உங்களுக்கும், மேனேஜருக்கும் ஏதாவது பிரச்சனையா? எப்படி சரிப் பண்ணலாம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Posted By: Gowtham Dhavamani

உங்க மேலதிகாரி உங்கள பத்தி என்ன நெனைக்கறாங்கன்னு உங்களுக்கு வருத்தமா? நம்ம வேலை அவுங்களுக்கு பிடிச்சிருக்கா? நம்ம மேல நம்பிக்கை இருக்கா? அவுங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி நாம உழைக்கிறோமா? இப்படி கேள்விகள் உங்க மனசுல இருந்தா கவலையே வேண்டாம். நீங்க கோடில ஒருத்தர். ஏன்னா அவ்ளோ மக்கள் உங்கள மாதிரி உலகத்துல இருக்காங்க.

சராசரியா ஒவ்வொரு மனுஷனும் அவன் வாழ்க்கைல மொத்தமா 10 வருஷத்த வேலை செய்யறதுலையே செலவு செய்யறானாமா(உங்களுக்கு 50 வருஷம் சர்விஸ் இருந்தாலும் அதுல வேலை செய்யற நேரத்த மட்டும் கணக்குல வெச்சுக்குங்க) அப்பிடி இருக்க, மேலதிகாரி கூட வேலைல ஒரு சுமுகமான உறவு இருந்தாதான் நம்ம மனசும் சில சமயம் பர்ஸும் சந்தோஷமா இருக்கும். வேலை சூழலும் நமக்கு ஏத்த மாதிரி இருக்கும்.

அப்போ என்ன செய்யணும்?

1. கெயில் கைல கெடச்ச பால் மாதிரி மெயில் அனுப்ப கூடாது :

கிறிஸ் கெய்ல். பறந்து பறந்து சிக்ஸ் அடிப்பாரு. அது மாதிரி நம்ம அலுவலகத்துல சிலருக்கு மெயில் அனுப்பற பழக்கம் இருக்கும். எதுக்கு எடுத்தாலும் மெயில். காபி மெஷின் வேலை செய்யலையா - மெயில். நேரத்துக்கு ஒரு விஷயம் நடக்கலையா - மெயில். உங்க மேலதிகாரிக்கு மெயில் அனுப்பறது படிக்கறது ரொம்ப புடிக்கும்னு சொன்னாலுமே அத நீங்க செய்யாம இருக்கறது நல்லது.

நேரம்:

முடிஞ்ச அளவுக்கு அவுங்க கூட ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு நேரம் கேட்டு, அதுல என்ன விஷயமா இருந்தாலும் பேசறது நல்லது. பதவி உயர்வு பத்தி பேசறதா இருந்தாலும் சரி, செஞ்ச தவறுக்கு மன்னிப்பு கேக்கறதா இருந்தாலும் சரி. இப்பிடி செய்யறதுனால, அந்த விவாதம் சரியான பாதைல போகுதான்னு உங்களால தெரிஞ்சுக்க முடியும். அதுமட்டும் இல்லாம சிக்கல் வந்தாலும் சமாளிக்க உதவியா இருக்கும்.

"முடிஞ்ச அளவுக்கு அவுங்க கூட ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு நேரம் கேட்டு, அதுல என்ன விஷயமா இருந்தாலும் பேசறது நல்லது".

"எந்த அளவுக்கு மொக்கையா நடந்துக்க முடியுமோ அந்த அளவுக்கு மொக்கையா நாம இணைய உலகத்துல நடந்துக்கறோம். உண்மையா சொல்லணும்னா இ- மெயில விட நேர்ல பேசுனா காரியம் நமக்கு சாதகமா முடியறதுக்கு சாத்தியம் அதிகம்"னு "வி நீட் டு டாக் : ஹொவ் டு ஹேவ் கான்வர்சேஷன்ஸ் தட் மேட்டர்ஸ்" புத்தகம் எழுதுன, செலஸ்டீ ஹெட்லீ சொல்றாங்க.

2. இன்கமிங் மட்டும் இல்ல அவுட்கோயிங்கும் இருக்கு :

பல நேரங்கள்ல நாம நம்ம முதலாளி இல்ல மேலதிகாரி சொன்னத செய்யறதுக்காக படைக்க பட்டவங்கன்னு தவற நெனச்சுக்கறோம். அவுங்களுக்கு சில வேலைகள் இருக்கு. அத முடிக்க அவுங்களுக்கு கண்டிப்பா உதவிகள் தேவைப்படும்னு மறந்து போயிடும்.

