வங்கித் தேர்வுக்குத் தயாராகும்போது நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பது எப்படி...!!

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் வங்கித் தேர்வுக்காகத் தயாராகி வருகின்றனர். வசதி படைத்தவர்கள் சில வங்கித் தேர்வு பயிற்சி அளிக்கும் இன்ஸ்டிடியூட்களில் சேர்ந்து அங்கேயே தங்கிப் படித்து வருகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள், இளைஞிகள் வீடுகளில்தான் படித்து வருகின்றனர். வங்கித் தேர்வுகளில் நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பவர்கள் எளிதில் வெற்றி பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கித் தேர்வுக்கு உண்டான புத்ததகங்கள், வினா-விடை வங்கிகள் உள்ளிட்டவற்றின் துணையுடன் படித்து வருகின்றனர். வங்கித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தேர்வுக்குத் தயாராகும்போது நேர நிர்வாகத்தைக் கடைப்பிடிப்பதாகும்.

நம் அனைவருக்கும் 24 மணிநேரமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டும் உள்ளது. இந்த 24 மணி நேரத்தை தேர்வுக்குத் தயாராவதற்காக பிரித்து வைத்துப் படித்துத் தயாராகும் நாம் வெற்றி காண்கிறோம். நம்மில் சிலர் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்களாக இருக்கின்றனர்.

வெற்றியை நோக்கமாகக் கொண்டவர்கள் தங்கள் நேரத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துவதே இதற்குக் காரணம். குறிப்பாக போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற நேர மேலாண்மை முக்கியமானது.
உங்கள் நேரத்தை இன்னும் கொஞ்சம் திறமையாக நிர்வகித்தால், அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறலாம். நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பவர்கள் எளிதில் வெற்றி பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

வங்கித் தேர்வுக்குத் தயாராகும்போது நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பது எப்படி...!!

வங்கித் தேர்வுக்கு தயாராவோர் நேர நிர்வாகத்தைக் கடைப்பிடிப்பதற்கான டிப்ஸ்கள் கீழே தரப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு இந்தியன் வங்கியின் பி.ஓ. மெயின் தேர்வை எடுத்துக் கொள்வோம்.

1. இந்தியன் வங்கி பி.ஓ. பணிக்கான பிரதானத் தேர்வு முறை

ரீசனிங் பிரிவில் 50, ஆங்கிலம் 50, குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பிரிவில் 50, ஜெனரல் அவேர்னஸ் பிரிவில் 40, கம்ப்யூட்டர் பிரிவில் 20 என 200 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். இதற்காக நடத்தப்படும் தேர்வு 2 மணி நேரம் மட்டுமே.

2. உங்கள் கைகளில் இருக்கும் அசல் நேரத்தை அறிந்து கொள்ளுங்கள்

இந்தியன் பேங்க் பிஓ மெயின் தேர்வு தாளில் 200 கேள்விகள் உள்ளன. அதை நீங்கள் 120 நிமிடங்களில் தீர்க்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண். எனவே, உங்களிடம் ஒரு கேள்விக்கு 0.6 நிமிடங்கள் (அல்லது 36 வினாடிகள்) மட்டுமே உள்ளது. கேள்விகளுக்கு இடையே மாறுவதற்கு 3-4 வினாடிகள் எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு கேள்வியையும் கையாள உங்களுக்கு 30-32 வினாடிகள் இருக்கும்.

தேர்வில் பிரிவு நேர வரம்புகள் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும், தவறான பதில்களுக்கு அந்தக் கேள்விக்கு 0.25 மதிப்பெண்கள் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதைப் பொறுத்து, உங்கள் நேரத்தை பின்வரும் முறையில் பிரிக்க வேண்டும்:
ரீசனிங் பிரிவுக்கு 35 நிமிடங்கள், ஆங்கிலம் பிரிவுக்கு 25, குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பிரிவுக்கு 35, ஜெனரல் அவேர்னஸ் பிரிவுக்கு 15, கம்ப்யூட்டர் பிரிவுக்கு 10 நிமிடங்கள் என ஒதுக்கி தேர்வை எழுதவேண்டும்.

3. தேர்வுக்கான நேர மேலாண்மை உதவிக்குறிப்புகள் - ரீசனிங் பிரிவு

ரீசனிங் எனப்படும் பகுத்தறிவுப் பிரிவு தேர்வுப் பிரிவானது மிகவும் தந்திரமான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் பகுதியாக இருப்பதால், முதலில் இந்தப் பகுதியைக் கையாள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், ஆங்கிலத்துக்குப் பிறகு மற்றும் குவான்டிட்டேட்டிவ் பிரிவுக்கு முன் பகுத்தறிவு பகுதியை முயற்சிக்கலாம்.

நீங்கள் 30-35 நிமிடங்களுக்குள் 50 கேள்விகளை முயற்சிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு கேள்விக்கும் சுமார் 40 வினாடிகள் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

பகுத்தறிவுப் பிரிவில் உள்ள அனைத்து வினாக்களும் 1 மதிப்பெண் பெற்றிருந்தாலும், சில கேள்விகள் மற்றவற்றை விட தந்திரமானதாக இருக்கும். மேலும், அனைத்து வகையான கேள்விகளையும் 40 வினாடிகளுக்குள் நீங்கள் பதில் அளித்து விட முடியாது. எனவே உங்கள் கேள்விகளை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்து முதலில் எளிதான கேள்விகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

புதிர் சார்ந்த கேள்விகளை கடைசி நேரத்தில் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் தேர்வுக்கு நல்ல முறையில் தயாராகி இருந்தால், 35 நிமிடங்களில் குறைந்தபட்சம் 40-45 கேள்விகளை நியாயமான துல்லியத்துடன் நீங்கள் வசதியாக முயற்சி செய்து பதில் அளிக்க முடியும்.
ஒரு கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க முடியாத நிலையில் அதில் சிக்கிக் கொண்டால் அங்கேயே நிற்க வேண்டாம். அதை விட்டு விட்டு அடுத்த கேள்விக்குத் தாவிச் செல்லுங்கள்.

வங்கித் தேர்வுக்குத் தயாராகும்போது நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பது எப்படி...!!

4. குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பிரிவு

தேர்வில் இந்தப் பகுதியும் அதிக நேரம் எடுக்கும் என்பதால், நீங்கள் இறுதி நேரத்தில் குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பிரிவை(Quantitative Aptitude) முயற்சிக்க வேண்டும்.

35 நிமிடங்களில் குறைந்தது 40 (50 இல்) கேள்விகளை நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஒப்பீட்டளவில் மதிப்பெண்கள் மற்றும் எளிதான கேள்விகளை முதலில் தீர்ப்பதன் மூலம் நீண்ட கணக்கீடுகளைத் தவிர்க்க முயற்சி செய்யலாம். குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பிரிவில் தலா 1 மதிப்பெண் மதிப்புள்ள 50 கேள்விகள் இருக்கும்.

முதலில் எண் தொடர் கேள்விகளில், தொடரின் வடிவத்தைப் புரிந்துகொள்ள 35-40 வினாடிகளுக்கு மேல் செலவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தப் பிரிவில் எளிமைப்படுத்தல், எண் அமைப்பு, வடிவியல், சராசரி, சதவீதம், வட்டி, தரவு விளக்கம், நிகழ்தகவு, நேர வேகம் மற்றும் தூரம், எண் தொடர் போன்ற கேள்விகள் கேட்கப்படும்.

சூத்திரங்கள் மற்றும் கருத்துகளை நன்கு அறிந்திருந்தால் இந்தத் தேர்வில் வெற்றி பெறலாம் என்பது தந்திரம். கேள்விக்கு யூகமாக பதில் அளிப்பது, உங்கள் நேரத்தை வீணடித்து, எதிர்மறை மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.

5. ஆங்கிலப் பிரிவு

ஆங்கிலப் பிரிவு இலக்கணம், சொற்களஞ்சியம், ஆங்கில மொழிப் புரிதல் மற்றும் வாய்மொழித் திறன் ஆகியவற்றில் உங்கள் திறமைகளை மதிப்பிடும் வகையில் கேள்விகள் அமையும். இருப்பினும், அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறுவதற்கு உங்களின் சொல்லகராதி மற்றும் இலக்கணத்தின் மீது உங்கள் பிடியை வலுப்படுத்துவதே முக்கியமானதாக அமையும். இதனால் நீங்கள் எளிதில் மதிப்பெண்களைப் பெற முடியும்.

முதலில் படித்து கேள்வியைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும். காம்ப்ரஹென்ஷன் பிரிவில் கிட்டத்தட்ட 7-10 கேள்விகளைக் காண முடியும். அதன் பின்னர் குளோஸ் டெஸ்ட், வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் சொற்றொடர் மாற்றுதல் போன்ற பிரிவுகளுக்குச் செல்லவும்.

நீங்கள் 40 ஆங்கில கேள்விகளை 25 நிமிடங்களுக்குள் தீர்க்க வேண்டும், இது 2 கேள்விகளுக்கு சுமார் 1 நிமிடம் 15 வினாடிகளை வழங்குகிறது.

வங்கித் தேர்வுக்குத் தயாராகும்போது நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பது எப்படி...!!

6. ஜெனரல் அவேர்னஸ்

ஜெனரல் அவேர்னஸ் எனப்படும் பகுதியானது பொது விழிப்புணர்வு அல்லது நாட்டு நடப்பு என் அழைக்கப்படுகிறது. பொது விழிப்புணர்வு பிரிவில் நடப்பு விவகாரங்கள், GK (வரலாறு, அரசியல், புவியியல், பொது அறிவியல் போன்றவை) மற்றும் மிக முக்கியமாக வங்கி மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்வுகள் பற்றிய உங்கள் அறிவை சோதிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும்.

15 நிமிடங்களில் 40 கேள்விகளை முயற்சி செய்ய, கேள்வியை கவனமாகப் படித்து பதில் அளிக்கவேண்டும்.

கேள்வி தொடர்பான தலைப்பைப் பற்றி நீங்கள் உறுதியாகப் படித்திருந்தால் மட்டுமே கேள்விக்கான விடையை எழுதவும்.

இந்தப் பிரிவின் எந்தவொரு கேள்வியையும் யூகிக்கவோ அல்லது 30 வினாடிகளுக்கு மேல் செலவிடவோ வேண்டாம்.

ஜெனரல் அவேர்னஸ் பிரிவில் கீழ்கண்ட தலைப்புகள் உங்களுக்கு உதவும். இவற்றை நன்கு படித்து வைத்திருந்தால் எளிதில் தேர்வில் விடைகளை எழுத முடியும்.

1. வங்கிகள் & தலைமையகம் 2. பணமதிப்பிழப்பு - முக்கியமான உண்மைகள், வரலாறு. 3. வங்கிகள் மற்றும் வாராக் கடன்கள். 4. பணம் செலுத்தும் வங்கி. 5. நிதி மற்றும் வங்கிச் சுருக்கங்கள் 6. மொத்த உள்நாட்டு உற்பத்தி. 7. பொருளாதார ஆய்வு. 8. மத்திய அரசு பட்ஜெட்.

பல்வேறு புத்தகங்களில் ஜெனரல் அவேர்னஸ் குறித்து படித்து அறியலாம். மேலும் இதுதொடர்பான செல்போன் ஆப்ஸ்களையும் பயன்படுத்தலாம்.
You can find more information in the Testbook blog's GK section and use the Testbook Current Affairs app.

7. கம்ப்யூட்டர் பிரிவு

கணினிகள் பிரிவில் இணையம், மைக்ரோசாஃப்ட் பயன்பாடுகள், சுருக்கங்கள், நினைவகம் மற்றும் சேமிப்பகம் போன்றவற்றின் அடிப்படையில் கேள்விகள் இருக்கும். கம்ப்யூட்டர் அப்ரிவியேஷன்களின் (சுருக்கங்கள்) அடிப்படையில் 1 கேள்விக்கு 10 வினாடிகளுக்கு மேல் செலவிடக்கூடாது. இதேபோல், மைக்ரோசாஃப்ட் வேர்டில் குறுக்குவழிகள் பற்றிய கேள்விகள் உங்கள் நேரத்தை 15 வினாடிகளுக்கு மேல் பெறக்கூடாது.

இணையம் மற்றும் பயன்பாடு சார்ந்த கேள்விகளுக்கு மட்டும் 15 வினாடிகளுக்கு மேல் உங்கள் கவனம் தேவை. இந்தப் பகுதியில் நீங்கள் கேள்விகளுக்கான பதிலை யூகிக்க வேண்டாம் என்று சொல்லத் தேவையில்லை, நீங்கள் சரியாகப் பதிலளிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

கணினி வன்பொருள் மற்றும் முக்கியமான கேள்விகள், கணினி வினாடி வினா போன்ற பகுதிகளை நன்கு தெரிந்து வைத்திருப்பது நல்லது.

8. ரீசனிங் மற்றும் குவாண்டிடேட்டிவ் பிரிவுகளில் உள்ள கேள்விகள் உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதிக கணக்கீடுகள் இல்லாமல் குறுகிய மற்றும் புரிந்துகொள்ளும் கேள்விகளைக் கண்டறிந்து அவற்றை முதலில் முயற்சி செய்யலாம்.

9. தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் 1 மதிப்பெண் தான். எனவே, உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். கடினமான கேள்விகளைத் தீர்ப்பதில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

10.முதலில் உங்களுக்குத் தெரிந்த கேள்விகளை முயற்சிக்கவும். நீங்கள் விட்டுவிட்ட கேள்விகளை மறந்து விடுங்கள். அதை கடைசியில் முயற்சிக்கலாம் அல்லது கைவிடப்பட்ட கேள்விகளை நீங்கள் எழுத முயற்சித்தால் நீங்கள் நிச்சயமாக மதிப்பெண்களை இழப்பீர்கள்.

11. உங்களால் முடிந்தவரை மனதளவில் கணக்கிட முயற்சிக்கவும். எல்லாவற்றையும் காகிதத்தில் போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். வினாத் தாளைப் பெறுவதற்கு முன் அமைதியாக இருங்கள், சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடையுங்கள், இதனால் உங்களுக்கு அவசரம் இருக்காது. முழு தேர்வையும் எளிதாக முயற்சி செய்யலாம்.

இந்த டிப்ஸ்களைக் கடைப்பிடித்தால் தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Time management is crucial to success, especially in competitive exams. If you manage your time a little more efficiently, you can maximise your attempt, score, accuracy and chances of making it to the interview. This is because successful and success oriented people use their time more efficiently.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+