தமிழ்நாட்டில் உள்ள டாப் 10 இன்ஸ்டிடியூட்கள் எது தெரியுமா...

தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான லட்சியங்களுள் ஒன்றாக இருப்பது அரசின் வேலைவாய்ப்பைப் பெறுவது ஆகும். குரூப்-1 முதல் குரூப்-5 வரை உள்ள பணியிடங்களில் ஏதாவது ஒன்றில் வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்க்கையை இனிமையாகத் தொடர்வதுதான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது. தமிழகத்தில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் கனவாகவே இது இருக்கிறது. இவ்வாறு தங்களது கனவை நனவாக்க, அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தீவிர முயற்சி செய்து இறுதி இலக்கை அடைகின்றனர்.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள பணியிடங்கள், பதவிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) மூலம்தான் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்வுகள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டு, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் போட்டி போடுவதால் அவர்கள் கடினமான போட்டியை சந்திக்கின்றனர். எனவே, சிறப்பான முறையில் இந்தத் தேர்வுக்குத் தயாராவது முக்கியம்.

தமிழ்நாட்டில் உள்ள டாப் 10 இன்ஸ்டிடியூட்கள் எது தெரியுமா...

டிஎன்பிசிஎஸ்சி தேர்வுகளுக்கு நல்ல முறையில் தயாராகும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று விடுகின்றனர். அரசுப் பணிக்கான எந்தப் போட்டித் தேர்வாக இருந்தாலும், நாம் தொடங்க வேண்டிய இடம் பள்ளிப் பாடப் புத்தகங்கள் தாம். பட்டம் முடித்து, அதற்கும் மேல் படித்து, வரிசையாகக் கல்வித் தகுதிகளை அடுக்கி வைத்து இருக்கலாம். ஆனாலும், நல்ல நிலையான அரசுப் பணியில் சேர வேண்டும் என்றால், பள்ளிப் பாடங்களில் ஆழ்ந்த அறிவு கட்டாயம் இருந்தாக வேண்டும் என்பது முக்கியமாகிறது.

லட்சக்கணக்கானோர் பயிற்சி பெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால், சரியான திட்டமிடல், பயிற்சி இருக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெற்று இலக்கை அடைந்து விடலாம். அதற்கு முதலில் தேர்வை பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வுகளை எழுத 18 வயது நிரம்பியவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இளங்கலை படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும். இந்த தகுதி இருப்பவர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2, 2 ஏ தேர்வுகளை எழுதலாம். குரூப் 4 உள்ளிட்ட விஏஓ தேர்வுகளுக்கு 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தால் போதும்.

பயிற்சி பெறுவது எப்படி

தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும்போதே நாள்தோறும் சிறந்த பயிற்சி எடுப்பது அவசியம். அதிகமாக படிக்கும்போது மறப்பது இயல்பு என்பதால், அடிக்கடி மாணவர்கள் தங்களது பாடங்களை ரிவிஷன் செய்து கொள்வது அவசியம். தேர்வுக்கு குறைவான காலம் மட்டுமே இருக்கும் சூழலில் படிக்கும் பாடங்களில் கட்டாயம் தேர்வு எழுதி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்வதும் முக்கியம் மற்றும் அவசியம். அப்போது தான் குழப்பமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள முடியும்.

அதேநேரத்தில், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு இருந்தால் கட்டாயம் அதனை செய்யுங்கள். அவர்களிடம் இருந்து உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதற்கு கட்டாயம் ஏதேனும் ஒரு ஐடியா கிடைக்கும். பேசும்போது உங்களுக்கு புதிய ஐடியா மற்றும் பாடத்திட்டம் பற்றிய தெளிவு, கேள்விகளை அணுகும்முறை உள்ளிட்டவைகளுக்கான ஆலோசனை கிடைக்கும். இவையெல்லாம் உங்களை தெளிவாக தேர்வை அணுகும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும். இந்த டிப்ஸ்களை மாணவ, மாணவகிள் பின்பற்றினால், தேர்வுக்கு சிறந்த முறையில் தயார் ஆவதற்கு நிச்சயம் உதவும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற தமிழகத்தில் பல்வேறு இன்ஸ்டிடியூட்கள் சிறந்த பயிற்சியை அளிக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்...

தமிழ்நாட்டில் உள்ள டாப் 10 இன்ஸ்டிடியூட்கள் எது தெரியுமா...

வீ ஷைன் அகாடமி

2012-ல் தொடங்கப்பட்ட இந்த அகாடமி, டிஎன்பிஎஸ்சி, போலீஸ் தேர்வு, டெட் தேர்வு, ஆர்ஆர்பி தேர்வு, எஸ்எஸ்சி, வங்கித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளை சிறந்த முறையில் தயார் செய்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் இந்த அகாடமி செயல்படுகிறது. மேலும் விவரங்களுக்கு என்ற இமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

பிரைம் எஜுகேட்டர்ஸ்

டிஎன்பிஎஸ்சி, வேலைகளுக்கான நுழைவுத் தேர்வுகள், கேட் தேர்வுகள் போன்றவற்றுக்கான சிறந்த பயிற்சியை பிரைம் எஜுகேட்டர்ஸ் அளிக்கிறது. வங்கி, ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி தேர்வுக்கும் மாணவர்களை சிறப்பான முறையில் தயார் செய்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இது இயங்கி வருகிறது.

நெஸ்டோ இன்ஸ்டிடியூட்

சென்னை தி.நகரில் இயங்கி வரும் நெஸ்டோ இன்ஸ்டிடியூட் அக்கவுன்டிங், ஃபைனான்ஸ் அன்ட் பேங்க்கிங், டிஎன்பிஎஸ்சி, தேர்வு தயாரிப்பு, சிஏ., டேலி இஆர்பி9, சிஎஃப்ஏ, பேங்க்கிங், நுழைவுத் தேர்வுகள், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களை நன்கு வடிவமைக்கிறது.

பி எப்ஐடி பேங்க்கிங் இன்ஸ்டிடியூட்

பி எப்ஐடி பேங்க்கிங் இன்ஸ்டிடியூட் என்ற பயிற்சி நிறுவனம் சென்னையில் இயங்கி வரும் மிகச்சிறந்த இன்ஸ்டிடியூட்களில் ஒன்று. அக்கவுன்டிங், ஃபைனான்ஸ் அன்ட் பேங்க்கிங், டிஎன்பிஎஸ்சி, தேர்வு தயாரிப்பு, பேங்க்கிங், நுழைவுத் தேர்வுகள், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சியை அளித்து வருகிறது.

பாரத் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க்கிங் (பிஐபி)

சென்னை வளசரவாக்கத்தில் இயங்கி வரும் பாரத் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க்கிங் (பிஐபி) என்ற பெயரிலான இன்ஸ்டிடியூட், டிஎன்பிஎஸ்சி, நுழைவுத் தேர்வு, பேங்க்கிங், ஆர்ஆர்பி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கி வருகிறது.

சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்க்கிங்

சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்க்கிங் இன்ஸ்டிடியூட் பல்வேறு சிறந்த பயிற்சிகளை வழங்குகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு நல்ல முறையில் தயார் செய்கிறது. சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது சென்னை நகரின் மையமான தி.நகரில் அமைந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, நுழைவுத் தேர்வு, பேங்க்கிங், ஆர்ஆர்பி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு நல்ல பயற்சியை வழங்கி வருகிறது.

கேரியர் பவர் பேங்க்கிங் டிரைனிங்

சென்னை தி.நகரில் இயங்கி வரும் கேரியர் பவர் பேங்க்கிங் டிரைனிங் இன்ஸ்டிடியூட், அக்கவுன்டிங், ஃபைனான்ஸ் அன்ட் பேங்க்கிங், டிஎன்பிஎஸ்சி, தேர்வு தயாரிப்பு, சிஏ., டேலி இஆர்பி9, சிஎஃப்ஏ, பேங்க்கிங், நுழைவுத் தேர்வுகள், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களை நன்கு தயார் செய்கிறது.

டர்னிங் பாயிண்ட் ஸ்டடி சர்க்கிள்

டர்னிங் பாயிண்ட் ஸ்டடி சர்க்கிள் இன்ஸ்டிடியூட்டானது சென்னை வேளச்சேரியில் இயங்கும் ஒரு பயிற்சி இன்ஸ்டிடியூட் ஆகும். அனைத்து விதமான வங்கித் தேர்வுகளுக்கும் சிறந்த முறையில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கல்யாணராமன் பேங்க் அக்சாம் கோச்சிங்

கல்யாணராமன் பேங்க் அக்சாம் கோச்சிங் பயிற்சி மையமானது சென்னையில் இயங்கி வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் தயார் செய்கிறது. சிறந்த, தரமான ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி, நுழைவுத் தேர்வு, பேங்க்கிங், ஆர்ஆர்பி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு சிறப்பானதொரு பயற்சியை வழங்கி வருவதால் மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட்

ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் என்பது சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருச்சி உட்பட பல நகரங்களில் இயங்கி வரும் மிகவும் பிரபலமான வங்கித் தேர்வு பயிற்சி இன்ஸ்டிடியூட் ஆகும். டிஎன்பிஎஸ்சி, பிஎஸ்சி, எஸ்எஸ்சி, பிபிஎஸ் பிஓ, ஐபிபிஎஸ் எஸ்ஓ, ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி, எஸ்பிஐ கிளார்க், எஸ்பிஐ பிஓ, எஸ்பிஐ எஸ்ஓ, ஆர்பிஐ கிரேட் பி ஆபிஸர், ஆர்பிஐ அசிஸ்டெண்ட் உட்பட தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறது இந்த இன்ஸ்டிடியூட்.

மற்ற இன்ஸ்டிடியூட்கள்

இதுதவிர தமிழகத்தில் வெற்றி, சத்யா ஐஏஎஸ் அகாடமி, ஸ்மார்ட் லீடர், சக்சஸ் ஐஏஎஸ், பெரியார் ஐஏஎஸ், சின்மயா அகாடமி உள்ளிட்ட பல்வேறு இன்ஸ்டிடியூட்கள் வங்கித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களைத் தேர்வு செய்த பயிற்சியைத் தொடங்கலாம். இதன்மூலம் அவர்களது வருங்காலக் கனவை அவர்கள் நனவாக்கிக் கொள்ள முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here is the list of top 10 TNPSC and UPSC coaching centers in Tamil Nadu. These coaching centers are helping students to prepare for banking services exams also.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+