உங்க "ரெஸ்யூம்"ல இந்த 40 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி!

By Gowtham Dhavamani

நம்ம ரெஸ்யூம பட்டி டிங்கரிங்க பாக்கற நேரம் எல்லாருக்கும் வரும். வேலை தேட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, இல்ல வருஷத்துக்கு ஒரு தரம் உங்க ரெஸ்யூம சரிபாத்தா போதும்.

ஆனா எல்லா நேரமும் உங்களுக்கு அந்த நேரம் இருக்கும்னு சொல்லிட முடியாது. சில சூழ்நிலைகள்ல நிமிஷங்கள் மட்டுமே உங்ககிட்ட இருக்கும். அந்த மாதிரி நேரத்துல நீங்க ரெஸ்யூம்ல சுலபமா மாற்றங்கள் செய்ய நாங்க ஒரு பட்டியல் போட்டுருக்கோம். இந்த கட்டுரைல அதான் பாக்க போறீங்க.

எவளோ நேரம் உங்களுக்கு இருக்குன்னு தெரிஞ்சுட்டு, உங்க ரெஸ்யூம டக்கரா மாத்த தயார் ஆகுங்க..

1. ஃபான்ட் மாற்றவும் :

உங்களுக்கு புடிச்ச ஃபான்ட்ட ரெஸ்யூம்ல போடறது முக்கியம் இல்ல. அத படிக்கறவங்களுக்கு பளிச்சுனு புரியற மாதிரி இருக்கணும். கிழிஞ்சு போன பழைய ஜீன்ஸ் மாதிரி இல்லாம கொஞ்சம் கண்ணுக்கு வேலை வெக்காம இருக்கற ஃபான்ட்டா இருந்தா நல்லது. படிக்கவே முடியலைன்னா வேலை கிடைக்க வாய்ப்பே இல்ல.

2. "ரெப்ரன்செஸ்" தூக்கிடுங்க

நீங்களா போய் "நான் நல்லவன், என்ன நம்புங்கன்னு" சொல்ற மாதிரி உங்க பழைய நிறுவன ஆட்கள "ரெப்ரன்செஸ்"சா தர வேண்டாம். அவுங்களுக்கு வேணும்னா அவுங்க கேப்பாங்க. அப்போ குடுத்துக்கலாம் .

3. "ஆப்ஜெக்ட்டிவ்" தூக்கிடுங்க :

பரம்பரை பரம்பரையா எல்லா ரெஸ்யூம்லையும் இந்த ஆப்ஜெக்ட்டிவ்னு ஒரு 10 வரி இருக்கும்.
என்னோட குறிக்கோள் இது,
நான் இந்த வேலைய ஏன் விரும்பறேன்,
வேலைல எப்பிடி இருப்பேன்..
இப்படிலாம் எந்த விஷயமும் அவசியமே இல்ல இந்த காலத்துல. தூக்கிடுங்க.

4. "ஸ்பெல்லிங்" முக்கியம் அமைச்சரே :

என்ன செலவானாலும் பரவால்ல எழுத்துப்பிழை இல்லாம ரெஸ்யூம தயார் செய்யுங்க. ஏன்னா இதைக்கூட பாக்கல அப்பறம் வேலைய எப்பிடி ஒழுங்கா செய்வான்/செய்வாள்னு ஒரு கருத்து மனசுல உருவாகிடும்.

5. பார்மேட் கவனிக்கணும் :

எந்த ஃபார்மேட்ல அனுப்ப சொல்லி இருக்காங்களோ அதுல அனுப்பறது தான் சரி. முடிஞ்சா பீ.டீ.எப்ல அனுப்புங்க. தகவல் மாறாம இருக்கும். ஒருவேளை கிரியேட்டிவ் ஃபீல்ட் சேர்ந்தவரா இருந்தா.. ஃபோட்டோஷாப்ல அட்டகாசமா ஒரு ரெஸ்யூம் டிசைன் பண்ணிக் கூட அனுப்பலாம். இதுவே உங்கள கொஞ்சம் உயர்த்தித் தனித்துவமா காட்ட உதவும்.

6. நல்ல பேரா வைங்க :

உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பேரு, உங்க பேரு தான? அப்போ அதையே ரெஸ்யூமுக்கும் வைங்க. உங்க பேர போட்டு பின்னாடி ரெஸ்யூம்னு எழுதுங்க. அப்போதான் கூட்டத்துல தொலைஞ்சு போகாம இருக்கும்.

7. உங்க முகவரி அவசியம் இல்ல :

நீங்க உள்ளூர் இல்லைனா உங்க முகவரி அவுங்களுக்கு அவசியம் இல்ல. நீங்க உள்ளூரா இருந்தா உங்க இடத்துல இருந்து நிறுவனத்துக்கு வர எவ்வளோ நேரம் ஆகும்னு பாக்கற வாய்ப்பு இருக்கு. அதனால உங்களுக்கு வேலை கிடைக்காம போற வாய்ப்பும் இருக்கு. அதனால அத தூக்குங்க.

8. உங்க "லிங்க்ட் இன்" பக்கத்தோட முகவரியை இதுல எழுதி வைங்க :

உங்க முகவரிய தூக்கிட்டு அங்க உங்க லிங்க்ட் இன் பக்கத்தோட சுட்டிய (யூஆர்எல்) குடுத்து வைங்க. முடிஞ்சா ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களோட சுட்டியும் குடுங்க. என்ன ஆனாலும் சரி, உங்க பேஸ்புக் முகவரி வேண்டாம். சில நேரத்துல கிடைக்கற வேலை கூட கிடைக்காம போய்டும்.

அப்பறம் "லிங்க்ட் இன்" கொஞ்சம் நல்ல படியா பராமரிக்கறது முக்கியம். அதே போல உங்களுக்குன்னு ஒரு யூஆர்எல் உருவாக்கி அத ரெஸ்யூம்ல போடுங்க.

 

9. ஹைப்பர் லிங்க்களுக்கு உயிர் கொடுங்கள் :

உங்கள் ரெஸ்யூம் எப்படியும் கணினியில் தான் படிக்கப்படும். எனவே நீங்கள் உள்ள வைத்திருக்கும் அனைத்து சுட்டிகளையும் கிளிக் செய்த உடன் அதன் முகவரிக்கு செல்லுமாறு வையுங்கள். அதன் மூலம் மனிதவள அதிகாரிக்கு வேலை குறையும். உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

10. தேவை இல்லாதவற்றை நீக்கவும் :

உங்கள் பிறந்தநாள் , திருமண நிலை, மதம் குறித்த தகவல்களை நீக்கவும். அவற்றை கேட்பது சட்டப்படி குற்றமாகும் (அமெரிக்காவில்)

ஆனால், நமது நாட்டில் வேலையில் சேர்ந்த உடன் அவற்றை கண்டிப்பாக கேட்டு பெறுவார்கள்.

 

11. கல்லூரி முடித்த ஆண்டு அவசியம் இல்லை :

நீங்க படிச்சுருக்கீங்களா, என்ன படிச்சுருக்கீங்க அதான் நிறுவனத்துக்கு அவசியம். படிச்சு வெளில வந்த வருஷம் அவுங்களுக்கு அவசியம் இல்ல. ஏன்னா அத வெச்சு உங்க வயச கணக்கிட முடியும். அதனால வருஷத்த தூக்கிடுங்க.

12. அனுபவம் முன்னாடி படிப்பு பின்னாடி

வேலைக்கு க்யூல நிக்கும் போதும் சரி, ரெஸ்யூம்ல எழுதும் போதும் சரி, முதல்ல அனுபவத்துக்கு தான் மதிப்பு. அதனால முதல வேலை அனுபவத்த வைங்க அப்பறம் படிப்பு பத்தி எழுதுங்க.

13. படிக்கற மாதிரி இருக்கணும் :

முன்னாடியே பான்ட் மாத்த சொல்லி இருந்தோம். அதோட இன்னொரு விஷயம் முக்கியம். ரெண்டு வரிகளுக்கு நடுவுல இருக்கற இடம். எல்லா தகவலையும் ரெண்டு பக்கத்துக்குள்ள முடிக்கணும்னு கசகசன்னு எழுதாம, முடிஞ்ச அளவுக்கு இடைவெளி விட்டு வரிகளை வைங்க.

14. விளிம்புல அதிக இடம் வேண்டாம்.

வரிகளுக்கு நடுவுல நீங்க இடம் விட்டா வேற வழி இல்ல, விளிம்புல இடத்த கொறச்சுதான் ஆகணும். அதனால விளிம்புகளை (மார்ஜின்) முன்னாடியே சின்னது செய்துட்டு டைப் பண்ண ஆரம்பிங்க.

15. பள்ளி பற்றின தகவல் அவசியம் இல்ல :

இந்த வருஷம் தான் படிச்சு முடிச்சு வெளில வந்துருக்கேன்னு சொல்ற ஆள் நீங்கனா , பள்ளிக்கூட தகவல் ரெஸ்யூம்ல இருக்கலாம். இல்லைனா அத தூக்கிடறது நல்லது.

16. திறமைகள் பகுதியை மேம்படுத்துங்க :

சமீபத்துல நீங்க வளத்துக்கிட்ட திறமைகள் இருந்தா அத சேர்த்துக்குங்க. அப்படி எதுவுமே இல்லைனா, விண்ணப்பிக்கற வேலைக்கு ஏத்த மாதிரி புதுசா தேவ படுகிற விஷயங்கள தெரிஞ்சுகிட்டு அத எழுதுங்க. முக்கியமா பழைய விஷயங்கள தூக்குங்க. மைக்ரோசாப்ட்ல வர்ட், எக்செல் பவர்பாய்ண்ட் இதுங்கள குழந்தைங்க கூட தெரிஞ்சு வெச்சுருக்கு. அதனால அதுங்கள தூக்கிடறது நல்லது.

17. அதிகமான திறமைகள் இருந்த அத வகைப்படுத்துங்க :

பல மொழிகள் தெரியும், பல கணினி மொழிகளும் தெரியும், பல மென்பொருள் தெரியும்னா, ஒவ்வொன்னையும் தனித்தனியா வகைப்படுத்தறது நல்லது. அப்போ எந்த தகவலும் மனிதவள அதிகாரி கண்ணுல படாம தப்பிக்காது.

18. ஃபார்மேட்டிங் கவனிங்க :

ரெஸ்யூம் முழுக்க ஒரே ஃபார்மேட்ல இருக்கறது அவசியம். இங்க ஒன்னு அங்க ஒன்னுன்னு இல்லாம இருக்கணும். நீங்க உபயோகிக்கற புள்ளெட்ஸ் கூட ஒரே மாதிரி இருக்கறது நல்லது.

19. ஷார்ட் பார்ம் வேண்டாம் :

பல நிறுவனங்கள் "அப்ளிகன்ட் டிராக்கிங் சிஸ்டம்" உபயோகிக்கறாங்க. அதனால நீங்க முக்கியமான தகவல்களை சுருக்கமா எழுதி இருந்தா அந்த மென்பொருள் உங்கள கண்டுக்காது. அதனால முடிஞ்சா அளவுக்கு எல்லாத்தையும் விவரமா விரிவா எழுதுங்க.

20. பாத்த உடனே புரியனும். தேடக்கூடாது :

சில நேரங்கள்ல ரெஸ்யூம்ல பல விஷயங்கள் செத்துருப்பாங்க. என்ன இருக்கு அது எங்க இருக்குனு தேடி பாக்கறதுக்குள்ள அதிகாரிக்கு வயசாகிடும். அதனால வித்தியாசமான வடிவம், வித்தியாசமான வண்ணங்கள், இதுங்கள தவிர்க்கிறது நல்லது.

21. இடைவெளி இருக்கா ? கவனிங்க :

ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் நடுவுல சில மாதங்கள் இடைவெளி இருக்க வாய்ப்பு இருக்கு. அப்படி இருந்த தேதிகளை விட்டுட்டு வருடங்கள் மட்டும் எழுதறது நல்லது.

22. மொழி அவசியம் :

சாதாரணமா 2ஆம் வகுப்பு குழந்தைக்கு புரியற மாதிரி மொழி இருக்கும். அத முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் கெத்தா மாத்துங்க. நம்ம சசி தரூர் மாதிரி சில வார்த்தைகள் அங்க அங்க இருக்கறது நல்லது.

23. உரிச்சொல் என்ன இருக்கு உள்ள :

உரிச்சொல் அதாவது நீங்க பயன்படுத்தி இருக்கற அட்ஜெக்ட்டிவ் கொஞ்சம் வித்தியாசமா இருந்தா நல்லது. உங்களோட திறமைகள எடுத்து சொல்ற மாதிரி இருக்கணும்.

24. பதவிஉயர்வு சரியாய் குறிப்பிடுங்க :

ஒரே நிறுவனத்துல பல நிலைகள்ல வேலைசெய்திருந்தா, எல்லா பதவி உயர்வையும் சரியா குறிப்பிடுங்க.

25. வரலாறு இங்க முக்கியம் இல்ல :

அதிகமான அனுபவம் இருந்தா எல்லாத்தையும் நீங்க ரெஸ்யூம்ல குறிப்பிடனும்னு அவசியம் இல்ல. கடைசியா 10 இல்ல 15 வருஷத்தோட தகவல் இருந்தா நல்லது. அந்த மாதிரி வரலாறு எழுதி இருந்தா அந்த எடத்துல வேற ஏதாவது எழுதுங்க.

26. விடுபட்ட வார்த்தைகள்

பார்மேட்டிங் சமயத்துல சில வார்த்தைகள் இல்ல எழுத்துக்கள் தனியா விடுபட்டு போய்டும். அத எப்பிடி முன்னாடி இருக்கற வரில சேக்கறதுன்னு பாருங்க. அப்பிடி செய்யும் போது அதிகமான இடமும் உங்களுக்கு கிடைக்கும்.

27. நுனிபுல் மேயர மாதிரி இருக்கணும் :

ஊர் பக்கம் மாடுங்க புல்லு சாப்பட்றத பாத்தா புரியும் உங்களுக்கு. நுனி புல்ல மட்டும் மேஞ்சுட்டு மத்தத விட்டுரும். அதே மாதிரி உங்க ரெஸ்யூம்ல பாத்த உடனே தகவல் புரியற மாதிரி தெளிவா வெச்சா நல்லது.

28. வார்த்தைகளுக்கு பதில் எண்கள் :

எண்கள் போட வேண்டிய எடத்துல எண்களை மட்டுமே உபயோகியுங்க. அப்போதான் உங்களுக்கு இடமும் அதிகம் கிடைக்கும். பாக்கவும் பளிச்சுனு எண்கள் கண்கள்ல படும். (முப்பது சதவீதம் = 30%)

29. வாய்விட்டு படித்து பார்க்கவும் :

சத்தம் போட்டு படிச்சு பாத்தா தவறான வார்த்தைகள், சரியா அமையாத வரிகள், தகவல்கள் எல்லாமே சட்டுனு கவனத்துக்கு வரும். அதனால ஒரு தரம் சத்தம் போட்டு படிச்சுருங்க.

30. முதல் அபிப்ராயம் :

உங்க ரெஸ்யூம சொடுக்குறதுக்கு (கிளிக்) முன்னாடி என்ன மாதிரி இருக்க போகுதுன்னு தெரிஞ்சுக்குங்க. முக்கியமா உங்க ரெஸ்யூமோட மேல் பகுதி. பாக்கறதுக்கு அழகா அம்சமா இருந்தா முதல் அபிப்ராயம் நல்லதா இருக்கும்.

31. புல்லட் பாயிண்ட்ஸ் புல்லெட் சைஸ் :

சில பேர் புல்லட் பாயிண்ட்ஸ்ல மைல் நீளத்துக்கு தகவல் வெச்சிருப்பாங்க. அதே சமயம் அதிகமான பாயிண்ட்ஸ் இருக்கறதும் நல்லது இல்ல. எல்லா புல்லட் பாயிண்ட்ஸ்சும் புல்லட் சைஸ்ல இருந்தா நல்லது.

32. சோதித்து பார்க்கவும் :

உங்க ரெஸ்யூம உங்களுக்கு தெரியாத ஒருத்தர் கிட்ட குடுத்து படிச்சு பாக்க சொல்லுங்க. அவருக்கு புரியுதா புரியலையா? அவர் இப்படி ஒரு ரெஸ்யூம் பாத்தா என்ன செய்யவார் இப்பிடி பட்ட கேள்விகள் கேளுங்க. அவர் குடுக்கற பதில் வெச்சு உங்க ரெஸ்யூம மாத்தி அமையுங்க.

33. வர்ட் (word) கிளவுட் உபயோகியுங்க :

இணையத்துல பல மென்பொருள் கிடைக்குது. உங்க ரெஸ்யூம்கு ஏத்த கீ வார்த்தைகள் என்ன என்ன அதுங்க சொல்லுதுனு சோதிச்சு பாருங்க. சில நேரத்துல நமக்கு சம்மந்தமே இல்லாத வார்த்தைகளா காட்டும். அப்போ எப்பிடி மாத்தி அமைக்கணும்னு புரியும்.

34. அளவுகள் இருக்கறது நல்லது :

நா வேலை செஞ்ச நிறுவனத்துக்கு என்னால லாபம்னு சொல்றத விட, இந்த மாசத்துல இவளோ லாபம்னு சொல்றது சரியா இருக்கும். வெறும் வார்த்தைகளா இல்லாம, அளவுகள் மூலமா குறிப்பிடுங்க. வெளிய சீக்கரம் முடிக்க உதவினேன்கறத விட, 3 மாசத்துல முடிக்கற வேலைய 1 மாசத்துல முடிச்சேன்னு சொல்லுங்க. சரியா இருக்கும்.

35. என்ன பயன்னு தெளிவா குறிப்பிடுங்க:

என்னால என்னோட நிறுவனத்துக்கு இந்த விதத்துல லாபம் கிடைச்சுது. இந்த மாதிரியான வேலைகள் கிடைச்சுது. இவளோ சீக்கரம் பணிகளை முடிச்சோம். இந்த மாதிரி சிக்கல்கள தீர்த்து வெச்சேன். இப்பிடி உங்களால உங்க நிறுவனத்துக்கு கெடச்ச பலன்கள எடுத்து சொல்லுங்க. இதனால உங்க கிட்ட என்ன எதிர்பாக்கலாம், எந்த வகைல நீங்க உதவுவீங்க நிறுவனத்துக்குன்னு அதிகாரிக்கு புரியும்.

36. இரத்தின சுருக்கமா ஒரு முகவுரை எழுதுங்க :

உங்களோட அனுபவம் என்ன? எந்த துறை உங்களுக்கு சரியா இருக்கும்? உங்க சாதனைகள் என்ன? இப்பிடி பட்ட விஷயங்களை எவளோ சுருக்கமா சொல்ல முடியுமோ அவளோ சுருக்கமா உங்க ரெஸ்யூம் ஆரம்பத்துல சொல்லுங்க. இதனால மனிதவள அதிகாரிக்கு வேலை மிச்சம்.

37. ஹெட்டர் மேம்படுத்துங்க :

அதிகமான கணினி அறிவு இருந்தாதான் ஹெட்டர் செய்ய முடியும்னு இல்ல. எவளோ அம்சமா அத வடிவமைக்க முடியுமோ அவளோ தூரம் முயற்சி பண்ணுங்க. கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தா வசதியா இருக்கும்.

38. அதிகமா காலி இடம் இருக்கா?

எந்த நிறுவனமும் நீங்க முழுநேரமா வேலை செஞ்சது, சம்பளம் வாங்கிட்டு வேலை செஞ்சதுதான் போடணும்னு சொல்லல. அதனால பகுதி நேரமா வேலை பாத்தது, இல்ல பயிற்சிக்காக வேலைபாத்தது இப்பிடி எந்த வேலையா இருந்தாலும் அதையும் சேத்து எழுதுங்க.

39. வெட்டி ஏறிய தயங்காதிங்க :

இடம் பத்தலை, 2 பக்கத்துக்குள்ள முடிக்க முடியல, அதிகமா வரிகள் இருக்கற மாதிரி தெரியுது, இப்பிடி எந்த விஷயம் உங்க மனசுக்கு பட்டாலும், உடனே உள்ள இருக்கற வரிகள குறைக்க தயங்காதிங்க. முடிஞ்சா அந்த ஹெட்டர் சின்னது பண்ணப்பாருங்க. பார்மேட் மாத்த பாருங்க.

40. நல்ல டெம்ப்லேட் பயன்படுத்தறது :

இணையத்துல பல டெம்ப்லேட் கிடைக்குது ரெஸ்யூம் எழுத. உங்களால ஒன்னு உருவாக்க முடியலைன்னா கடைசி வழி அதுல ஒன்னு தேர்வு செய்யறது. உங்க நண்பர்கள் கிட்ட பேசி அவுங்க ரெஸ்யூம் வாங்கி அதே மாதிரி எழுதறத விட இப்படி செய்யறது கொஞ்சம் நல்லது. பாக்கவும் கெத்தா இருக்கும்.
சீக்கரம் உங்களுக்கு வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    Things to Check and Change in Your Resume To Get a Job for Sure!

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more