அதனால உங்க மேலதிகாரி கூட வேலை ரீதியா உங்க உறவ பலப்படுத்த, ஒரு கேள்வி கேளுங்க. "என்னால உங்களுக்கு எந்த விதத்துல உதவ முடியும்?" இந்த கேள்வினால கிடைக்கற

 

பலன்கள் :

1. எந்த வேலைய உங்களுக்கு குடுக்கலாம்னு அவுங்க சிந்திப்பாங்க. சில நேரங்கள்ல உங்கள நீங்க நிரூபிக்க சரியான வாய்ப்பா அது அமையும்.
2. உங்கள பத்தி அவுங்க தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு தரும்.
3. அது மூலமா இன்னும் பல கதவுகள் உங்களுக்கு வேலை செய்யற இடத்துல திறக்கும்.

விமர்சனத்த ஏத்துக்க கத்துக்குங்க :

நான் செஞ்ச வேலைய பத்தி உங்க கருத்த சொல்லுங்க. உண்மையான கருத்த சொல்லுங்கன்னு தைரியமா கேக்க முடியும். ஆனா அதுக்கு அப்பறம் வர பதிலை ஏத்துக்க தனியா ஒரு பக்குவம் வேணும். அதுக்கு நீங்க தயாரா இருக்கணும்.

சில சமயத்துல கிடைக்கற பதில் சரியா இருக்காது. மனச புண்படுத்தவும் செய்யும். அப்பிடி இருந்தா, சிக்கலோட ஆணிவேர் எங்க இருக்கின்னு தெரிஞ்சுக்க இன்னும் சில சரியான கேள்விகள் கேளுங்க. "சரியான கேள்விகள் தேவையான பதில்கள் தரும். பதில்கள் சிக்கலை சரி செய்யும்".

உண்மையா தவற திருத்திக்க ஒரு சந்தர்ப்பமா இந்த கேள்வி பதில்கள் இருக்கறதா உங்க மேலதிகாரி உணர்ந்தா உங்களுக்கு எவ்வளோ முடியுமோ அவ்வளோ உதவுவாரு.

சில சமயம், நல்ல விமர்சனம் மட்டுமே வந்துட்டு இருந்தா, சில விஷயங்களை குறிப்பிட்டு கேக்கலாம். எங்க வேற எந்த மாதிரி விஷயத்தை செய்திருக்கலாம்னு கேக்கலாம்.

சிஸ்கோ சிஸ்டம்ஸ்:

சிஸ்கோ சிஸ்டம்ஸ் வீபீ டேனிஸ் காக்ஸ் சொல்றது " விமர்சனத்தை சரியா எடுத்துக்கறீங்கன்னு ஒரு எண்ணம் உங்க மேலதிகாரிகிட்ட வந்துட்டா, அவுங்களும் உங்களுக்கு கத்துகுடுக்க ஆவலா இருப்பாங்க".

"வேலையாட்கள் நிறுவனத்த விட்டு போறது இல்ல. மேலதிகாரிகள விட்டுத்தான் போறாங்க"

அதனால நாள் நட்சத்திரம் பாத்து வேலைய பத்தின விமர்சனம் கேக்க நிக்காதிங்க. வாரத்துக்கு ஒருதரம். மாசத்துக்கு ஒருதரம். எது வசதியோ அத தொடர்ந்து செய்து வாங்க.

ஆரய்ச்சிகள் என்ன சொல்லுதுன்னா, வேலையாட்கள் நிறுவனத்த விட்டு போறது இல்ல. மேலதிகாரிகள விட்டுத்தான் போறாங்க. அதனால உங்க மேலதிகாரிகிட்ட சரியான ஒரு புரிதல வெச்சுக்கறது எப்போமே உங்க வேலைக்கு உதவியா இருக்கும். இதுனால உங்க வேலை மட்டும் இல்லாம உங்க வாழ்க்கையும், உங்க வாழ்க்கைல இருக்கறவங்களும் சந்தோஷமாவாங்க.

English summary
Do you have any problems with your boss? Did You know what experts says about employees relationship with Management? Read here.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia