ட் தேவையாக உள்ளது. வலைத்தள மேம்பாடு (வெப் டெவலப்மெண்ட்) என்ற கம்ப்யூட்டர் படிப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது. மேலும் சிறந்த இணையதள வடிவமைப்பாளர்கள் தாங்கள் வடிவமைக்கும் ஒரு திட்டத்துக்காக பல லட்சங்களில் பணம் பெறுகின்றனர். மேலும், நீங்கள் சான்றிதழ் பெற்ற இணையதள டெவலப்பர்களாக இருந்தால், நீங்கள் ஃப்ரீலான்ஸிங்காக இந்தத் தொழிலைத் தொடரலாம். மேலும், உங்களுக்குச் சொந்தமாக வெப் டெவலப்மெண்ட் கோர்ஸ்கள் பயிலும் ஏஜென்சியையும் உருவாக்க முடியும்.

வெப் டெவலப்பர்கள்3 வகையாக பிரிக்கப்படுகின்றனர்.

அவை: ஃபிரண்ட் என்ட் டெவலப்பர்கள் - ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பர்கள் - வெப் டெவலப்பர்கள், இணையதளத்தின் வரைகலை பயனராக இருப்பார் ( இறுதிப் பயனர் பார்க்கக்கூடிய மற்றும் தொடர்புகொள்ளக்கூடிய இணையதளத்தின் பகுதி).

பேக் எண்ட் டெவலப்பர்கள் - இவர்கள், வலைத்தளங்களின் லாஜிக்கல் பேக்-எண்ட் பக்கத்தை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள் (தரவுத்தளங்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பயனர் செயல்களின் அடிப்படையில் பிரகாசமான காட்சிகளைத் தொடங்குதல் போன்றவை இதில் அடங்கும்). ஃபுல்-ஸ்டாக் டெவலப்பர்கள் - ஃபிரணட் என்ட் மற்றும் பேக் என்ட் துறையில் போதுமான பயிற்சி பெற்ற வலை உருவாக்குநர்களாக இவர்கள் இருப்பர்.
எனவே, நீங்கள் இதில் எந்த அம்சத்தில் தேர்ச்சி பெற விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

உங்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் டாப் கம்ப்யூட்டர் படிப்புகள்

2. சைபர் செக்யூரிட்டி படிப்புகள் (Cyber Security Courses)

இணைய பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) வல்லுநர்கள் என்று அழைக்கப்படும் இவர்களுக்கு அதிக மவுசு உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் இந்தப் படிப்பு மிகவும் தேவைப்படும் படிப்புகளில் ஒன்றாக உள்ளது.

இந்தத் துறை அடுத்த ஏழு ஆண்டுகளில் 31% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சைபர் செக்யூரிட்டி வேலைகள் மிகவும் ஆரோக்கியமான வேகத்தில் வளர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மற்ற தொழில்களுக்கான சராசரி வளர்ச்சி 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.

உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் வெளிப்படும் டிஜிட்டல் இருப்பின் அளவு அதிகரித்து வருவதால், அவற்றின் தரவுகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று கருதப்படுகிறது.

நெட்வொர்க்கில் பாதுகாப்பற்றதாக இருக்கும் முக்கியமான தரவு வணிக நிறுவனங்களுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கும். இதனால்தான் இணைய பாதுகாப்பு அதிக வேகத்தை பெற்றுள்ளது.

எனவே, சைபர் செக்யூரிட்டி தொடர்பான படிப்புகளை பயில்வது மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.

உங்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் டாப் கம்ப்யூட்டர் படிப்புகள்

3. ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் படிப்பு (Artificial Intelligence)

அதிகரித்து வரும் பெரிய தரவுகளால் கிடைக்கும் நன்மை, மெஷின் லேர்னிங்கின் விரைவான வளர்ச்சி போன்றவற்றைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏஐ) தேவைப்படுகிறது. இது ஏஐ சார்ந்த வணிகங்களின் எண்ணிக்கையில் கூடுதலான அதிகரிப்புக்கு சாட்சியாக உள்ளது.

இந்தத் துறையில் பெருகி வரும் முன்னேற்றங்கள் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இணையத்தின் தொடக்கத்திலிருந்து மனிதகுலத்துக்கு நிகழக்கூடிய மிக முக்கியமான விஷயமாக ஏஐ துறை கருதப்படுகிறது. இயற்கையாகவே, செயற்கை நுண்ணறிவு பொறியாளர்களுக்கான தேவையும் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக உள்ளது. மெட்டா, கூகுள், நெட்பிளிக்ஸ், அமேசான், ஆப்பிள், வால்மால்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் முதற்கொண்டு தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்கள் வரை அனைவரும் சான்றளிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிபுணரைத் தேடுகின்றனர். எனவே, ஏஐ சார்ந்த படிப்புகளை மேற்கொள்வது மாணவர்களுக்கு நிச்சயம் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்.

செயற்கை நுண்ணறிவு ஒரு பரந்த களமாக உள்ளது. இருந்தபோதும், ஆழ்ந்த கற்றல் மற்றும் செயற்கை நியூரல் நெட்வொர்க்குகள் போன்ற பல்வேறு துணை பிரிவுகள் மூலம் விரைவில் ஏராளமான வாய்ப்புகளை ஏஐ பெற்றுள்ளது.

எனவே, மாணவர்கள் ஏஐ சார்ந்த கம்ப்யூட்டர் படிப்புகளை மேற்கொள்வது அவர்களது எதிர்கால வேலைவாய்ப்பினை உறுதி செய்யும்.

4. சாஃப்ட்வேர் மற்றும் புரோகிராமிங் லேங்குவேஜ் படிப்புகள் (Software and programming language)

கணினி உலகில் லாஜிக் விதிகள் மிக உயர்ந்தவையாக கருதப்படுகின்றன. மனிதர்களைப் போன்று அல்லாமல், கணினிகள் உணர்ச்சிககளால் நிரப்பப்படவில்லை. அவை தரவுகளை ஒரு பக்கமாகவோ அல்லது இன்னொரு பக்கமாகவோ மாற்றக்கூடும். இந்த காரணத்தினாலேயே மக்கள் அன்றாடம் செய்யும் பல சர்வசாதாரணமான வேலைகளை நொடிப்பொழுதில் கணினிகளிடம் ஒப்படைத்து விடுகின்றனர். கல்விப் பின்னணி எதுவாக இருந்தாலும், எந்தத் துறையிலும் அடிப்படை புரோகிராமிங் திறன்கள் மிகவும் பாராட்டப்படுகின்றன.

பைதான் மற்றும் ஜாவா போன்ற கம்ப்யூட்டர் புரோகிராமிங் லேங்குவேஜ் படிப்புகள் மிகவும் அவசியமானவர். வங்கியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த படிப்புகள் மிகவும் அவசியமாக உள்ளது. இதைத் தவிர்த்து அவர்கள் அந்தத் துறையில் அவர்களால் செயல்பட முடியாது. ஏனென்றால், உலகளவில் கணினிகளின் பயன்பாட்டில் அதிக அளவு எழுச்சியை நாம் கண்டுள்ளோம். மேலும், எல்லாவற்றையும் தானியக்கம் செய்வதற்கு நிலையான தேவை ஏற்பட்டுள்ளது.

புரோகிராமிங் மொழிகள் தொடர்பான கம்ப்யூட்டர் படிப்புகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் போன்ற அனைத்து மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளுக்கும் அடித்தளமாகிவிட்டன. பல்வேறு பள்ளிகள் மாணவர்களை ஐடி துறையில் பெரிதாக மாற்றும் வகையில் பாடத்திட்டத்தில் புரோகிராமிங் லேங்குவேஜ் கம்ப்யூட்டர் படிப்புகளை இணைக்கத் தொடங்கியுள்ளன.

உங்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் டாப் கம்ப்யூட்டர் படிப்புகள்

5. கிளவுட் கம்ப்யூட்டிங் படிப்பு (Cloud Computing Course)

பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகமான வணிகங்கள் டிஜிட்டல் தரவு சேமிப்பு மற்றும் தரவுத்தள நிர்வாகத்தை நம்பத் தொடங்கியுள்ளன. எனவே, சேமிப்பக இடத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, கிளவுட் சேமிப்பகத்தை விட சிறந்த தீர்வு என்னவாக இருக்க முடியும்?

ஆபத்தான அதிவேக விகிதத்தில் பிரபலமடைந்து வரும் மற்றொரு துறையாக கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளது. சிறந்த தரவு கையாளுதல் தீர்வுகளின் தேவையின் காரணமாக இவ்வாறு இந்த துறை வளர்ச்சி பெற்றுள்ளது. இது சர்வர்கள், சேமிப்பகம், தரவுத்தளங்கள், நெட்வொர்க்கிங், மென்பொருள், பகுப்பாய்வு மற்றும் இணையத்தில் உள்ள நுண்ணறிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் உள்ளடக்கிய துறையாக உள்ளது. இந்தத் துறையில் சிறப்பான பயிற்சி, பட்டம் பெறும்போது உங்களை பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

பிரைவேட் கிளவுட், பப்ளிக் கிளவுட், ஹைப்பிரிட் கிளவுட் என 3 வகையாக இது பிரிக்கப்பட்டுள்ளது. கிளவுட் கம்ப்யூட்டிங் படிப்புகள் உங்களை நிச்சயம் பெரிய உயரத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

6. டேட்டா சயின்ஸ் படிப்புகள் (Data Science)

நீங்கள் எந்த வேலை போர்ட்டலையும் பயன்படுத்துபவராக இருந்தால் தரவு பகுப்பாய்வுகளின் கலை மற்றும் அறிவியலுக்கு குறிப்பிடத்தக்க தேவை உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பெரிய, சிறிய மற்றும் இந்திய நிறுவனங்கள், தரவு ஆய்வாளர்களைத் தேடி வருகின்றன. நீங்கள் புள்ளியியல் மற்றும் கணினி அறிவியலை விரும்பும் ஒருவராக இருந்தால், டேட்டா சயின்ஸ் என்பது உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தொழில் படிப்பாகும். இந்த டேட்டா சயின்ஸ் கம்ப்யூட்டர் படிப்பை நீங்கல் பயிலும் போது உங்களது எதிர்காலத்தை அது வளமானதாக மாற்றும்.

7. ஆன்-லைன் டெவ்ஓப்ஸ் படிப்புகள் (Online App Development)

பெரிய மற்றும் சிறிய வணிகங்கள் தங்களுக்குக் கிடைக்கும் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதால், டெவ்ஓப்ஸ் (DevOps) இன்ஜினியர்கள் உலகளவில் அதிக ஊதியம் பெறும் வேலைகளை அமைதியாகக் கண்டுபிடித்து அதில் பரிமளித்து வருகின்றனர். மென்பொருளின் நிலைத்தன்மையை பராமரிக்கும் போது ஏற்படும் செயல்முறைகள், கருவிகள் மற்றும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை டெவ்ஓப்ஸ் இன்ஜினியர்களின் பொதுவான பொறுப்புகளாக இருக்கும்.

டெவலப்மெண்ட் அன்ட் ஆபரேஷன்ஸ் குழுக்கள் (டெவ்ஓப்ஸ்) பொதுவாக வெவ்வேறு திறன்கள் மற்றும் இலக்குகளைக் கொண்டுள்ளன. டெவலப்பர்கள் ஏற்கனவே உள்ள மென்பொருளுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த விரும்புகின்றனர். மேலும் செயல்பாட்டுக் குழுக்கள் பாகங்கள் வெளியிடப்பட்டவுடன் மென்பொருளின் நிலைத்தன்மையைப் பராமரிக்கின்றன.

DevOps படிப்பானது, செயல்முறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் தானியங்குபடுத்துதல் பற்றியதாகும். மேலும் DevOps பொறியாளர்கள் குறியீடு, பயன்பாட்டு பராமரிப்பு மற்றும் மென்பொருள் மேலாண்மை ஆகியவற்றை இணைப்பதில் முக்கியமானவர்களாக செயல்பட்டு வருகின்றனர். DevOps பொறியாளர்கள் படிப்பானது இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

உங்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் டாப் கம்ப்யூட்டர் படிப்புகள்

8. தொழில்முறை ஹேக்கிங் படிப்புகள் (Professional Hacking)

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரும்பாலும் நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், மென்பொருள் பாதிப்புகளைத் தாக்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் சில தரப்பினரும் உலகில் உள்ளனர். தொழில்முறை ஹேக்கர்கள் (எத்திக்கல் ஹேக்கிங்) கம்ப்யூட்டர் கட்டமைப்பு எல்லைகளை சோதிக்கவும், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பை மீறுவதற்கான வழிகளைக் கண்டறியவும் மற்றும் தற்போதைய அமைப்புகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற பரிந்துரைகளை வழங்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.

மிகவும் விரும்பப்படும் தொழில் பாதைகளில் ஒன்றான தொழில்முறை ஹேக்கர்கள் படிப்பானது, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அதிக தேவையைப் பெறுகின்றது. இதில் படிப்பவர்களின் சம்பளம் இந்திய ரூபாயில் ரூ.3.8 லட்சம் முதல் ரூ.4.2 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் தொழில்முறை ஹேக்கிங் படிப்புகளின் சான்றிதழ்கள் வருங்கால முதலாளியின் கண்ணைக் கவரும் வகையில் நீண்ட தூரம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. பிஐ (வணிக நுண்ணறிவு) மற்றும் விஷுவலைசேஷன் படிப்புகள் (Business Intelligence)

தகவல்கள் எனப்படும் தரவுகள் என்பது பெரிய வணிகங்களுக்கு இன்றியமையாத ஆதாரமாக உள்ளது. இருப்பினும், தரவு மூலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், நிறுவனங்கள் தங்கள் செயல்திறனைக் கண்காணிக்க உதவும் சிக்கலான அளவீடுகளின் தேவையாலும் - தரவுகளைக் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் எப்போதும் எழுகிறது.

எனவே வணிக நுண்ணறிவு மற்றும் டேட்டா விஷுவலைசேஷன் படிப்புகள் மாணவர்களுக்கு இன்றிமையாததாகவும், நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது.

பிஐ மற்றும் விஷுவலைசேஷன் படிப்புகளை பயின்றவர்களுக்கு இன்று உலகளவில் அதிக டிமாண்ட் உள்ளது. அவர்களுக்கு அதிக ஊதியமும் தரப்படுகிறது.

10. செல்போன் ஆப் மேம்பாட்டுப் படிப்புகள் (Cell Phone App Development)

இணையதளங்கள் டிஜிட்டல் ஸ்டோர்ஃபிரண்டாக இருந்தாலும், ஸ்மார்ட்போன்களில் வரும் ஆப்கள் (செயலிகள்) பெரிய மற்றும் சிறிய வணிகங்களுக்கான புதிய சந்தைப்படுத்தல் முறையை உருவாக்கியுள்ளது. நீங்கள் ஒரு ஆப் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளைக் கண்டறிய விரும்பினால் அல்லது அதன் பயன்பாட்டை உருவாக்கும் துறையுடன் கூடிய பெரிய நிறுவனத்தில் பணியமர்த்தப்பட விரும்பினால், கல்லூரிப் பட்டம் மட்டும் போதுமானதாக இருக்காது.
எனவே, செல்போன் செயலிகள் மேம்பாட்டு பயிற்சி தரும் படிப்புகளை பயில்வது அத்தியாவசியமாக இருக்கும்.

மேற்கண்ட படிப்புகள் தற்போதைய உலகில் அத்தியாவசியமான கம்ப்யூட்டர் படிப்புகளாக உள்ளன. இது தவிர அது சார்ந்த படிப்புகளை பயில்வதும், அதுதொடர்பான பயிற்சிகளில் அப்-டேட்டாக இருப்பதும் மாணவர்களுக்கும், பணியில் இருப்பவர்களுக்கும் அத்தியாவசியமானது.

அதுமட்டுமல்லாமல் ரிஸ்க் நிர்வாகம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பொருட்கள் நிர்வாகம் உள்ளிட்ட கம்ப்யூட்டர் படிப்புகளும் நல்ல எதிர்காலத்தை மாணவர்களுக்காக உருவாக்குகின்றன.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Top Computer Courses That Will Change Your Life - Artificial Intelligence, Cyber Security, Data Science, Hacking
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+