ஆசிரியர்களுக்கான குறிப்பு

Posted By: Sobana

அடிப்படை அனுகுமுறை :

 • ஆசிரியர்கள் இந்த நாட்டின் வளமான மாணவர்களை உருவாக்கும் திறன் படைத்தவர்கள் . நமது தேசத்தில் மாதா பிதா குரு தெய்வம் என உயர்ந்த நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆசிரியர்கள் எதிர்காலத் தலைவர்களையும் , இறந்தகால நிகழ்வுகளையும் நிகழ்கால சிந்தனைகளையும் உருவாக்கும் திறன் கொண்டவர்கள அவர்கள் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கொள்கைளாவன இங்கு தொகுத்துள்ளோம் .
 • ஆசிரியர்கள் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களின் அச்சாணி ஆக இருந்தால் மாணவர்களின் பயணம் நன்றாக இருக்கும் . ஆசிரியர்கள் மாணவர்களின் தன்மை ,அவர்களின் செயல்பாடு , அவர்களின் பாடவிருப்பம் தெரிந்திருக்க வேண்டும் . 
 • ஆசிரியர்கள் பேச்சில் என்றும் கணிவு கலந்த கண்டிப்பு இருக்க வேண்டும் .
 • பாடங்களை அனுகுபோது மாணவர்களை உடன்பயணிக்க வைக்க திறன் கொண்டவராக இருக்க வேண்டும் .
 • கட்டாய பாடம் திணித்தலைவிட நடத்தும் பாடத்தில் மாணவர்கள் விருப்பம்பெற ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும் .
 • மாணவர்கள் வகுப்பில் பேசவும் கேள்விகேட்க செய்யும் திறமை ஆசிரியர்களின் கையில் உள்ளது.
 • மாணவர்களுக்கு ஒழுக்கம் , பொருமை,ஒழுக்ககதைகள் மற்றும் மாறல் கற்றுத்தருவது ஆசிரியர்களின் பொறுப்பாகும் . 

மேம்படுத்துதல் :

 • ஆசிரியர்களுக்குள் தங்கள் ஆசிரியத்தன்மை என்றும் அப்டேட்டடு எனப்படும் மேம்படுத்துதல் அவசியமாகும் . நவீன காலத்தில் மாணவர்களின் செயல்பாடு , அவர்களின் சிந்தனைக்கு நீங்களே தூண்டுகோலாவிர் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
 • ஆசிரியத்தன்மை என்பது மேம்படுத்தப்படுதல் அவசியமாகும் . அப்பொழுதுதான் மாணவர்களும் அதே நிலையில் செயல்படுவர் . மாணவர்களின் விருப்பபாடம் ஆசிரியர்களின் கையில்தான் பாடங்களை எளிதாக விளக்குங்கள் .
 • ஆசிரியர்கள் நினைத்தால் எப்பேர் பட்ட மாணவர்களையும் படிக்க வைக்கலாம் . ஆசிரியர்கள் மாணவர்களின் மனநிலை மாற்றங்களை அறியும் யுக்தி தெரிந்தவர்கள் அவற்றை கொண்டு எதையும் செய்யலாம் .மாணவர்களின் பல்ஸ் அறிந்து செயல்படுங்கள்,,
 • ஆசிரிய மக்களே!!கையில் வெறும் மண்ணாக கிடைத்த மண்பானை எப்படி அழகான பானையாக மாறுகிறதோ அவ்வாறே மாணவர்களையும் நேர்த்தியான திறன் கொண்டவர்களாக மாற்றும் பொறுப்பு ஆசிரியருடையது ஆக குயவராக மாறிவிடுங்கள் அனைவரும் கையில் அடங்குவர் . 
 • மாணவர்களின் மனநிலை ஒரே மாதிரி இருக்காது , அவர்கள் பாடங்களை கிரகிக்கும் தன்மையும் அவ்வாறே ஒன்று போல் இருக்காது ஆக எந்த மாணவர்க்கு எப்படி படிக்க வைக்க வேண்டும் என்று கணித்து செயல்படுதல் வேண்டும் .
  ஆசியர்களின் அனுகுமுறை,மாணவ எதிர்காலம்,

செயல்பாடு :

ஆசிரியர்கள் செயல்பாட்டின் போக்கை வைத்து அந்த வகுப்பின் மாணவர்களை நாம் அறியலாம் . ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாட்டில் மாணவ எதிர்காலம் உள்ளது பள்ளியின் வளர்ச்சி உண்டு . 

 • முதல் மதிபெண் பெரும் மாணவர்களுக்கான முக்கியதுவ போக்கை கொண்ட ஆசிரியர்கள் இத்தகைய போக்கை கைவிட வேண்டும் . அனைத்து மாணவர்களையும் ஒன்றுபோல் நடத்தி வெற்றிபெற்ற ஆசிரியர்கள் பலருண்டு அதுவே ஆசிரிய தர்மம் ஆகும் .
 • மாணவர்களை கல்வி ,கலை , விளையாட்டு ,வாழ்கை என அனைத்து துறைகளிலும் மிளிர வைக்கும் பணியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் முதல் ஆராய்ச்சி பள்ளி ஆசிரியர் வரைக்கும் பங்குண்டு .ஆசிரியர்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் .
 • ஆசிரியரின் ஆக்கபூர்வ நடவடிக்கையில் மாணவ எதிர்கால வாழ்கையுண்டு இதனை உணர்ந்து செயல்படுங்கள் . 
 • புதியபுதிய கல்வி போதிக்கும் முறை கொண்டு, மாணவர்களை சலிப்பு நிலைக்குபோக விடாது தொடர்ந்து கற்கும் ஆர்வம்நிலைக்க வையுங்கள் ஆசிரியரே ... வாழ்த்துகள் ..

English summary
Here Article Mentioned about teachers tips. activities of teacher and how to approaching teacher in front of students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia