சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் போட்டி தேர்வாளர்களே நலமா நல்லா படிக்கிறிங்களா தயவு செய்து நல்ல படிக்கவும் உங்களது நலன், உங்களது வெற்றி கடின உழைப்புக்கு கிடைத்த பலன் ஆகும்.

போட்டி தேர்வு எழுத கணிதம் என்ற் ஜோக்கர் சீட்டு கைவசம் இருக்க வேண்டிய அவசியம் அறிந்தோம். மாணவர்களே அறிவியல் பாடம் படித்தீர்களா உங்களுக்கான விலங்கியல் பாடங்களை படிக்க வேண்டிய அடிப்படை பாட விவரம் கொடுத்தோம் , படித்திருப்போம் என நம்புகிறோம் .

டிஎன்பிஎஸ்சி எழுதும் அனைவருக்குமான இந்த குறிப்பு முறையாக பின்ப்பற்றி வெற்றி பெறுங்கள்

போட்டி தேர்வில் வெல்ல வேண்டுமா அப்டியெனில் அறிவியல் அடிப்படை அறிந்து கொள்ளுங்கள் அது அவசியம் உதவும் நீங்கள் அறிந்த தகவல்கள் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அது நன்கு பதியும். அறிவியலில் அடுத்து நாம் தாவரவியலில் அடிப்படைகளான பூஞ்சைகள், வைரஸ்கள், காளாண்கள் , பெரணிகள் போன்றவை அறிந்து கொள்ளுங்கள். மற்றும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, திணை வகைகள் குறித்து அறிவியல் பெயர்கள் அறிந்து கொள்ளவும்.
இயற்பியல் பாடத்தில் தனி ஊசல், விசை, முடுக்கம் போன்றவற்றின் வரையரைகள் அறிந்து கொள்ளவும் அவற்றின் கணக்கீடுகள் அறிய வேண்டும் . ஒலி ஒளியியல் அறிந்து கொள்ளுங்கள் கிட்டப்பார்வை தூரபார்வை போதுமானது.
வேதியியல் பாடத்தை பொருத்தவரை வெண் பாஸ்பரஸ், உப்புகள், கரைசல்கள், காரங்கள் போன்றவற்றை படியுங்கள் அது முக்கியமானது . ஒரு முக்கிய குறிப்பு நான் கூறும் தகவல்கள் அனைத்தும் அறிவியல் படிக்காதவர்களுக்கு அறிவியல் தெரிந்தவர்களுக்கு அனைவருக்குமானது இல்லை.

அறிவியல் கில்லிகளுக்கு அறிந்தவற்றை படிக்க வேண்டும் அத்துடன் ரிவைசிங் செய்யவும், முறையாக நீங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கலாம் . ஆனால் அறிவியல் படிகாதவர்கள் தங்களால் இயன்ற ஏழு முதல் பத்து வரை கேள்விகளுக்கு விடையளிக்கவும் . உங்களுக்கான கட் ஆஃப் பொருத்தவரை எந்த ஒரு பாடமும் தெரியாது என்ற நிலை இருக்ககூடாது. நான் எழுதும் குறிப்பில் டிஎன்பிஎஸ்சி எழுதும் அனைவரையும் முதல் நூறு இடங்களுக்குள் வருபவர்களாக மட்டுமே கருதி எழுதுகிறேன். 1000 பேர்க்கு வேலை 188 காலிப்பணியிடங்கள் முடியுமா முடியாத என்ற சந்தேகங்களை விட்டொழியுங்கள், வீரியமாக டாப்பராக படியுங்கள் அதுவே உங்களை உயரத்தில் நிறுத்தும்.

இந்திய ஆர்மி பயிற்சி களமொன்றில் கூட்டுநாடுகள் ஒன்றினைந்த களத்தில் நடைபெற்ற போட்டி களத்தில் நடைபெற்ற ஓட்டப் போட்டியில்  அயல் நாடுகளை சேர்ந்த இருவர் முதல் இரண்டாம் இடங்களை பிடித்தனர் ஆனால் இந்திய இராணுவ வீரர்கள் மூன்றாவது இடம் பெற்றனர் மூன்றாவது இடத்துடன் தண்டனையும் பெற்றனர்........ இதிலென்ன ஆச்சரியம் மற்றும் குறிப்பிடுமளவு சிறபெனில் நாம் மூன்றாம் இடம் பெற்றோம் அத்துடன் எத்தனை இந்திய வீரர்கள் தொடங்கினார்களோ அத்தனை பேரும் ஒரே வேகத்தில் திரும்பினார்கள் அதிலுமென்ன சிறப்பு எனில் அமெரிக்கர், இரஷ்யர் இராணுவ வீரர்கள் ஒருவர்தான் வந்திருந்தனர். ஆனால் இந்திய இராணுவத்தை சேர்ந்த அந்த குழுவே ஒருவர் விடாமல் சீரான வேகத்தில் மூன்றாம்இடம் பெற்றனர் சீரான பயிற்சி ஒரே முயற்சி இருப்பின் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவரும் முதல் நூறு இடங்களை பெறலாம் . போட்டி தேர்வு எழுதுவோரே நீங்கள் தயாரா ,,,,, தொடருங்கள் முடிவு வெற்றியில் இருக்க வேண்டும்.

சார்ந்த தகவல்கள்:

நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான ரெசிபி படியுங்கள் 

குரூப் 2ஏ நெருங்குகிறது பயிற்சி வினாக்கள் படியுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெல்லும் யுக்தியில் கணிதம் வெற்றிக்கான ஜோக்கர்களில் ஒன்றாகும்

English summary
above article mentioned GS tnpsc tips to all

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia