ஆப்ரேஷன் விஜய் பத்தி இந்த விசயமெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

அரசுத் தேர்வுகளுக்கு போட்டியிடுவோர் எளிதில் கண்டறியப்படாத சில அசாத்தியமான கேள்விகளுக்கும் பதில்களை தெரிந்து வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான கேள்வி பதில்களின் தொகு

டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற அரசு வேலைகளுக்கான போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய சூழ்நிலையில் படித்த படிப்பிற்கான சரியான வேலை இல்லாதது ஒருபுறம், மறுபுறம் வாய்ப்புகள் இருந்தும், இதற்கான தகுதியும், திறமையும் உள்ளவர்களைக் கண்டறிவது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. இடைவிடாத முயற்சி நிச்சயம் அரசுதேர்வுகளில் வெற்றியை பெற்றுத்தரும்.

ஆப்ரேஷன் விஜய் பத்தி இந்த விசயமெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

மற்ற வேலைகளைக் காட்டிலும் அரசுத் தேர்வுகளுக்கு போட்டியிடுவோர் எளிதில் கண்டறியப்படாத சில அசாத்தியமான கேள்விகளுக்கும் பதில்களை தெரிந்து வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு இதோ!

எந்த ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது?

எந்த ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது?

1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

முதல் ஆதார் பெற்ற நபர் யார்?

முதல் ஆதார் பெற்ற நபர் யார்?

இந்தியா குடிமக்களின் அடையாளமான ஆதார் திட்டம் நந்தன் நீல்கேனியின் தலைமையில் 2009 பெப்ரவரி மாதம் துவக்கப்பட்டது. இந்திய நாட்டில் முதல் ஆதார் அட்டை பெற்ற நபரின் பெயர் ரஞ்சன் சோனவனே ஆகும்.

தமிழகத்தின் முதல் துணை முதல்வர் யார்?

தமிழகத்தின் முதல் துணை முதல்வர் யார்?

தமிழக துணை முதலமைச்சர் ஒரு கட்டாயமில்லாத ஒன்றாகும். இருப்பினும், தமிழக முதலமைச்சர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியாகத் துணை முதலமைச்சர் பதவி மே 29, 2009 அன்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் முறையாக முக.ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றார்.

ராஜ்ய சபா எப்போது உருவானது ?

ராஜ்ய சபா எப்போது உருவானது ?

இந்தியாவில் மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். இது ஏப்ரல் 03, 1952-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நிலவில் காலடி வைத்த இரண்டாவது நபர்?

நிலவில் காலடி வைத்த இரண்டாவது நபர்?

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார் ? என்று யாராவது உங்களிடம் கேட்டல், உடனே நீல் ஆம்ஸ்ட்ராங் என்று பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால், நிலவில் முதன் முதலில் யார் கால் வைத்திருக்க வேண்டும் தெரியுமா? எட்வின் சி ஆல்ட்ரின். இவர் இரண்டாவதாக நிலவில் கால் பதித்தார். நிலவுக்கு சென்ற அப்பலோ விண்கலத்தின் விமானி இவர்.

முதல் பட்ஜெட் தாக்கல்

முதல் பட்ஜெட் தாக்கல்

இந்தியாவின் முக்கிய அமைச்சகங்களில் ஒன்றாக நிதி அமைச்சகம் உள்ளது. நாட்டின் நிதி விவகாரங்களை இது மேற்கொள்கிறது. குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தவர் சண்முகம் செட்டியார் ஆவார்.

நெருப்பு கக்கும் நெருப்புக் கோழி

நெருப்பு கக்கும் நெருப்புக் கோழி

உலகின் மிகப் பெரிய பறவை ஆஸ்ட்ரிச் எனும் நெருப்புக் கோழி. ஆனால், இந்தப் பறவைக்கும் நெருப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நெருப்புக் கோழி இடும் முட்டையின் விட்டம் சுமார் 170 மி.மீ. ஆகும். இது பறவை இனங்களிலேயே மிகப் பெரிய முட்டை ஆகும்.

டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல்

டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல்

இந்திய பட்ஜெட் தாக்கல் ஒவ்வொரு ஆண்டும் காகித வடிவிலேயே தாக்கல் செய்யப்பட்ட வந்த நிலையில் முதல் முறையாக 2021-ஆம் ஆண்டு காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. இந்தியாவின் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆவார்.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் யார்?

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் யார்?

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி ஆவார். 1917 ஜூலை 1ம் தேதி இமாச்சலில் பிறந்த இவர் 1947 பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு 1951-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் முதன் முதலில் வாக்களித்த நபர் ஆவார்.

இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் யார்?

இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் யார்?

இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அன்னா ராஜம் மல்ஹோத்ரா ஆவார். 1927-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்து மதராஸ் பல்கலைக்கழகத்தில் தன் கல்லூரி படிப்பை முடித்தார். பிறகு 1950-ம் வருடம் இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மெட்ராஸ் மாகாணத்திலேயே பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

அதிக சர்வதேச விமான நிலையங்கள் உள்ள மாநிலம் எது?

அதிக சர்வதேச விமான நிலையங்கள் உள்ள மாநிலம் எது?

இந்திய நாட்டின் அதிக சர்வதேச விமான நிலையங்கள் உள்ள மாநிலம் கேரளா ஆகும். கேரளாவில் தலைநகர் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வநத நிலையில், 4வது சர்வதேச விமான நிலையம் கண்ணூரில் நிறுவப்பட்டுள்ளது.

மிக இளவயது மேயர் யார் தெரியுமா?

மிக இளவயது மேயர் யார் தெரியுமா?

இந்தியாவின் மிக இளவயது மேயர் என்ற சாதனைக்கு உரியவர் ஆர்யா ராஜேந்திரன் ஆவார். 21 வயதான இவர் கேரளாவின் மிகப்பெரிய நகராட்சியான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஆப்ரேஷன் விஜய் எதற்கு பயன்பட்டது?

ஆப்ரேஷன் விஜய் எதற்கு பயன்பட்டது?

கார்கில் போரில் எதிரி நாட்டு இராணுவத்தினரின் ஊடுருவலைத் திரும்பிச் செல்ல பயன்படுத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பெயரே ஆப்ரேஷன் விஜய் ஆகும்.

தமிழகத்தில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதி எது?

தமிழகத்தில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதி எது?

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சோழிங்கநல்லூர் திகழ்கிறது. சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாக இருந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பின் போது சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்வையிடும் மாநிலம் எது?

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்வையிடும் மாநிலம் எது?

நாட்டில் அதிக சுற்றுலாத் தளங்களையும், கலாச்சாரம், சீதோஷனம் உள்ளிட்ட காரணங்களுக்கான அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. கோவில், கலை, குழு குழுவென மலைப் பிரதேசங்கள் என ஏராளமான சுற்றுலாத் தளங்கள் தமிழகத்தில் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The best question bank for the TNPSC, UPSC Exams; Read Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X