உலகில் அதிக சம்பளம் கிடைக்கும் டாப் 6 வேலைகள்

உலகில் அதிக சம்பளம் கிடைக்கும் டாப் 6 வேலைகள் என்னென்னன தெரியுமா?

By Gowtham Dhavamani

உங்களுக்கு தெரியும்னு நம்பறேன். இந்த காலத்துல சட்டை மாதிரி வேலைய மாத்திட்டு இருக்காங்க. ஒரே வேலை, ஓகோன்னு வாழ்க்கைன்னு யாராவது சொன்னா சிரிப்பு தான் வருது. நம்ம அப்பா அம்மா ஒரே எடத்துல 10 வருஷம் வேலை செஞ்சுருக்கலாம்.

உலகில் அதிக சம்பளம் கிடைக்கும் டாப் 6 வேலைகள்

ஆனா நாம ஒரே கம்பெனில, ஒரே துறைல பல வருஷம் இருக்கறது சாத்தியம் இல்ல. இதுல நல்ல விஷயம், நீங்க இருக்கவேண்டிய அவசியமும் இல்ல.

இந்த காலத்துல, துறை மாற்றத்தையும் தைரியமா செய்யறாங்க. நல்ல பணம் கிடைக்குதுனா கொஞ்சம் கஷ்டபட மக்கள் தயாரா இருக்காங்க. எந்த துறைக்குள்ள நுழையணும்னு நீங்க விரும்பறீங்களோ, அதுக்கு ஏத்தமாதிரி சில திறமைகள் தேவை.

ஆனா எந்த படிப்பு படிச்சவங்களும், வேலை தெரிஞ்சுருந்தா எந்த வேலை செய்யறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. டாக்டர் மட்டும் விட்டுருங்க. அதுக்கு வாய்ப்புகள் இல்ல. சரி இப்போ வேலை எங்க செஞ்சா நல்ல சம்பாதிக்க முடியும்.

நிதிதிரட்டல் :

நிதிதிரட்டல் :

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் இயங்க கண்டிப்பா பணம் அவசியம். அப்படி இருக்க, அவுங்களுக்கு அந்த அளவுக்கு பணம் சேகரிச்சு குடுக்க முடிஞ்சா, அவுங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு. வெளிநாடுகள்ல இதுக்கு தனியே ஒரு சங்கமே இருக்கு. சாதாரணமா அதுல வேலை பாக்கற ஒருத்தர் ஒரு மாசத்துக்கு 65000 அமெரிக்கா டாலர்கள் ஆரம்ப கட்டத்துல சம்பாதிக்க இயலும். ஆனா நம்ம நாட்டுல இந்த துறை எவண்ட் ஆர்கனைசர்னு வளந்து நிக்குது.

இந்த துறையை பொறுத்த வரைக்கும், நிதியுதவி செய்ய மத்தவங்கள சம்மதிக்க வைக்கணும். அதனால கண்டிப்பா உங்களுக்கு விற்பனைல கொஞ்சம் அனுபவம் இருந்தா நல்லது. கொஞ்சம் அனுபவம் இருந்தா, யார் நிதியுதவி செய்யறாங்களோ அவுங்ககிட்டையும் நீங்க வேலை பாக்க முடியும். மத்தவங்க கிட்ட சுலபமா பழகற குணம் இருந்தா, சிபாரிசு செய்ய முடியும்னா, அந்த அளவுக்கு உங்களுக்கு நட்பு வட்டம் இருக்குன்னா, கண்டிப்பா இந்த துறைல நீங்க முயற்சி செய்யலாம்.

மென்பொருள் பொறியாளர் :

மென்பொருள் பொறியாளர் :

இந்த தலைப்ப பாத்த உடனே உங்க மனசுல ஓடற விஷயம், இது எங்களுக்கு தெரியாதாகிறது தான். ஏன்னா தமிழ்நாட்டுல அவளோ சாப்ட்வேர் என்ஜினியர் இருக்காங்க. ஆனா நாங்க சொல்ல வர விஷயம், இன்ஜினியரிங் படிச்சவங்கதான் சாப்ட்வேர் துறைல சாதிக்க முடியும்கறது இல்லைன்றத. இன்ஜினியரிங் படிச்சு ஐடீ ல போனா லச்சத்துல சம்பாதிக்கலாம்னு யாராவது சொன்ன நம்பாதீங்க. ஏன்னா அங்க தேவைப்படற திறமைகள் வேற. என்ஜினியரா இருந்தாலும், வெளில வந்து கோடிங், கோடிங் லாங்குகவேஜ் தெரியணும், நல்லா பேச கூடிய திறமை இருக்கணும். இருந்தா வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா எந்த பின்னணில இருந்தும் முயற்சி செஞ்சா நீங்க இந்த துறைல நுழைய முடியும். சில நேரத்துல நீங்க நிறுவனத்துல சேந்ததுக்கு அப்பறம் கூட அவுங்களே உங்களுக்கு சொல்லிகுடுத்து வேலை வாங்கிப்பாங்க. அதனால நீங்க செய்யவேண்டியது, அந்த துறைல நுழையுனுமான்னு யோசிச்சு, அடுத்து அதுக்கு தேவையான திறமைகள வளத்துக்கறது.

நிதி ஆலோசகர் :

நிதி ஆலோசகர் :

வாழ்க்கைல அனுபவம் அதிகம் இருக்குனா கண்டிப்பா நீங்க முயற்சி செய்ய வேண்டிய துறை. அதைவிட முக்கியம், நீங்க கவனிக்க வேண்டிய ஆய்வு ஒண்ணு இருக்கு. நிதி ஆலோசகர் சங்கம் நடத்துனது. அதுல 88% துக்கு மேல நிதி ஆலோசகர்கள், துவக்கத்துல வேற துறைல இருந்துட்டு அப்பறம் இந்த துறைக்குள்ள வந்தாங்கன்னு தெரியவந்துருக்கு. எம்பிஏ படிச்சவங்க, பொருளாதாரம் படிச்சவங்கதான் இந்த துறையில வரணும்னு அவசியம் இல்ல. எந்த படிப்பு இருந்தாலும் வரலாம். உங்களுக்கு தேவையானது, எண்கள் சொல்ற விஷயங்களை புரிஞ்சுக்கணும், அதைவிட முக்கியமா மக்கள் கிட்ட சுலபமா பழக தெரியணும். (ஏன்னா உங்கள நம்பி அவுங்க பணத்தை ஒப்படைக்க போறாங்க).

பங்குச்சந்தை பக்கம் போகணும், பரஸ்பர நிதி ஆலோசகர் ஆகணும்னா சில பரீச்சைகள் எழுதி நீங்க உரிமம் வாங்கணும். முதலீடுகள் பத்தியோ, இடர் மேலாண்மை பத்தியோ நீங்க சில காலம் படிச்சிருந்தா, நிதி நிறுவங்கள வேலைக்காக அணுகலாம்.

இந்த துறைல இப்போ புதுசா பல நிறுவனங்கள், தொழில்நுட்பத்தையும் சேர்த்துட்டு வராங்க. அங்கையும் உங்களுக்கான வேலை காத்துட்டு இருக்க முடியும்.
ஒரு துறையை விட்டு இன்னொரு துறைக்கு மாற, சில காலம் போகவேண்டிய துறைய பத்தி ஆய்வுகள் செய்யுங்க. அப்பறம் அந்த துறைல இருக்கற மக்கள்கிட்ட பழக ஆரம்பியுங்க, உங்க திறமைகள வளத்துக்க பாருங்க, இதுலாம் சரியாய் அமையும் போது நீங்க எதிர்பாத்த அந்த வேலையும் உங்களுக்கு அமையும்.

துறை ஆய்வுகள்

துறை ஆய்வுகள்


ஒரு துறையை விட்டு இன்னொரு துறைக்கு மாற, சில காலம் போகவேண்டிய துறைய பத்தி ஆய்வுகள் செய்யுங்க. அப்பறம் அந்த துறைல இருக்கற மக்கள்கிட்ட பழக ஆரம்பியுங்க, உங்க திறமைகள வளத்துக்க பாருங்க, இதுலாம் சரியாய் அமையும் போது நீங்க எதிர்பாத்த அந்த வேலையும் உங்களுக்கு அமையும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Most High paying Jobs in The World!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X