டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் ரிவைஸ் சரியா செய்யுங்க தேர்வில் வெற்றி பெறுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி மாணவர்களே நலமா, 
மாபெரும் சபையில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாசுகுறையாத மன்னவன் இவன்/இவள் என போற்றி புகழ வேண்டும் .
போட்டி தேர்வு எழுதும் அனைவருக்கும் பொருந்தாது . காரணம் மாணவர்கள் பலர் தோல்விகள் பல கண்டு துவண்டு இருப்பீர்கள் . துவண்டு போக அவசியமில்லை வாழ்த்தும் திட்டும் தேவையில்லை களவீரம் காணும்போது வெற்றி நிச்சயம் ஆகும்.

 போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற வேட்கை கொண்ட அனைவருக்குமான பதிவு இது போட்டி தேர்வு முதல் கல்லில் அகப்படும் பழம் அல்ல அதே சமயம் அது எட்டாக்கனியுமில்லை . மிகுந்த ஈடுபாடுடன் கற்றல் , போட்டி தேர்வு வெற்றி ரகசியம் ஆகும், கற்றலை பலமுறை திருப்பி பார்க்க வேண்டும். டெஸ்ட் எனும் தேர்வு சுயமாகவோ அல்லது இணைய வழியாகவோ அல்லது பயிற்சி மையத்தின் வாயிலாக எழுத வேண்டும் . தொடர்ந்து கடந்தாண்டு கேள்வி பதில்களையும் படிக்க வேண்டும். இவற்றை முயன்றால் உங்கள் கையில் 30 மதிபெண்களுக்கான மதிபெண்னைகளை உறுதியாக பெறலாம் .

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் சரியா படிங்க தேர்வை வெல்லுங்க

கேள்வித்தாள் :

கேள்வித்தாள் புத்தகம் தரமானதாக வாங்குங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாங்கினால் போதாது அத்துடன் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் . கேள்வித்தாள்களை அலசி ஆராய்ந்தால் பொது அறிவு பாடங்கள் சில பாடங்களில் இருந்து தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படும் அவற்றை  கண்டு பிடிக்க வேண்டும் . அத்துடன் அவற்றை குறிப்பெடுத்துகொண்டு அந்த குறிப்பிட்ட பாடத்தை தலை முதல் கால்வரை நன்றாக படித்துகொள்ளவும் . கேள்விகள் மாறுபடலாம் ஆனால் அந்த குறிப்பிட்ட பாடத்தில் கேள்விகள் கேட்பது மாறுபடாது. உதாரணமாக ஐந்தாண்டு திட்டங்கள், அரசின் திட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் , அரசியலமைப்பு சரத்துகள், சட்டங்கள் , திருத்தங்கள் , அடிப்படை உரிமைகள் , கடமைகள் இவை என்றும் மாறாதது . இவற்றில் கேள்விகள் மாறுபடலாம் ஆனால் இந்த பாடங்களில் இருந்து கேள்விகள் இல்லாத வினாத்தாள்கள் அரிதாகும். சந்தேகம் இருந்தால் திருப்பி பாருங்கள் உங்கள் வினாத்தாள் புத்தகங்களை பின்பு என் கருத்து புரியும். அக்குறிப்பிட்ட பாடங்களை படிக்கவும் அவற்றிலிருந்து பத்து கேள்விகள் வரவாய்ப்புள்ளது .

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் சரியா படிங்க தேர்வை வெல்லுங்க

கேள்வித்தாள் புத்தகங்கள் தரமானதாக இருக்க வேண்டும் . அதைவிட நீங்கள் வாங்கும் புத்தகம் சரியானதாக இருக்க வேண்டும் . வினாத்தாள் புத்தகங்களில் என்னால் இது நல்லது இது கெட்டது என கூற முடியாது காரணம் பிழையில்லா புத்தகங்கள் சந்தையில் அரிதாகும் அதனை பார்த்து வாங்கும் பொறுப்பு உங்களுடையாதாகும்.

சார்ந்த தகவல்கள்: 

மாயவலைவெல்வோம் டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வெல்வோம்

 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம்

English summary
here article tell about tnpsc question paper revising

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia