திரையரங்குகள் இல்லாத நாடு ஏது தெரியுமா?

Posted By: Kani

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கும் படிக்கும் மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை மட்டும் தெளிவாக புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம். போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தோர்களுக்கான சில கேள்வி பதில்களின் தொகுப்பு...

கேள்வி:1.எந்த ஷரத்து மற்றும் பகுதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது?

1. ஷரத்து 370 பகுதி XXII, 2. ஷரத்து 370 பகுதி XXI, 3. ஷரத்து 356 பகுதி XXI, 4. ஷரத்து 358 பகுதி XXII

விடை: ஷரத்து 370 பகுதி XXI

விளக்கம்: இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரிசிங், மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்முவை இந்தியாவுடன் 1949-இல் இணைக்க சம்மதித்தார்.

மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-இல் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

கேள்வி:2. மழை பெய்தபின் வானவில் எந்தப் பக்கம் தோன்றும்?

1. சூரியனின் திசை நோக்கி, 2. சூரியனுக்கு எதிர்த் திசையில், 3. எந்த பக்கம் வேண்டுமானாலும்  4. சூரியன் இல்லாதபோது.

விடை: சூரியனுக்கு எதிர்த் திசையில்

விளக்கம்: நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் ஏழு வண்ணங்களில் (சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா) தோன்றுகிறது.

வானவில் மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்களில் வானத்தில் தெரிகின்றன. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும்.

கேள்வி:3. மண்ணீரல் (Spleen) செரிமான செயல் பாடு கீழ்வரும் எதோடு தொடர்புடையது?

1. டியோடினல் லூப், 2. ஈரல் (Liver), 3. கணையம் (Pancreas), 4. சிறுசீரகம் (Kidney)

விடை: கணையம் (Pancreas)

விளக்கம்: கணையம் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு சற்று கீழே இருக்கும் ஓரு உறுப்பு. சுமார் 20-25 செ.மீ நீளம் கொண்டது. செரிமான செயல்பாட்டுக்கு உதவுகின்றன.இது இன்சுலின், குளூக்கொகான், சுரப்பிகளை மட்டுப்படுத்தும் பணியையும் செய்கிறது. 

கேள்வி:4. மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் எந்த ஆண்டு ஊதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது? 

1.1948 2. 1949 3. 1959 4. 1958

விடை: 1948

விளக்கம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது.

முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்றும் அழைக்கின்றனர்.

கேள்வி:5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது நறுமணங்களின் அரசி எனப்படுகிறது?

1. மிளகு, 2. ஏலக்காய், 3. மிளகாய், 4. இஞ்சி

விடை: ஏலக்காய்

விளக்கம்: ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடி. இந்தியாவில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.மருத்துவ குணங்கள் நிறைந்த இது வாசனைத் திரவியமாகவும் பயன்படுத்தப் படுகிறது.

கேள்வி:6. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது

1.கி.மு.310 2.கி.மு.342 3.கி.மு.362 4.கி.மு.326

விடை: கி.மு.326

விளக்கம்: அலெக்ஸாண்டர் சிந்து நதியை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் பஞ்சாப் பகுதியை ஆண்ட போரஸை வென்றார். இதில் யானைப்படையை முதல்முறையாக அலெக்ஸாண்டரின் படைகள் எதிர்கொண்டன.

போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டியதோடு,போரஸ் இதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு சத்ரப் எனப்படும் பொறுப்பு கொடுத்து அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார்.

கேள்வி:7. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது? 

1.புணே, 2.கார்வார், 3. புரந்தர் 4. ராய்கார்

விடை: ராய்கார்

விளக்கம்: சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தார்.

போன்சலே மராத்திய குலத்தவரான சாஹாஜி போஸ்லே, ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார்.

கேள்வி:8. சுங்கம் தவிர்த்த சோழன் யார்?

1. முதலாம் ராஜராஜன், 2. முதலாம் குலோத்துங்கன், 3. முதலாம் ராஜேந்திரன்,4. இரண்டாம் ராஜராஜன்

விடை: முதலாம் குலோத்துங்கன்

விளக்கம்: கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சனை உருவானது.

அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன்.

கேள்வி:9. பொருளியலின் தந்தை எனப்படுபவர்:

1 J.M. கீன்ஸ், 2. ஆடம் ஸ்மித், 3. மாஸ்தஸ், 4. டேவிட் ரிக்கார்டோ

விடை: ஆடம் ஸ்மித்

விளக்கம்: 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவரே அரசியல் பொருளியலின் தந்தை எனவும் அறியப்படுகிறார்.

கேள்வி:10. திரையரங்குகள் இல்லாத நாடு எது ?

1.பூட்டான், 2.சைனா,3.பஹ்ரைன், 4.மங்கோலியா

விடை: பூட்டான்

விளக்கம்: இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். திம்பு இதன் தலைநகரமாகும்.

English summary
tnpsc question and answer for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia