விண்வெளில ஜீரோ கிராவிட்டி... வடிகட்டுன பொய்! நாசாவே சொல்லுது பாருங்க!

நம் பள்ளிப் பருவத்தில் நமக்கு உண்மை என சொல்லித்தந்த சில விசயங்கள் தற்கால தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளால் பொய்த்துப்போய்விட்டன.

நம் பள்ளிப் பருவத்தில் நமக்கு உண்மை என சொல்லித்தந்த சில விசயங்கள் தற்கால தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளால் பொய்த்துப்போய்விட்டன. என்றாலும், பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டமையால் அவற்றை இன்றும் உண்மை என்றே நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவை எப்போதோ காலாவதி ஆகிவிட்டன.

விண்வெளில ஜீரோ கிராவிட்டி... வடிகட்டுன பொய்! நாசாவே சொல்லுது பாருங்க!

ஆனாலும் நம்மளமாரி வெகுளியான 90ஸ் கிட்ஸ் இன்னமும் அத நம்பிக்கிட்டு இருக்கோம். இப்டி பொய்யினு கூட தெரியாம இன்னும் தீவிரமா அத நம்பிக்கிட்டிருக்குற அந்த சில விசயங்கள பத்தி பாக்கலாம் வாங்க.

எடிசன் முதல்ல பல்பை கண்டுபிடிக்கல

எடிசன் முதல்ல பல்பை கண்டுபிடிக்கல


எல்க்ட்ரிக் பல்ப கண்டுபிடிச்சது யாரு? பத்தாங்கிளாஸ் வரைக்கும் பர்ஸ்ட் பெஞ்ச்ல இருந்த 90ஸ் கிட்ஸ் டக்குனு எந்திரிச்சி தாமஸ் ஆல்வா எடிசன்னு சொல்லிருப்போம். ஆனா அது உண்மை இல்ல.

பிரபல ஆராய்ச்சியாளரான தாமஸ் ஆல்வா எடிசன் தான் முதன்முதலில் லைட் பல்பை கண்டுபிடித்தவர் என நமது பள்ளிக்கூட அறிவியல் பாடம் சொல்லித்தந்துள்ளது.

 

அப்ப அவரு இல்லியா?

அப்ப அவரு இல்லியா?


எடிசன் சந்தேகத்திற்கு இடமின்றி உலகில் மிகப்பெரிய விஞ்ஞானி என்றாலும் கூட லைட்டை முதலில் அவர் கண்டுபிடிக்கவில்லை. 1879-ஆம் ஆண்டு தான் லைட் கண்டுபிடித்ததாக அதற்கான காப்புரிமையை எடிசன் பெற்றார். ஆனால், அவருக்கு முன்பாகவே பலர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல மாதிரிகளை உருவாக்கினார்கள்.

அப்ப பர்ஸ்ட் யாரு?

அப்ப பர்ஸ்ட் யாரு?


1854-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த கடிகார வல்லுநரான ஹென்ரிட் கோயபெல் என்பவர் கிட்டத்தட்ட லைட் பல்பை ஒத்திருக்கும் ஒரு மாதிரியை உருவாக்கி லைட்டின் பிலமன்ட்டேகை மூங்கில் இலைகளைப் பயன்படுத்தி சில மணி நேரங்கள் எரியவிட்டு சாதித்தார். ஆனால்!!!?

துரதிஷ்டவசமாக அவர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறவில்லை. காப்புரிமை பெறாததால் லைட்டை கண்டுபிடித்தவர் என்னும் பெருமையை அவர் இழந்துவிட்டார்.

 

அப்பத்தான் எடிசன் உள்ள வராரு

அப்பத்தான் எடிசன் உள்ள வராரு


25 ஆண்டுகள் கழித்து எடிசன் 1879-ஆம் ஆண்டு லைட் பல்பில் வடிவமைப்பை மேம்படுத்தி தான் கண்டுபிடித்த கார்பன் பிலமென்டைக் கொண்டு சுமார் 40 மணிநேரம் லைட்டை எரியவைத்து சாதனை படைத்ததோடு லைட்டிற்கான காப்புரிமையையும் பெற்றுக்கொண்டார்.

பாதி மூளைய ஆப் பண்ணி வச்சிருக்கோம்

பாதி மூளைய ஆப் பண்ணி வச்சிருக்கோம்


பள்ளிக்கூடம் போகும்போது சில விசயங்கள் நம்மள மெய்சிலிர்க்க வைக்கும். ஏற்கனவே நல்லா செயல்பட்டுக்கிட்டு இருக்குற நம்ம பையன் கிட்ட போயி, தம்பி மனிதன் தன் மூளைய 10 சதவிதம்தான் பயன்படுத்துறான். மீதிய பிஃரஷ்ஷா வச்சிருக்கான். முழுக்கா பயன்படுத்தினானு வை கம்யூட்டர விட ஸ்பீடா எல்லாத்தையும் பண்ணி முடிச்சிடுவான்னு உட்டாங்க பாருங்க.

நீங்களும் ஆகலாம் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்

நீங்களும் ஆகலாம் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்


அதையும் பயன்படுத்தினால் ஆகசிறந்த விஞ்ஞானி ஆகிவிடுவான். ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்தான் அதிகமா மூளைய உபயோகிச்சி பெரிய விஞ்ஞானி ஆயிட்டாரு என்றெல்லாம் நமது பள்ளிப் பருவத்தில் இருந்தே ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்லக் கேட்டிருப்போம்.

இதுவும் பொய்யா?

இதுவும் பொய்யா?


அதெல்லாம் உண்மை இல்லை. மூளையை 10 சதவிகிதம், 20 சதவிகிதம் என சிக்கனமாகவெல்லாம் பயன்படுத்த முடியாது. நரம்பியல் வல்லுநர்கள் இது மூளையைப் பற்றிய தவறான புரிதல் என்று நிரூபித்துள்ளனர். அதாவது, ஒரு மனிதன் தனது மூளையை கிட்டத்தட்ட முழுமையாகப் பயன்படுத்துகிறான். மூளையின் ஒவ்வொரு பகுதியும் கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் செயலில் உள்ளது. மேலும், மனித மூளையில் 1 சதவிகிதம் இயங்காமல் போனாலும் கூட விளைவுகள் மோசமானதாகவே இருக்கும் என நரம்பியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

விண்வெளியில் ஈர்ப்பு விசை '0'

விண்வெளியில் ஈர்ப்பு விசை '0'

விண்வெளியில் புவியீர்ப்பு விசை '0' ஆக இருக்கும் என பள்ளிப் பருவ காலத்தில் யாரேனும் கூற நாம் வியந்துபோய் கேட்டிருப்போம். ஆனால், அது தவறு என்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம்.

அங்கையும் இருக்கு கிரேவிட்டி

அங்கையும் இருக்கு கிரேவிட்டி


அதாவது, '0' விசை காரணமாகத்தான் பொருட்கள் மிதக்கின்றன என நாம் பயின்றுள்ளோம். இதனை மறுக்கும் நாசா '0' விசை என்ற ஒன்று இல்லை எனவும், மாறாக மைக்ரோ கிரேவிட்டி எனப்படும் மிகக்குறைந்த புவிஈர்ப்பு விசை அங்கு உள்ளது எனவும் தெரிவிக்கின்றது.

அப்படின்னா என்ன?

அப்படின்னா என்ன?


மைக்ரோ கிரேவிட்டி இருப்பதால்தான் விண்வெளி வீரர்களால் விண்களத்திற்குள் மிதக்க முடிகின்றது. அல்லது விண்களத்திற்கு வெளியே நடக்க முடிகின்றது. கனமான பொருட்களை எளிதாக நகத்த முடிகின்றது என நாசா சுட்டிக்காட்டியுள்ளது. விண்வெளியில் பொருட்களை நகர்த்துவதற்கும், பயன்படுத்துவதற்கும் ஈர்ப்பு விசையே காரணமாக உள்ளது.

விண்வெளியில் ஈர்ப்பு விசையே இல்லை என பலரும் கருதுகின்றனர். ஆனால், விண்வெளியில் அனைத்து பகுதிகளிலும் மிகக் குறைந்த அளவிலான ஈர்ப்பு விசை உள்ளது உண்மை.

 

சாக்பீஸ் முழுக்க சுண்ணாம்பு இல்லியாம்

சாக்பீஸ் முழுக்க சுண்ணாம்பு இல்லியாம்


நமது பள்ளிப் பருவத்தில் ஸ்லேட்டில் எழுத ஆரம்பித்த காலம்தொட்டு சாப்பீஸ்கள் முழுக்க சுண்ணாம்பு மூலம் தயாரிக்கப்பட்டவை என சொல்லப்படுவது வழக்கம். ஆனால், அது உண்மை இல்லை. சாட்பீஸ்கள் முழுமையாக சுண்ணாம்பினால் தயாரிக்கப்பட்டவை அல்ல. குறிப்பிட்ட அளவில் சுண்ணாம்பும், அதோடு ஜிப்சம் என்னும் கனிமத்தையும் சேர்த்தே சாட்பீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஜிப்சம்னா என்ன?

ஜிப்சம்னா என்ன?


ஜிப்சம் என்பது இரு நீர் மூலக்கூறுகளால் நீரேற்றப்பட்ட மென்மையான ஒரு கனிமமாகும். ஜிப்சத்தை 100 டிகிரி சேல்சியத்திற்கும், 150 டிகிரி சேல்சியத்திற்கும் இடையில் வெப்பமாக்கும் போது அதில் உள்ள 75 சதவிகித நீர் அகற்றப்படுகிறது. இவ்வாறு பகுதி நீரேற்றப்பட்ட ஜிப்சம் சாட்பீஸ்கள் மட்டுமின்றி பிளேஸ்ட்ரோப்ளேரிஷ், உரங்கள் போன்றவற்றை தயாரிக்கவும், கட்டுமான பணிகளுக்கும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

குரங்குல இருந்து ஒன்னும் மனுசன் வரல

குரங்குல இருந்து ஒன்னும் மனுசன் வரல


குரங்கில் இருந்து பரினாமம் பெற்றே மனிதன் உருவானான் என்ற கோட்பாடு அன்றுதொட்டு இன்று வரையில் நாம் கேட்டிருப்போம். ஆனால், இது உண்மையல்ல. ஒழுக்கத்தோடும், தன் இணத்தோடு இணக்கமாக வாழும் குரங்கில் இருந்து மனிதன் ஒருபோதும் பரிணமித்திருக்க வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.

அப்படின்னா?

அப்படின்னா?


ஆனால், மனிதர்கள் மற்றும் குரங்குகள் இருவரும் சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு பொதுவான மூதாதையர்களிடம் இருந்து உருவாகியிருக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தான் மனித உடலமைப்பும், குரங்கின் உடலமைப்பும் மட்டுமின்றி டிஎன்ஏ ஜீன் ஆய்வுகளும் 90 சதவிகிதம் மேல் ஒன்றை ஒன்று ஒத்ததாக உள்ளது. அடுத்த முறை மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என சொன்னால், குரங்குகள் உங்களிடம் சண்டையிட நேரிடும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
These Facts You Learned in School That Are Actually Lies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X