பெர்சனாலிட்டினா என்னனு தெரியுமா? நெவர்... எவர்... கிவ் அப்!

Posted By: Kani

நீங்கள் யார் என்பதை வரையறுப்பது மட்டும் அல்ல... 'பெர்சனாலிட்டி' நீங்கள் யார்? என்பதை தீர்மானம் செய்வதும்தான். ஒரு நபரின் ஆளுமை அவரது தோற்றம், நடத்தை, அணுகுமுறை, கல்வி, மதிப்புகள் போன்ற மாறுபட்ட பண்புகளால் தீர்மானிப்பதே பெர்சனாலிட்டி.

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் சிலர் வெளித் தோற்றம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறார்கள். சிலர், நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிடலாம் என எண்ணுகின்றனர்.

பர்சனாலிட்டி என்பது உடல் மொழி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம்மை எவ்வாறு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுத்து ஆள்கிறோம் என்பதையும் பொருத்தது.

ஒரு காரியத்தை எவ்வாறு சாதுர்த்தியமாக சாதித்து கொள்ளப்போகிறோம் என்பது நம் 'பெர்சனாலிட்டி'யை பொருத்தது என்றால் மிகையாகாது. சில சமயம் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பதை பொருத்தும் வரையறுக்கப்படுகிறது.

மிகப்பெரிய ஆளுமைகளை எடுத்துக்கொண்டால் எப்போதும் தனித்துவமான 'பெர்சனாலிட்டி'யை கொண்டிருப்பார்கள். ஏன் அது நம்மால் முடியாதா? முடியும். இதற்கான சில எளிய வழிமுறைகள் இதோ.

உடைகளை கவனியுங்கள்:

எங்கு எந்தவித உடை அணிய வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அலுவலகம் செல்ல என்ன விதமான உடை அணிய வேண்டும், விழாக்களுக்கு என்ன அணிய வேண்டும் என்பது தெரிந்திருப்பது மிக, மிக அவசியம்.

நம்மோட சரியான பார்வை ஆளுமைக்கு கூடுதல் வலு கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு நம்முடைய உடை எவ்வளவு பலம் சேர்க்கிறது என்பது முக்கியம்.

சமூக திறன்களை வளர்த்து கொள்ளுங்கள்:

சரியான பார்வை மட்டுமே உறவுகளுக்கு உதவி செய்ய உறுதுணை புரியாது, என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றார் போல் சமூக திறமைகளை வளர்த்துக் கொள்ளுவது அவசியம்.

மற்றவர்களுடன் பழகும் போது நேர்மறையான அணுகுமுறையை கடைப்பிடியுங்கள். கூடவே உங்களின் உடல்மொழியையும் பயன்படுத்த மறக்காதீர்கள்.

சமூக தொடர்புகளை புறக்கணிக்க வேண்டாம்:

நீங்களே உங்களை 'நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்' என நினைக்கிறீர்களா? முதலில் அந்த எண்ணத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.

வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது நாம்தான் வாய்ப்புகளை தேட வேண்டும். பல்வேறு வகையான நிகழ்வுகளுக்குச் செல்வதன் மூலம் நம்மை நாமே கூர்தீட்டிக்கொள்ள முடியும்.

உங்களை நினைத்து நீங்களே பெருமிதம் கொள்ளுங்கள். இது உங்கள் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

நம்மால் என்ன முடியும்:

ஒவ்வொரு நபருக்கும் ஒரு பாஸிட்டிவ் பாண்ட் இருக்கும். அதை சரியாக அறியும்பட்சத்தில் எத்தகைய சவால் வந்தாலும், சமாளிக்க இது ஒரு படிக்கல்லாக இருக்கும்.

இந்த மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்:

அப்பாடா நல்லா செட்டில் ஆயிட்டோம். இனி இந்த இடத்தைவிட்டு நகர கூடாது என்ற எண்ணத்தில் இருந்து முதலில் வெளியே வருது நல்லது.

புதிய திறன்களை கற்றுக்கொள்வதன் மூலம் எளிதாக சவால்களை சந்திக்க தயாராகலாம். எத்தகைய மாற்றத்திற்கும் தயாராக இருக்கும் பட்சத்தில் வெற்றியை எட்டிப்பிடிப்பது எளிதான ஒன்று. வெற்றிபெற்றவர்களின் சரித்திரத்தை புரட்டினால் மாற்றத்திற்கு மகிழ்ச்சியை மட்டுமே வெளிகாட்டிய சுவடுகளை காணலாம்.

தோல்விகளை கண்டு அஞ்சாதீர்கள்:

தவறுகளைச் செய்வது பற்றி கவலைப்படாதீர்கள், உங்கள் பயணத்தில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். உடனே முடங்கிவிடாதீர்கள். தவறை யார் செய்தாலும் அவர்களும் வெளியேற்றப்பட்டிருக்கலாம். எனவே வெற்றிக்கான சிறு குறிப்புகளாக தோல்விகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.

நான் யார்?

இனிமையான பேச்சின் மூலம் உங்களை 'பிராண்ட்' செய்ய கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அது உங்கள் ஆளுமையின் ஒரு பகுதியாகும்.

உங்களின் நேர்மறையான எண்ணங்களின் மூலம் நீங்கள் யார் என்பதை பிரதிபலியுங்கள்.

தலைவராக வலம் வாருங்கள்:

நீங்கள் எதை கற்றுக் கொண்டாலும், உங்களுக்குத் கொஞ்சம்தான் அந்தத்துறை பற்றி தெரிந்திருந்தாலும், பரவாஇல்லை அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது நீங்கள் கிங்கா? கிங் மேக்கரா? என்பது.

நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதை எந்த வகையான வழியில் பகிர்கிறீர்கள் என்பதை பொருத்தே உங்களை பின்தொடர்பவர்களை அது முழுமையாகத் தக்க வைக்கும்.

முயற்சி திருவினையாக்கும்:

இது நமது தினசரி வாழ்கையுடன் தொடர்புடையது ஆனால் மிக முக்கியமானது. முயற்சியின் தொடர்ச்சி வெற்றியின் முடிவாக வேண்டுமென்றால் அதை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது.

முயற்சி மட்டுமே ஒவ்வொரு முறையும் வெல்லும். 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்'

நெவர்.. எவர்.. கிவ் அப்:

வெற்றி என்பது கல்லில் வைத்த உடன் மறுநாள் பழுக்கும் மாம்பழம் அல்ல.

வெற்றியை சுவைக்க வேண்டுமானால் கடுமையான உழைப்பு வேண்டும். வியர்வைகளினால் விழையும் வெற்றியின் சுவையே நிரந்தரமானது. எனவே அதுவரை எந்த தடைகள் வந்தாலும் தயங்கிவிடக் கூடாது.

எல்லா விஷயங்களிலும் சீரியஸாக இருக்க வேண்டாம்:

யாரும் சீரியஸான அதிகாரிகளை விரும்புவதில்லை. எல்லோரும் சிரிக்க வைக்கும் ஒருவரையே நிர்வாகம் பெரிதும் விரும்பும். அதே சமயம் மற்றவர்கள் சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக யாரையும் காயப்படுத்திவிடவும் கூடாது.

இன்முகத்துடன் உரையாட கற்றுக்கொள்ளுங்கள் இயல்பாகவே உங்களின்பால் மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

மேற்கண்ட வகையான செயல்பாடுகளின் மொத்த வெளிப்பாடே பெர்சனாலிட்டி என்று அழைக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் எல்லாம் பிறரின் பேச்சை கூர்ந்து கவனிக்கவும், அதன்மூலம் நல்ல தகவல்களை மனதில் பதிவைத்து பெர்சனாலிட்டி எனப்படும் ஆளுமைத் தன்மையை சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ளவதோடு, வெளிப்படுத்தவும் உதவும்.

பாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா?

English summary
Top 10 Most Important Personality Development Tips

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia