மாணவர்களுக்கான போர்டு எக்ஸாம் குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

Posted By:

பத்து மற்றும் பிளஸ்1, பிளஸ்2 படிக்கும் மாணவர்களே உங்களுக்கான இந்த வருடம் பொதுத்தேர்வுகள் நடக்க விருக்கின்றது. போது தேர்வை எவ்வாறு அனுக வேண்டும். பொதுத் தேர்வில் வெல்ல குறிப்புகளை வழங்கி கேரியர் இந்தியா வழிகாட்டுகின்றது.

மார்ச் மாதத் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் நனறாக படிக்க வேண்டும்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

பெற்றோர்கள் உங்கள் வீட்டில் பிள்ளைகள் பத்து மற்றும் பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு படிக்க இருக்கின்றனரா அவுங்களுக்கான நீங்கள் செய்ய வேண்டியது அவர்களின் மதிபெண்ணிற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் குறிப்பு வழங்குகின்றோம் . பெற்றோர்களே நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை நாங்கள் வழிகாட்டுகின்றோம்.

  •  மாணவர்களே தினமும் படிக்க வேண்டிய பாடங்களை முறையாக படியுங்கள். 
  •  நீங்கள் பெற வேண்டிய மதிபெண்கள் இலக்குகளை நிர்ணயுங்கள்.
  •  நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி திட்டமிட்டு பயணியுங்கள்.
  •  பயணங்களில் வரும் இடையூறுகளை கலங்காமல் சமாளியுங்கள். 
  •  இடையூறுகளற்ற வெற்றி என்றும் இனிமையை தராது ஆகையால் இடையூறுகளை வரவேற்று வெற்றி பெறுங்கள்.
  •  பொதுத் தேர்வு என்பது உங்கள் வருட உழைப்பிற்கான களம், நெல்லை போன்று வெய்யிலையும் பனியையும் கடந்து நின்று அறுவடைக்கு பயிறாக நின்று உதவும் அது போல மாணவர்களும் பாடங்களை படிக்கும் பொழுதும், அவற்றை பரிசோதிக்கும் பொழுதும் நெற் கதிர்களை போல் நின்று சிறப்பு பெற வேண்டும்.
  •  இந்த வருடம் உங்களுக்கான வருடம் என்று மனதை கட்டமைத்து செயல்படுங்கள்.
  • படிக்கும் பொழுது முழு ஈடுப்பாட்டுடன் படிக்க வேண்டும். இடையிடையே ஒய்வு பெற்று கொண்டு படியுங்கள் மாணவர்களே சாதிக்கலாம் எளிதில் .

பெற்றோர்களே பிள்ளைகளை படி படியென்று படுத்தாதிர்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது அன்பும் அரவணைப்பும் படிக்க நல்ல சூழல் மட்டுமே ஆகும்.

அன்பு:

பத்து மற்றும் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்ளின் பெற்றோர்களா நீங்கள் உங்களது முதல் கடமை பிள்ளைகளிடம் நட்பு பாராட்டுங்கள் அவர்களது தேர்வு மதிபெண்களை கண்டு ஏமாற்றம் கொள்வதை நிறுத்துங்கள் அவர்களுக்காக நீங்கள் மெனகெடுங்கள் அதனை உங்கள் பிள்ளைகள் அறிந்து கொள்ளம் படியாக செயல்படுங்கள் .

நல்ல சூழல் :

படிக்க நல்ல சூழல்களை உருவாக்கி கொடுங்கள் . மதிபெண்கள் பெறுவதற்கான நல்ல குடும்ப சூழல்கள் உருவாக்கி கொடுக்க வேண்டும் அது உங்களுடைய கடமை ஆகும். எந்த ஒரு குடும்ப பிரச்சனையையும் அவர்களிடம் திணிக்காதிர்கள் . படிக்க நல்ல ஒரு சுற்றுப்புரத்தை உருவாக்கி கொடுப்பதுடன் நட்பு பாராட்டுங்கள் அதுவே நன்மை பயக்கும்.

அவர்களின் தேவையை முன்னமே அறிவது அதன்படி செயல்படுவது உங்கள் கடமையாகும்.

சார்ந்த பதிவுகள்:

பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் முன் பள்ளியின் தரம் மற்றும் செயல்பாடு அறிதல் அவசியம்

English summary
here article tells about tips and guidance for parents and students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia