வாட்ஸ்-அப்புக்கு வயது இத்தனையா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!

கல்லூரி படிப்பை முடிக்கும் பல லட்சம் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. பல மாணவ, மாணவிகள் அரசாங்க பணியில் சேர வேண்டும் என ஆர்வம் காட்டி வருவதால் ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பித்து இணையதளமே முடங்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுபோன்ற போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்து விட்டால் மட்டும் போதுமா?

வாட்ஸ்-அப்புக்கு வயது இத்தனையா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!

 

டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற போட்டி தேர்வில் கேள்விகளுக்கு சரியான விடையளிக்க வேண்டியதும் அவசியம். தேர்வுகளுக்கு என பல ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டுமே வெற்றியடையச் செய்யாது. புதிய தகவல்களும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வாருங்கள், போட்டித் தேர்விற்கான புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது?

ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது?

1. மருதநாட்டு இளவரசி

2. அந்தமான் கைதி

3. மலைக்கள்ளன்

4. மர்மயோகி

விடை : மலைக்கள்ளன்

விளக்கம் : மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வசனம் மு. கருணாநிதி, இயக்கம்: எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு, எம். ஜி. ஆர், பானுமதி ராமகிருஷ்ணா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம். குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.

இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன?

இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன?

1. 4.3 லட்சம்

2. 1.4 லட்சம்

3. 3.4 லட்சம்

4. 2.4 லட்சம்

விடை : 2.4 லட்சம்

விளக்கம் : பஞ்சாயத்துகள் சட்டம் 1996 என்பது இந்திய அரசியலமைப்பின் 1992, 73 வது திருத்தச் சட்டத்திற்கு உட்படாத பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.

இச்சட்டம் கிராம சபை தங்கள் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்குவதற்காக 1996-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் நாள் சட்டமாக்கப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?
 

இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

1. ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம்

2. உஸ்மானியா பல்கலைக்கழகம்

3. கொல்கத்தா பல்கலைக்கழகம்

4. பஞ்சாப் பல்கலைக்கழகம்

விடை : கொல்கத்தா பல்கலைக்கழகம்

விளக்கம்: கொல்கத்தா பல்கலைக்கழகம் (University of Calcutta, அல்லது Calcutta University) ஜனவரி 24,1857ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தெற்கு ஆசியாவிலேயே பல்வேறு துறைகளைக் கொண்ட முதல் பல்கலைக்கழகம் இதுவாகும்.

மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

1. 2000

2. 2004

3. 2002

4. 2003

விடை : 2004

விளக்கம் : தென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரக் கிளையமைக்க கமிஷன் பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவரின் அறிவிப்புக்குப் பின் 24.7.2004ல் நிர்ணயிக்கப்பட்ட 12 நீதிபதிகளுடன் மதுரைக் கிளை 13 தென் மாவட்டங்களுக்கு நீதி பரிபாலனத்தைத் தொடங்கியது.

இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?

இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?

1. 20

2. 17

3. 15

4. 4

விடை: 17

விளக்கம் : இந்தியன் ரயில்வே அரசின் பொதுத்துறை நிறுவனம். இந்தியன் ரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது. 16 லட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர்.

உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?

உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?

1. மால்டோவா

2. ருமேனியா

3. மால்டோவா

4. டென்மார்க்

விடை: டென்மார்க்

விளக்கம் : வடக்கு ஐரோப்பாக் கண்டத்திலுள்ள டென்மார்க் நாடானது தென்மேற்கு தீவுகள், கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டு டென்மார்க் முதலிடம் பிடித்தது.

செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1. 2003

2. 1988

3. 2002

4. 1900

விடை: 1988

விளக்கம் : செபி (SEBI) என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஃபல்மினாலாஜி என்பது ?

ஃபல்மினாலாஜி என்பது ?

1. பிலிம் பற்றிய அறிவியல்

2. மின்னல் பற்றிய அறிவியல்

3. இடி பற்றிய அறிவியல்

4. புயல் காற்று பற்றிய அறிவியல்

விடை : மின்னல் பற்றிய அறிவியல்

வாட்ஸ்-அப் (WhatsApp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

வாட்ஸ்-அப் (WhatsApp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

1. 2009

2. 2008

3. 2000

4. 1990

விடை : 2009

கேரளாவின் மிகப்பெரிய ஏரி ?

கேரளாவின் மிகப்பெரிய ஏரி ?

1. வேம்பநாடு

2. தேக்கடி

3. குட்டநாடு

4. குன்னமடை காயல்

விடை: வேம்பநாடு

விளக்கம் : வேம்பநாட்டு ஏரி, வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரி. இதன் பரப்பளவு 1512 சதுர கி.மீ. ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. பெரியாறு, மீனச்சில், பம்பா முதலிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Model Question Paper With Answers In Tamil
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more