டிஎன்பிஎஸ்சி கனவுவாரியத்தில் நுழைய யுக்திகளுடன் மொழியறிவில் நூறு மதிபெண்கள்

Posted By:

 

டிஎன்பிஎஸ்சி டிப்ஸ்:

டிஎன்பிஎஸ்சி என்ற கனவு வாரியம் தன்னை வெற்றி பெற ஆவலுடன் காத்திருக்கும் அனைவருக்கும் இன்றைய பதிவில் சில டிப்ஸ்களை வழங்கவுள்ளேன் .
டிஎன்பிஎஸ்சி அறிவுஜீவிகளுக்கான ஒரு போட்டி தேர்வு என்றேன் அதென்ன அறிவு ஜீவிகள் என்னால் இயலுமா என்று யோசிக்கிறீர்களா , அந்த எண்ணங்களை கைவிடவும் . உங்களால் இயன்றால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய உங்கள் மனது செயலில் இறங்க வைக்கின்றது . ஆக ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய உங்களால் இயலும் போது அந்த விருப்பத்தையும் விடா முயற்சியையும் கைவிடாமல் தொடரும்போது வெற்றி என்னும் வாசல்படியில் நீங்கள் நிற்கலாம் .

டிஎன்பிஎஸ்சி யுக்திகள்:

டிஎன்பிஎஸ்சி மற்றும் அதற்கு இணையான எந்த தேர்வானாலும் உங்களிடம் இருக்க வேண்டியது யுக்தி , வகுக்கப்பட்ட யுக்தியை சரியாக கையாள வேண்டும். உருவாக்கிய யுக்தியில் ஏதேனும் மாற்றம் இருக்குமானால் அதனை கொண்டுவர முனைய வேண்டும். டிஎன்பிஎஸ்சி என்ற கனவு வாரியத்தில் நுழைய நுணுக்கமான யுக்தியை கையாள வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் எந்த தேர்வை எப்போது எழுத போகிறீர்கள் என்ற அட்டவணையை கையில் வைத்து கொள்ள வேண்டும். தேர்வு காலங்களில் அனைத்து சூழல்களையும் சரியாக கையாள வேண்டும் . தேர்வுக்கு முதல் துருப்பு சீட்டுகளான மொழிறிவை வளப்படுத்திகொள்ள வேண்டும் என்று முந்தயை பதிவில் தெரிவித்தேன் .

டிஎன்பிஎஸ்சி டிரிக்ஸ்களுடன் மொழியறிவு பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் யுக்தி கற்கலாம்

 

மொழியறிவு :

மொழியறிவு என்பது அனைவருக்கும் முக்கியம் தமிழ் மற்றும் ஆங்கிலம் எதுவானாலும் சுமார்ட் ஸ்டடிஸ் முக்கியமாகும். டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் குரூப் I தவிர மற்ற அனைத்து தேர்வுகளிலும் மொழி கேள்விகள் தேர்வு வெற்றிக்கு முக்கிய பங்காற்றுகின்றன . இத்தகைய மொழிபாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற இயலுமா என்ற கேள்வி எழுமா, எழுமெனில் அந்த கேள்வி அவசியமில்லை. மொழியறிவு பாடத்தில் நிச்சயம் 100 மதிபெண் பெறுவது சாத்தியமே ஆகும் .

கடந்த வருட கேள்வியை படியுங்கள் உங்களூக்கான அடிப்படை பள்ளி பாடங்களில் உள்ள தகவல்களை 6 முதல் 10 வரை படியுங்கள் நீங்கள் நிச்சயம் அரசாலளாம் . ஒரு சில தமிழ் இலக்கணம் சார்ந்த புத்தகங்களை படியுங்கள் . நீங்கள் தமிழுக்கு எந்த பதிப்பகத்தாரின் புத்தகங்களை வாங்கலாம் அடுத்து எப்படியெல்லாம் படிக்கலாம் என்று அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன் .


வாழ்கையே ஒரு தேர்வுக்களம் தேர்வுகள் மாறலாம் , தேர்வுக்களம் மாறாது. சலித்துகொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தை பார்க்கிறான மற்றும் சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பை பார்க்கிறான். நீங்கள் யார் இதில் எந்த இரகம் என்று முடிவெடுங்கள் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன் .

சார்ந்த தகவல்கள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கிவிட்டது ,கனவு வாரியமான போட்டி தேர்வை எதிர்கொள்ள வழிமுறைகள்

English summary
here article mentioned about tricks of tnpsc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia