இந்த விசயம் மட்டும் தெரிந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

இந்தியாவில் பல துறையில் லட்சங்களில் சம்பளங்கள் கொட்டிக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் லட்சங்களில் சம்பளம் தரும் துறைகள் என்னவென தெரியுமா ?

ஒவ்வொருவரின் சமூக அந்தஸ்தையும், சுய மரியாதையினையும் தீர்மானிப்பது அவர்கள் செய்யும் பணிகளும், அவற்றின் மூலம் பெரும் அதிகப்படியான அல்லது கிடைக்கப்பெறும் ஊதியமே. இங்கே பிறந்தவர்கள் யாரும் "Born with Silver Spoon" என ஆங்கிலத்தில் கூறுவதைப் போல பிறந்தவர்கள் அல்ல. ஆனால், நாம் தேர்ந்தெடுத்து பயணிக்கும் துறை இந்த வாக்கியத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றுகிறது.

இந்த விசயம் மட்டும் தெரிந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

அன்றாட பணிகளும், பெறக்கூடிய சம்பளமும் என்றே நம் வாழ் நாட்கள் முழுவதுமாக பயணிக்கிறோம். இதில் சிலர் திறமைகளைக் கொண்டிருந்தும் சரியான வழிகாட்டுதல் இன்றி தேர்வு செய்யும் துறையில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு காலத்தை ஓட்டச் செய்கிறது. தன் திறமையை அறிந்து தேர்வு செய்யும் துறையில் லட்சங்களில் சம்பளங்கள் கொட்டிக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் லட்சங்களில் சம்பளம் தரும் துறைகள் என்னவென தெரியுமா ?

மேலாண்மைத் துறை

மேலாண்மைத் துறை

மேலாண்மைத் துறை என்பது எளிதில் கிடைக்கப் பெறும் வேலையில்லை. ஆனால், சரியான கல்வி முறையும், மேற்கொள்ளும் முயற்சிகளும் இப்பணியிடத்தை அடைய உதவும். இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்ற மேலாண்மை தொடர்பான நிறுவனங்களில் படிப்பு முடிப்போருக்கு இத்துறையில் கிடைக்கும் ஊதியம் மூன்று லட்சம் முதல் அனுபவத்திற்கு ஏற்ப 80 லட்சம் வரை.

 

வங்கி முதலீட்டாளர்கள்

வங்கி முதலீட்டாளர்கள்


வங்கி முதலீட்டாளர் பணியானது ஓர் நிறுவனத்தின் பொருளாதார நிலையினை அதிகரிக்கும் துறையாகும். சரியான கணிப்பும், தகுந்த நேரத்தில் செய்யும் முதலீடும் பெரும் லாபத்தினை ஈட்டித் தரும். இத்துறையில் ஆரம்பக் கால ஊதியமே ரூ.12 லட்சம் முதல் தொடங்கி அனுபவத்திற்கு ஏற்ப ரூ.50 லட்சத்திற்கும் மேல் கடக்கிறது.

கணக்காளர்கள்

கணக்காளர்கள்

 

நிறுவனத்தில் பொறுப்பான வேலைகளில் ஒன்று கணக்காளர் பணியாகும். சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் என்னும் இத்துறையில் சமீப காலமாக அதிகளவிலான இளைஞர்கள் நுழைய விரும்பி வருகின்றனர். இத்துறையில் ஆரம்பக் கால ஊதியமாக ரூ.5.50,000 முதல் ரூ. 25.7 லட்சம் வரையிலும் சம்பளம் பெறலாம்.

 

எண்ணெய் மற்றும் நிலத்தடி வாயு துறை

எண்ணெய் மற்றும் நிலத்தடி வாயு துறை


எண்ணெய் மற்றும் நிலத்தடி வாயு துறை நிபுணர்களுக்குப் பணியே அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதாகும். இவர்களுக்கு ஓஎன்ஜிசி, ஐஓசிஎல், பாரத பெட்ரோலியம் போன்ற அரசு சார்ந்த துறைகளிலேயே ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் சம்பளமாக கிடைக்கிறது.

வியாபார ஆலோசகர்

வியாபார ஆலோசகர்


பிற்காலத்தைக் கணிப்பதில் கூடுதல் திறமை பெற்றவர்களாகவே செயல்படுவது வியாபார ஆலோசகர்களின் பணியாக உள்ளது. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியுடன் சந்தையில் ஏற்படும் போட்டிகளை ஆய்வு செய்ய ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வணிக ஆய்வாளர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். வணிக ஆய்வாளர்கள் கணித கருத்துக்களில் நன்கு புரிந்து கொள்ளப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையில் இவர்கள் ஆரம்பகாலத்தில் பெரும் சம்பளம் தோராயமாக ரூ. 6 லட்சம் வரை.

மருத்துவத் துறை

மருத்துவத் துறை


இந்தியா மட்டுமல்ல உலக அளவிலேயே ஓர் துறை அடுத்தடுத்து வளர்ச்சி அடையும் என்றால் அது மருத்துவத் துறையாகத்தான் இருக்கும். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப இங்கே மருத்துவமனைகளும் அதிகரிக்கின்றன. மருத்துவர்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இத்துறையில் சராசரியாக ஆரம் ஊதியமாக 4 லட்சம் முதல் 17 லட்சம் ரூபாய் வரையிலும் மருத்துவர்கள் பயனடையலாம்.

விமான வல்லுநர்

விமான வல்லுநர்


சமீப காலங்களில் மட்டும் வர்த்தக ரீதியாக விமானத் துறை பெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது என்றால் மிகையாகாது. தனியார் மற்றும் பொதுத் துறை விமான சேவை நிறுவனங்கள் நம் நாட்டில் அதிகரித்துள்ளதால் இங்கே பணியாற்றுவோர் குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் முதல் ஊதியம் பெறுகின்றனர்.

சட்டத் துறை

சட்டத் துறை


பிரபலமான வழக்கறிகல் பெரும் உண்மையான சம்பளம் என்பது யாரும் அறியா மர்மமே. ஆனால், சரியான வழக்காடல், கல்வித் தகுதி, நீதிமன்ற கையாளுதல் திறமை என வழக்கறிஞர் துறையில் சாதனை படைத்துட்டோம் என்றால் அடுத்து லட்சங்களில் தான் உங்கள் சம்பளமே. தற்போது ஓர் தனியார் வழக்கறிஞர் பெறும் சம்பளம் ரூ.6 லட்சம் முதல். மூத்த வழக்கறிஞர் என்றால் ரூ.9 முதல் 10 லட்சம் வரையிலும்.

சந்தைப் படுத்துதல்

சந்தைப் படுத்துதல்


நிறுவனத்தை, அங்கே உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப் படுத்துதல் என்பது போட்டியாளர்கள் மத்தியில் சிரமமான ஒன்று. ஆனால், அதனைச் சாதித்து தன் நிறுவனத்தை மேல்நோக்கி கொண்டு செல்வதின் மூலம் இதனைச் சரியான முறையில் கையாண்ட சந்தைப் படுத்துதல் அதிகாரி பெறும் சம்பளம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் கடக்கிறது.

தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் பொறியாளர்கள்

தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் பொறியாளர்கள்


ஆண்டுக்கு ஒன்றாரை முதல் 10 லட்சம் வரை பெரும் மென்பொருள் பொறியாளர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வேலைப் பெறுகின்றனர். ஏனெனில் இவர்களுக்கான தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் போட்டிகளும். வேலைக் கிடைப்பதில் என்னதான் பல சிரமங்களைக் கடந்து வந்தாலும் அதற்குப் பின் இத்துறையில் கிடைக்கப் பெறும் சராசரி சம்பளம் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 15 லட்சத்திற்கும் மேல்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Top 10 Highest salary paying Jobs and Careers in India
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X