கையோட வேலை வேணுமா...? டிகிரி மட்டும் போதாது... அதுக்கும் மேலே இதெல்லாம் வேணும்!

Posted By: Kani

ஒரு கெளரவமான வேலையில் சேர அடிச்சி புடிச்சி வாங்கிய டிகிரி மட்டும் போதாது. அதுக்கும் மேலாக தனித்திறன் என்றழைக்கப்படும் டைம் மேனேஜ்மெண்ட்ல இருந்து பல்வேறு திறமைகள் இருந்தால் மட்டுமே வேலை என்றாகிவிட்டது.

டிகிரிக்கும் மேலே அப்படி என்ன ஸ்கில்தான் நம்மிடம் எதிர்பார்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதுதாங்க அது.

1. கலந்துரையாடுதல்

பேச்சுத்திறமை என்பது பொதுவாக கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பது இல்லை. அவரிடம் பேசி தப்பிக்க முடியாதுப்பா என்பது போல இருக்க வேண்டும்.

யாரிடம் எப்படி பேசி காரியத்தை சாதிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

மெளவுனம் சம்மதத்திற்கு வேண்டுமானால் அறிகுறியாக இருக்கலாம் ஆனால் வெற்றிக்கு திறமையான பேச்சு மட்டுமே அடிப்படை என்பதை மறவாதீர்கள்.

 

2.ஒருங்கிணைத்தல்

ஒரு நிர்வாகத்தை தேர்ந்தேடுக்கும் முன் எத்தனை முறை வேண்டுமானலும் யோசிக்கலாம். ஆனால் தேர்ந்தேடுத்த பின் நிர்வாகத்துடனும், சக ஊழியர்களுடனும் ஒத்து போதல் என்பது மிக அவசியம்.

இல்லாவிடில் குறிப்பிட்ட பணி குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். அல்லது உங்களால் உங்களின் சக நண்பர்களின் பணிக்கு இடைஞ்சலாக அமைய நேரலாம்

 

3. டீம் ஒர்க்

ஒரு பெரிய நிறுவனத்தில் உங்களின் பணியானது முக்கிய பங்காற்றினாலும் கூட, மற்ற ஊழியர்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது என்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.

'தனி மரம் தோப்பாகாது' என்பது போல் நீங்கள் மட்டும் நிர்வாகத்தை தூக்கி நிறுத்த முடியாது.

எனவே மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிறுவனத்தின் வெற்றியில் எவ்வாறு பங்கெடுத்து கொள்ளலாம் என்பதை சிந்திக்க மறக்காதீர்கள்.

 

4. நேர மேலாண்மை

நேரம் தவறாமை மிகச் சாதரணமான விஷயமல்ல நேரம் ஒருபொழுதும் யாருக்காகவும் காத்திருக்காது.

ஒரு 5 நிமிட தாமதம் 5 மில்லியன் பணிக்கு தடங்களாக அமையலாம். எனவே எப்போதும் நேரம் தவறாமையில் கவனம் செலுத்துங்கள். இது உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்.

 

5. சமயோசித புத்தி

ஒரு பிரச்னையின் ஆழம் கண்டு சமயோசிதமாக முடிவெடிக்கும் திறன் மிக அவசியம்.

ஒரு பணி முடிய லேட் ஆனால் அதை எப்படி சமளிப்பது. அதே சமயம் அந்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் எவ்வாறு முடிப்பது போன்ற விஷயங்களை கணக்கிட சமயோசித புத்தி மிக அவசியம்.

 

6.சமூக தொடர்பு

நமது தனிப்பட்ட திறமைகளை விசாலமாக்க பணியையும் தாண்டி பல்வேறு வகையான சமூக ஊடகங்கள் வகை செய்கின்றன.

அவற்றின் வாயிலாக பல்வேறு விதமான அறிஞர்களுடன் விவாதித்து நமது திறமைகளை கூர்தீட்டவும், நமக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

 

7.கிரியேட்டிவிட்டி

அலுவலகத்தில் எப்போதும் ஒருசிலர் பாரட்டாப்பட்டு கொண்டே இருப்பார்கள் அவர்கள்தான் இவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் யாருக்கும் எந்த வித பிரச்னையும் இல்லாமல் தீர்க்கும் வல்லமை கொண்டவர்கள்.

நமது தனிப்பட்ட யோசிக்கும் திறமை நம் எவ்வளவு முக்கியம் என்பதை அலுவலக நண்பர்களுக்கு உணர்த்தி கொண்டே இருக்கும்.

 

8. இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ்

ஒரு மதிப்பு மிக்க நிறுவனத்தில் பணியாற்றும் போது மற்றவர்களுடன் பழகும் திறன் சார்ந்த அம்சங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

இது உங்களை பணியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் டைம் மிஷினாக கூட இருக்கலாம்.

இது பணியிடத்தில் உங்களின் நன்மதிப்பினை கூட்டுவதோடு, பணியை விரைந்து முடிக்க சக நண்பர்களின் உதவியை எளிதாக பெற்றுத்தரும்.

 

9. மாற்று சிந்தனை:

எப்போதும் மாற்றத்திற்கு தயாராக இருங்கள். அதிநவீன வளர்ச்சியில் நிமிடத்திற்கு, நிமிடம் மாற்றத்தை சந்திக்க நேரலாம்.

எனவே எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் செலுத்துவதோடு, மாற்றத்திற்கு ஏற்ப உடனடியாக தன்னை மாற்றும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

 

10. ப்ரெண்ட்லி பெர்சனலிட்டி

கடமை தவறாத உணர்வு, உடல் வலிமை, அத்துடன் மனவலிமை ஆகியவைகளுடன், அனைவரும் நம்மை தொடர்பு கொள்ளும் படி எளிமையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

இது உங்களை இனிமையானவராக ப்ரெண்ட்லி பெர்சனலிட்டியாக மற்றவர்களிடம் எடுத்துக்காட்டும்.

 

English summary
Soft skills are personal attribute-driven general skills, such as the ability to give and receive feedback, work collaboratively, and manage time.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia