வேலை தேடி அலையும் மனமே ஆறு மனமே ஆறு

Posted By:

வேலை தேடி அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லை என்ன செய்தாலும் எதுவும் பிடிப்படவில்லை என்னதான் செய்யலாம் என்ற குழப்பதில் பல இளைஞர்கள் இருக்கின்றனர். ஒரு பக்கம் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என ஒரு தரப்பினர் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

வாய்ப்புகள் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞரகள் ஒரு திசையில், மேலும் வேலை கிடைத்தும் கிடைக்காமலும் கடனே என வேலை செய்யும் இளைஞர்கள், சொந்த தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் வசதிகள் கிடைக்காத இளைஞர்கள் என நாட்டில் வேலை வாய்ப்புக்களில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் பலர் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எதிலும் திருப்தி அடையாமல் எதை நோக்கி ஒடுகின்றோம் என தெரியாமல் ஓடும் இளைஞர்களுக்கான குறிப்புகள்.   நாட்டில் எட்டு திசைகளிலும் ஏராளமான மன குழப்பங்கள், நிம்மதியற்ற நிலையானது வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞரகளுக்கும் வேலையில் திருப்தி அடையாத இளைஞர்களுக்கும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.

வேலையில் திருப்தியற்ற நிலை :

செய்யும் வேலையை ஒருமித்த மனதுடன் செய்யாமல் பலர் இருக்கின்றனர் காரணம் மனநிறைவில்லாமல் படித்தோமா வேலை வாங்கனுமா என் மிஸின் மாதிரி செயல்பட்டால் நிச்சயம் மனநிறைவு பெற முடியாது.
உங்கள் பிரச்சனைக்கு நீங்கதான் சொல்யூசன் ஆவீர்கள், பிகாஸ் செய்யும் வேலையில் பிடிப்பற்ற நிலையில் இருக்கும் உங்கள் மனநிலையை மாற்றி அமைத்து வேலையில் ஈடுபாட்டோடு மனதை செயல்பட வைக்க வேண்டியது உங்கள் பொருப்பு ஆகும். அவ்வாறு செயல்படும் பொழுது நீங்கள் சார்ந்த நிறுவன முன்னேற்றம் உங்களை உற்சாகம் ஊட்டும்,  மேலும் நீங்கள் பெறும் வருமானத்திற் கேற்ற விஷ்வாசம் அதில் இருக்கும்.

விருப்பம் :

உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் விரும்பும் துறை எது அதனை எவ்வாறு அடைவது குறித்து சிந்தித்து செயலாற்றுங்கள் நிச்சயம் உங்களுக்கான விடைக் கிடைக்கும்.

வேலை கிடைத்தும் வேலையில் பிடிப்பற்ற நிலையில் இருக்கும் இளைஞரான உங்களுக்கு நினைவு படுத்த விரும்புவது என்னவெனில் வேலையில்லாமல் இருக்கும் உங்கள் நண்பரைப் பற்றி ஒரு நிமிடம் யோசியுங்கள் பின் செயபடுங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள் வெற்றி நிச்சயம் பெறலாம்.

வேலை தேடும் மனமே ஆறு மனமே ஆறு:

வேலை தேடும் இளைஞரா நீங்கள் உங்களுக்கான திறன் இருந்தும் வேலை கிடைக்கவில்லை என்ற ஆதாங்கத்துடன் சுற்றுகின்றீர்களா, கவலை வேண்டாம். வேலைக்கு நிறைய அப்ளிகேசன் போட்டும் கிடைக்கவில்லை.
இண்டர்வியூ போயும் வேலைக்கு போகலையே என்று ஏமாற்றம் இருக்கா, கவலையை விடுங்க கொஞ்ச காலம் சிறிது காலம் நீங்கள் படித்த படிப்பை மறந்து கிடைக்கும் வேலையில் பணியாற்றுங்கள். ஜஸ்ட் பார் சம் டேஸ் பணியாற்றுங்கள் அதன் பின் நீங்கள் நிச்சயம் உங்கள் விருப்பத்துறையில் உங்களுக்கே தெரியாமல் இருப்பீர்கள. உங்கள் எண்ணமே உங்களை உருவாக்கும்.
வேலையற்று விரக்தியில் இருக்கும் இளைஞர்களுக்கு நான் நினைவுப்படுத்தும் இரண்டு வரிகள்
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இயற்கை அமைத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்.
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மை உண்டாகும். மேலே குறிப்பிட்ட வரிகளின்   உண்மையை உணர்ந்து நன்மையை செய்யுங்கள் இந்த உலகம் உங்களிடம் மயங்கும் . அப்பொழுது உங்கள் நிலை உயரும், நிலை உயரும் போது பணிவுடன் இருங்கள் உயிர்கள் உங்களை வணங்கும்

விருப்பற்ற வேலை வெருப்பற்ற சூழல் :

விருப்பற்ற வேலை வெருப்பற்ற சூழலில் வாழும் ரக மனிதரா நீங்கள் நிச்சயம் உங்களை மாற்றி கொள்ளுங்கள் உங்களால் நிர்வாகம் பாதிக்கும் அதனை உணர்ந்து செயல்படுங்கள். விருப்பற்ற வேலையில் வெருப்பில்லா சூழல் இல்லை என்ற போதிலும் உங்களிடம் டெடிகேசன் இருக்காது. அது நீங்கள் பணியாற்றும் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு உதவாது.

சுய தொழில் :

சுய தொழில் புரிவதற்குரிய டூல்கள் அனைத்தும் தயாராக வைத்து இருந்தும் சரியான சப்போர்ட் இல்லாத நிலையில் சில இளைஞர்கள் வருந்தி சுற்றுவதுண்டு அதனால் என்ன பயன் கொஞ்சம் யோசியுங்க உங்களுக்கான தளம் அமையவில்லை வாய்ப்பு ஆதரவு கிடைக்கவில்லை என சுற்றிதிரிவதைவிட நீங்கள் சேர்ந்த துறையில் கொஞ்சம் நாட்கள் வேலை செய்து பாருங்கள் அந்த வேலையில் இருக்கும் பிராக்டிக்கல் பிராப்ளம் அறிய உதவிகரமாக இருக்கும். உங்கள் சுய தொழில் செயல்பாட்டின் போது நீங்கள் அலார்டாக இருக்க செய்யும்.

சார்ந்த பதிவுகள்:

வேலையிடத்தில் வெரிகுட் வொர்க்கராக ஒர்க்கவுட் செய்ய கற்றுக்கொள்வோம் வாங்க 

வேலையில்லா பட்டதாரியில்லை நான் வெரி இம்பார்டண்ட் பட்டதாரி


English summary
here article tells tips for job seekers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia