அரசாங்க வேலை வேணுமா? இதக் கொஞ்சம் படிச்சு பாருங்க!

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வினா விடைகளின் தொகுப்பு விளக்கங்களுடன் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வேலை வேணுமா? இதக் கொஞ்சம் படிச்சு பாருங்க!

 

பல்வேறு வகையான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்த வாய்ப்பு நமக்கானது, நாம் கட்டாயம் வெற்றி கொள்வோம், என்ற மன உறுதியுடன் படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் படிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் நமது இணையதளத்தின் முகவரியை தெரியப்படுத்துங்கள்.

கேள்வி 1: சிந்து நாகரிகத்தில் உள்ள 'ஆலம்கீர்' நகரம் தற்போது எந்த இந்திய நகரத்தில் உள்ளது?

கேள்வி 1: சிந்து நாகரிகத்தில் உள்ள 'ஆலம்கீர்' நகரம் தற்போது எந்த இந்திய நகரத்தில் உள்ளது?

1. மேற்கு உத்தர பிரதேசம் 2. ராஜஸ்தான் 3. கிழக்கு உத்திர பிரதேசம்

விடை: 1. மேற்கு உத்தரபிரதேசம்

விளக்கம்: சிந்து சமவெளி நாகரிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது மேற்கு உத்தரபிரதேசத்தில் இருந்தது. இங்கு சிறப்பு வாய்ந்த கண்டுப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலம்கீர்பூர் சிந்து சமவெளி நகரங்களில் ஒன்றாகும்.

கேள்வி 2: தில்லி மெட்ரோ ரயில்வே தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

கேள்வி 2: தில்லி மெட்ரோ ரயில்வே தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

1.2000 2. 1988 3. 1989

விடை: 1. 2002

விளக்கம்: தில்லி மெட்ரோ என்பது தில்லி, மற்றும் குர்கோன், நோய்டா, காசியாபாத் ஆகிய தேசியத் தலை நகரப்பகுதிகளை இணைக்கிறது. இது மொத்தம் 189.63 கி.மீ நீளத்திற்கு ஆறு பாதைகளையும் 142 நிலையங்களையும் கொண்டுள்ளது. இதன் வழித்தடங்கள் சுரங்கம் மற்றும் பாலம் போன்ற அமைப்புகளை கொண்டது.

கேள்வி 3: நதிகள் இல்லாத நாடு எது?
 

கேள்வி 3: நதிகள் இல்லாத நாடு எது?

விடை: சவுதி அரேபியா

விளக்கம்: சவூதி அரேபியா உலகில் அதிகளவு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 2ஆம் இடத்தில் உள்ளது. அரசின் வருவாயில் 75 சதவிகிதம் இதன் மூலம் பெறப்படுகிறது. மக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்.

கேள்வி 4: மாநில சட்டப்பேரவையை கூட்டவோ கலைக்கவோ செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு?

கேள்வி 4: மாநில சட்டப்பேரவையை கூட்டவோ கலைக்கவோ செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு?

1. ஆளுநர் 2. குடியரசுத் தலைவர் 3. சட்டப்பேரவை

விடை:1. ஆளுநர்

விளக்கம்: ஆளுநர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்க வேண்டுமென சட்டவிதி 153 கூறுகின்றது. மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநர் கையில் உள்ளது. ஆளுநர் நியமிக்கப்படும் மாநிலத்தை சார்ந்தவராக இருக்ககூடாது.

கேள்வி 5: சூரத் பிளவு எப்பொழுது ஏற்பட்டது?

கேள்வி 5: சூரத் பிளவு எப்பொழுது ஏற்பட்டது?

1. 1907 2. 1905 3. 1911

விடை: 1.1907

விளக்கம்: சூரத் பிளவு 1907 ஆம் ஆண்டு முதல் சூரத் மாநாட்டில் மிதவாதிகளும் தீவிர வாதிகளும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. பால கங்காதர் தீவிரவாதிகளின் தலைவராகவும்,வா.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா தளபதியாகவும் செயல்பட்டார். பால கங்காதார திலகர், லாலாலஜபதிராய், பிபின் சந்திரபால், அரவிந்த் கோஷ் தீவிரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.

கேள்வி 6: காந்தரக்கலை யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தியது?

கேள்வி 6: காந்தரக்கலை யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தியது?

1. அசோகர் 2. கனிஷ்கர் 3. ஹர்சர்

விடை: கனிஷ்கர்

விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் மதுரா மற்றும் காந்தரக்கலை மிகவும் சிறப்பாக வளர்சியுற்றது. இந்திய கிரேக்கம் சேர்ந்த சிற்ப கலையே காந்தரக் கலை என அழைக்கப்படுகிறது.

கேள்வி 7: நூறு ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுபவர் யார்?

கேள்வி 7: நூறு ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுபவர் யார்?

1. ரிசர்வ் வங்கி கவர்னர் 2. மத்திய நிதியமைச்சர் 3. கார்பரேஷன் வரி

விடை:1. ரிசர்வ் வங்கி கவர்னர்

விளக்கம்: இந்திய ரிசர்வ் வங்கி ரூ.10, 20, 30, 50, 100, 500 நோட்டுகளை வெளியிடுகின்றது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி கவர்னர் நோட்டுகளில் கையெழுத்திடுவார். நாணயங்கள் வெளியிடும் உரிமையை நிதித்துறை அமைச்சர் பெற்றிருக்கிறார்.

கேள்வி 8: பின்னல் கோலாட்டம் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ?

கேள்வி 8: பின்னல் கோலாட்டம் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ?

1.தமிழ்நாடு 2.ஆந்திரா 3.மாண்டோ

விடை: 1. தமிழ்நாடு

விளக்கம்: கோலாட்டம் இரு மரக்கோள்கள் வைத்து ஊர்த்திருவிழாக்களில் பெண்கள் வட்டவடிவில் இணைந்து ஆடும் ஆட்டம் ஆகும். மேலும் கீழும், வலது, இடதுமாக கோலாட்டம் ஆடுவது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் காவடி எடுத்தல், கோலாட்டம் போன்ற ஆட்டங்கள் ஆண்டாண்டு காலமாக ஆடப்பட்டு வருகிறது.

கேள்வி 9: புன்னகை திட்டம் அறிவித்துள்ள மாநிலம் எது?

கேள்வி 9: புன்னகை திட்டம் அறிவித்துள்ள மாநிலம் எது?

1.கேரளா 2.தமிழ்நாடு 3.ஆந்திரப் பிரதேசம்

விடை:1. கேரளா

விளக்கம்: கேரளா அரசு புன்னகை என்னும் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு உட்ப்பட்ட 60 வயதினருக்கு கீழ் உள்ள முதியோருக்கு இலவச பல்செட் திட்டம் வழங்க திட்டமிட்டுள்ளது.

கேள்வி 10: தேசிய வாக்காளர் தினம் எப்போது?

கேள்வி 10: தேசிய வாக்காளர் தினம் எப்போது?

1. ஜனவரி 26 2. பிப்ரவரி 10 3. டிசம்பர் 10

விடை: 1.ஜனவரி 26

விளக்கம்: 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் முதல் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளை நினைவுகூறும் விதமாக தேசிய வாக்களர் தினம் கொண்டாடப்படுகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதை தம் கடமையாக கருதி வாக்களிக்க வேண்டும்.

கேள்வி 11: விமானத்தின் உள்ள கருப்புப் பெட்டி நிறம் என்ன ?

கேள்வி 11: விமானத்தின் உள்ள கருப்புப் பெட்டி நிறம் என்ன ?

1. பச்சை 2. கருப்பு 3. ஆரஞ்சு

விடை: ஆரஞ்சு

விளக்கம்: 'கருப்பு பெட்டி' கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

பொதுவாக கருப்புப் பெட்டி, விமானத்தின் வால் பகுதியில் அமைந்து இருப்பதாகும். இதன் நிறம் மஞ்சள், சிலசமயத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். ஆனால், வழக்கமாக கருப்பு பெட்டி என்றழைக்கப்படுகிறது.

விமானத்தின் காக்பிட்டில் விபத்து நடக்கும் முன், பைலட் மற்றும் உதவி பைலட்கள் என்ன பேசிக் கொண்டனர், விமானப் போக்குவரத்து கட்டுப் பாட்டு அறை அதிகாரிகளுடன் அவர்கள் என்ன பேசினர், அது பறந்த உயர அளவு, மற்ற தகவல்கள் இந்த கருப்பு பெட்டியில் பதிவாகியிருக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Previous year Question Papers with Answer Key
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X