ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வாட்ஸ்அப்-பின் அசுர வளர்ச்சியைக் கண்டு பல முண்ணனி சமூக வலைதளங்கள் குலை நடுங்கின. இதன் விளைவு, விட்டால் நாம் அழிந்துவிடுவோம் என்று அஞ்சிய பேஸ்புக் ஒரு முடிவுக்கு வந்தது.

நாம் ஒரு சாதனை பயணத்தை ஆரம்பிக்கும் போது சில நிராகரிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். சில நிராகரிப்புகளுக்கு பின் சேர்வடையும் பலர் தனது பயணத்தை அதோடு முடித்து கொள்கிறார்கள். ஆனால் வெகு சிலரே சாதனைகளுக்கு பின் உள்ள மகத்தான வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்கின்றனர்.

ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில் நிராகரிப்பின் மறுபக்கம்தான் வெற்றியின் உதயம் என தன்னை நோக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த ஒரு சொல் மந்திரத்திற்கு சொந்தகாரரான ஜான் கோம் பற்றி பார்க்கலாம்.

ஜான் கோம்

ஜான் கோம்


ஜான் கோம் உக்கரைனில் பிறந்து, சிறு வயதிலே தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் கலிபோர்னியா மாகாணத்தில் வளர்கிறார். தாய் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணி புரிகிறார். துரதிஷ்ட வசமாக தாய் புற்றுநோயால் பதிக்கப்பட்டதையடுத்து தன் தாயைப் பிரிந்து 1992 ஆம் ஆண்டு தனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார் ஜான் கோம்.

பிரித்து மேயும் ஜான் கோம்

பிரித்து மேயும் ஜான் கோம்


சிறுவயதிலே கம்யூட்டர் மொழிகளின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக கோம். ஜான் ஜோஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்யூட்டரை பிரித்து மேய கற்றுக்கொள்கிறார். இதன் பின் 9 ஆண்டுகள் தொடர்ந்து யாகேவில் பணியற்றுகிறார். இதன் பின் தனது நண்பருடன் இணைந்து மேற்கொண்ட புதிய முயற்சிக்கான வெற்றிதான் வாட்ஸ்அப்.

மறுக்கப்பட்ட வாய்ப்புகள்

மறுக்கப்பட்ட வாய்ப்புகள்


பல்வேறு இடங்களில் வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டதின் விளைவாக வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற ஜான் கோமின் சிந்தையில் தனது நண்பர் மூலம் உதித்ததுதான் இந்த எண்ணம். இன்று பல கோடி மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை நமக்கே தெரியாமல் களவாடும் வாட்ஸ்அப்.

பிரைன் ஆக்டன்

பிரைன் ஆக்டன்


வாட்ஸ் அப் தொடங்க நிதி அளித்த வள்ளல் பிரைன் ஆக்டன், ஜான் கோமின் நண்பர். பிப் 24 ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு புளோரிடாவில் உள்ள மிஷிகான் என்ற இடத்தில் பிறந்தவர். 2007 ஆம் ஆண்டு யாகூவில் இருந்து வெளியே வந்த ஆக்டன் பேஸ்புக் உட்பட பல நிறுவனங்களில் வேலைக்காக ஏறி இறங்குகிறார். 2009 ஆம் ஆண்டு தனது வெற்றிக்கான புது தேடலை தொடங்குகிறார். இதற்கு முன் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை சுமந்தபடி பல முண்ணனி நிறுவனங்களில் புதிய ஐடியாக்களுடன் தனது வேலை தேடும் படலத்தை தொடங்குகிறார் பிரைன் ஆக்டன்.

ஏறாத படிகளே இல்லை

ஏறாத படிகளே இல்லை


டுவிட்டர் நிறுவனத்தில் தனது எதிர்கால திட்டங்களை பட்டியலிடுகிறார். செவிமடுக்கிறது டுவிட்டர். இதோடு விட்டுவிடாமல் பல்வேறு முண்ணனி நிறுவனங்களை அலசி ஆராய்ந்தார். இவர் ஏறாத படிகளே இல்லை என்றே கூட கூறலாம். இதனிடையே பேஸ்புக் நிறுவனத்திலும், தனது படைப்புகளை பட்டியலிட்டு வாய்ப்பு கேட்கிறார் அங்கும் சிவப்பு கொடிதான் காட்டப்படுகிறது.

பில்லியனுக்கும் மேல்

பில்லியனுக்கும் மேல்


இதோடு சோர்ந்து விடாமல் தனது வெற்றிக்கான முனைப்பை கூர்தீட்டிய பிரைன் ஆக்டன், புதிய அத்தியத்திற்கான சரியான நபரை சந்திக்கிறார். தனது அனுபவங்களை கொண்டு 2009 ஆம் ஆண்டு ஜான்கோம், மற்றும் ஆலன் என இரு நண்பர்களுடன் இணைந்து தனது வெற்றிக்கான பிள்ளையார் சுழியை போடுகிறார். ஆம் அது உண்மையிலே வெற்றிக்கான பிள்ளையார் சுழிதான். ஒரு சாதாரண குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டு அதன் பயனாக கிடைத்தது தான் 'வாட்ஸ்அப்'. உலகம் முழுவதும் தற்போது பல கோடி மக்களுக்கும் மேல் பயன்படுத்தி வருகின்றனர்.

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்


வாட்ஸ்அப் வெற்றிக்குப் பின் மலைபோல் பல நிராகரிப்புகள் குவிந்துள்ளன என்றால் மிகையாகாது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்பது போல் எங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ, அந்த நிறுவனத்தையே ஆட்டங்கான வைத்ததுதான்.

குலை நடுங்கிய வலைதளங்கள்

குலை நடுங்கிய வலைதளங்கள்


வாட்ஸ்அப்-பின் அசுர வளர்ச்சியைக் கண்டு பல முண்ணனி சமூக வலைதளங்கள் குலை நடுங்கின. இதன் விளைவு, விட்டால் நாம் அழிந்துவிடுவோம் என்று அஞ்சிய பேஸ்புக் ஒரு முடிவுக்கு வந்தது. ஆம் விலைபேசியது. அன்றைய காலத்தில் இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? பேஸ் புக் நிறுவனத்தின் மதிப்பை விட அதிகம். சுமார் 19 பில்லியன் அமெரிக்க டலருக்கு விலை பேசப்பட்டது.

வரலாற்றை முறியடித்த வாட்ஸ்அப்

வரலாற்றை முறியடித்த வாட்ஸ்அப்


பேஸ்புக் கொடுத்த தொகை ரொம்பவும் அதிகம். இவ்வளவு கொட்டிக்கொடுக்கிற அளவுக்கு வாட்ஸ் அப் ஒன்றும் உச்சாணி கொம்பில் இல்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில், இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதாக வரலாறு இல்லை. இதனால் பேஸ்புக் பங்குகள் அடுத்தநாளே 3.4 சதவீகிதம் சரிந்தது. பின்னர் வர்த்தக முடிவில் இழப்பில் இருந்து மீண்டு சரித்திரம் படைத்தது. நிராகரிப்பின் மறுபக்கம் வெற்றியின் புகழிடம் என்று நிரூபித்தவர்களில் இவர்களுக்கும் ஒரு இடம் உண்டு.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The amazing success story of WhatsApp's founder Jan Koum
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X